பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா பிறந்த தின வாழ்த்துக்கள்

அவுஸ்திரேலியாவிலும் மற்றைய இடங்களிலும் நவம்பர் மாதம் 23ம் திகதி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்  பக்தர்கள் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்  85வது பிறந்த தினத்தை பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்   நிலையங்களில் மிக சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா 1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி இவ்வுலகில் அவதரித்தார். 1940 ஆம் ஆண்டு, அவருக்கு 14 வயதாக இருக்கும் போது, தான் இறையவதாரமென உலகிற்கு தெரியப்படுத்தினார்.

அவரது முதலாவதும் அதிமுக்கியமானதுமான அறிவித்தலானது, “முதலில் உலகியல் வாழ்க்கை எனும் சரித்திரத்தில் நீ இருப்பதைத் தெரிந்து கொள்; அடுத்து அதைக் கடக்க முயற்சி செய்; அடுத்த படியாக உனக்குப் பிடித்தமான ஒரு குருவையோ அல்லது எந்த நாமத்தையும் உருவத்தையும் கொண்ட தெய்வத்தை தெரிவு செய்.

தொடர்ந்து அவர் பெருமைகளைப் பேசு; அவற்றில் வாசம் செய்; உனது மனதையும் சிந்தனா சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி பஜன் பாடு. உனது குருவின் கமலமலர்ப்பாதங்களை போற்றிப் புகழ்ந்து முழு இதயசுத்தியுடன் பாடல்களைப் பாடு. இது கடப்பதற்கு கடினமான பிறப்பு இறப்பு எனும் சூழல் சக்கர சத்திரத்தை கடக்க உனக்கு உதவி செய்யும்.

பகவான் பாபா உலகிற்கான பல செய்திகளில் “மானிட சேவையே மாதவ சேவை'எனவும் அதை தொடர்ந்து “எல்லோரையும் நேசி, எல்லோருக்கும் சேவை செய்' எனவும் அழுத்திக் கூறியிருக்கிறார். மனித இனத்திற்கு அவரது உயர்ந்த போதனைகள் சென்றடைவதற்கு, ஆன்மிகம், சேவை, கல்வி, இளைஞர், பெண்கள் என பல அணிகளை அமைத்து அதன் மூலம் தனது போதனைகளை பரப்பி தர்ம வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறார்.

பகவானின் போதனைகளில் முக்கியத்துவம் வகிக்கும் மற்றுமொரு அம்சம் என்னவெனில் “சைவ உணவைச் சார்ந்த சாத்வீக உணவு' பகவானின் போதனை களில் மற்றுமொரு முக்கிய விடயம் “சமயம் ஒன்று தான் உள்ளது, அதுவே அன்பெனும் சமயம் ஆகும்'.

இச் செய்தி எல்லோருக்கும் தெரியப்படுத்துவது என்னவெனில் பகவான் பாபா பிறிதொரு சமயத்தை ஸ்தாபிக்கவில்லை யென்றும் எல்லோரையும் அந்தக்கரண சுத்தியுடன் உயர் நிலையில் தத்தமது சமயத்தைப் பின்பற்றுமாறு வேண்டுவது மேயாகும்.

பிறந்த தின வாழ்த்துக்கள்.
கு கருணாசலதேவா

2 comments:

kalai said...

பல சாயி பக்தர்களைப் பார்த்திருக்கிறேன். பஜனைகள் எல்லாம் செல்வார்கள். ஆனால் வன்னியில் போரினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள், காயப்பட்டவர்களுக்கு உதவி செய்யக் கேட்டால் பின்னுக்கு நிற்கிறார்கள். புட்டபர்த்திக்கு செல்லும் காசில் 100ல் ஒரு பங்கை இக்குழந்தைகளுக்கு வழங்கினால் நல்லது.

Anonymous said...

paktharkal seyyum thavarukalukku bahavan porupillai. his teachings are preached more than they are practiced enpathey kasappana unmai.