மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண விஜயம்

.
மக்கள் விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்திலும். கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மாத்திரமன்றி முக்கியஸ்தர்கள் பலரும் யாழ்ப்பாணம் போயிருந்தார்கள். இவர்கள் அங்கு சுற்றுலாவுக்குச் செல்லவில்லை. வணக் கத் தலங்களைத் தரிசிப்பதற்காகவும் செல்லவில்லை.

அண்மைக் காலத்தில் பலர் காணாமல் போயிருக்கின்றனர். அரசாங்க படையினர் மேற்கொண்ட மனிதாபிமான இரா ணுவ நடவடிக்கை முடிவடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினை எழுந்திருக்கின்றது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்திடம் பலர் கோரிக்கை விடுக்கின்றார்கள். நல் லிணக்க ஆணைக்குழு வடக்கில் நடத்தும் விசாரணைக ளிலும் இக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

இந்த விடயத்துடனேயே மக்கள் விடுதலை முன்னணி இப்போது யாழ்ப்பாணம் போயிருக்கின்றது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற விண்ணப்ப மகஜரில் கையொப்பங்கள் சேகரிப்பதும் இந்த விடயத்தை மையமாக வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம்.

இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிரான உணர்வலைகளைத் தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டவை என்பது இரகசியமல்ல. எனவே, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண விஜயம் அரசியல் சார்ந்தது; அரசியல் நோக்கத்தை கொண்டது.

மக்கள் முகங்கொடுக்கும் ஏதாவதொரு பிரச்சினைக் கூடாகத் தங்கள் அரசியல் அபிலாஷையை நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகள் முயற்சிப்பது புதிய விடயமல்ல. இது வழமையான நடைமுறை. காணாமல் போனவர்கள் தொடர் பாக வட பகுதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைக் கூடாக அரசியல் லாபம் தேடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முயற்சிப்பதையும் இவ்வாறே பார்க்க வேண்டும்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் யாழ்ப் பாணத்துக்குப் போயிருக்கின்றார்களா என்பது பிரதான மான கேள்வியாக உள்ளது. மக்கள் விடுதலை முன்னணி யின் கடந்த கால நிலைப்பாடுகளிலிருந்து இக்கேள்வி பிறக்கின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை உட்படத் தமிழ் மக்கள் இன்று முகங்கொடுக்கும் சகல உடனடிப் பிரச்சினைகளுக்கும் தோற்றுவாய் இனப் பிரச்சினையே. எனவே, இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் பங்களிப்புச் செய்வது தான் தமிழ் மக்கள் மீதான நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அமையும்.

இனப் பிரச்சினையின் தீர்வைப் பொறுத்த வரையில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைப் பேரினவாத நிலைப்பாடாகவே பெரும்பான்மையான தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள். இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கி மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளுக்கும் மக் கள் விடுதலை முன்னணி கடுமையான எதிர்ப்புத் தெரி வித்தது.

சமஷ்டித் தீர்வையும் எதிர்த்தது. அதிகாரப் பகிர் வையும் எதிர்த்தது. பதின்மூன்றாவது திருத்தம் முழுமை யாக நடைமுறைக்கு வருவதையும் எதிர்த்தது. இவற்றை யெல்லாம் எதிர்த்ததேயொழிய இன்று வரை தீர்வுக்கான மாற்றுத் திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சி னைக்கான தீர்வில் எதிர்மறை நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு காணாமல் போனவர்கள் பற்றி மாத்திரம் பேசுவது தமிழ் மக்களை வென்றெடுப்பதற்கான அணுகு முறையாகாது. குறைந்த பட்சம் ஒரு தீர்வுத் திட்டத்து டனாவது தமிழ் மக்களை அணுக வேண்டும்.

நன்றி தினகரன்

2 comments:

Anonymous said...

தினகரன் ஆதரவளித்து வரும் அரசாங்கக் கட்சிக்காரர்கள், அதனோடு சேர்ந்தியங்கும் குழுக்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திற்குப் போகிறார்கள். அவர்கள் இதுவரை ஏதாவது தீர்வுத்திட்டத்தை தமிழ்மக்கள் முன் வைத்துத் தான் போய் அரசியல் நடத்துகிறார்களா என்ன? நீங்கள் ஏதோ தினகரன் இப்படி தமிழருக்கு சார்பாக எழுதுகிறது என்று இங்கே வெளியிட்டிருக்கிறீர்கள். தினகரனும் இப்போது தமிழ்மக்களுடன் அரசியல் நடத்துகிறது. அதை வைத்து நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள்.

kirrukan said...

[quote]தினகரனும் இப்போது தமிழ்மக்களுடன் அரசியல் நடத்துகிறது. அதை வைத்து நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள்[/quote]

அரசியல் வேறு தமிழ்மக்களின் பத்திரிகை வேறு என்றுடமிழ்முரசு ஆசிரியர் குழு நினைக்கினம் போல(