உண்மை கலந்த நாட் குறிப்புகள் நூல் விமர்சனம் - பராசக்தி சுந்தரலிங்கம்


ரஸவாதம்யாழ்ப்hணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர். இப்பொழுது அவர் கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய ~உண்மை கலந்த நாட்குறிப்புகள்
(சுயசரிதை) என்னும் நூலைச் சமீபத்திலே வாசித்த போது நல்லதோர் அனுபவப் பதிவைப் படித்த மனநிறைவு ஏற்பட்டது.

இந்நூலிலுள்ள சில பகுதிகளை திண்ணை, உயிர்மை, உயிரோசை, பதிவுகள் போன்ற இணையத் தளங்களிலே ஏற்கனவே வாசித்திருந்த போதும், எல்லாவற்றையும் ஒன்றாக வாசிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனி - பூக்கள் தனித்தனியாக இருக்கும், அவற்றைக் கோர்த்தவுடன் மாலையாவது போல - ஒரு முழுமையான வடிவம் வந்துவிடுகிறது.

இந்த நூலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால் அது தற்செயலானது.

என்ற விளக்கத்துடன் கதையைத் தொடங்குகிறார்.

என்னுடைய அப்பழுக்கற்ற ஞாபகசக்தியில் நம்பிக்கை வைத்துத்தான் எழுதத் தொடங்கினேன். ஆனால் எழுத ஆரம்பித்த பின் பல குழப்பங்கள் ஏற்பட்டன. டேவிட் பெனியோவ் என்னும் அமெரிக்க எழுத்தாளருக்கு இப்படியான சிக்கல் ஏற்பட்டபொழுது, அவருடைய பாட்டனார் கூறியது எனக்கும் கைகொடுத்தது, ~டேவிட் நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பும். அதுதானே உன் வேலை
.
இந்த ~இட்டு நிரப்பும்
கலையால் எங்கே உண்மை முடிகிறது, எங்கே புனைவு தொடங்குகிறது என்பது வாசகருக்குக் குழப்பமாக இருக்கிறது! ஆனாலும், எல்லாமே உண்மை என்பதிலும் ஐயமில்லை! சுவை குறையாமலிருப்பதற்காகச் சிலவற்றை மிகைப்படுத்தி யிருக்கலாம்! எழுத்தாளனை இனங்காட்டுவது இந்தக் கலைதானே. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தொக்குநிற்கும் பல செய்திகள், வாசகனுக்குச் சவாலாகவும் விளங்குவதைப் பார்க்கலாம். இப்படி எழுதுவது ஆசிரியரின் தனித்துவமான கலை.

ஐந்து வயதுச் சிறுவனாக அம்மாவின் அரவணைப்பில் அப்பா, சகோதரர் களுடன் மாட்டுவண்டியில் கோயில் திருவிழாவுக்குச் செல்வதோடு கதையை ஆரம்பிக்கிறார். சன நெரிசலிலே அம்மா ஒருபக்கம், பிள்ளைகள் ஒருபக்கம் பிரிவதும், கதறுவதும், பின்னர் சேருவதும,; என்று அந்த அனுபவம் விரியும் போது, அந்தப் பிஞ்சு மனதிலேற்பட்ட ஏக்கம், பயம், திகில், இன்றும் நிலைத்திருப்பது போன்ற பிரமைi ஏற்படுகிறது.

சப்பரம் மேற்கு வீதியில் திரும்பி வடக்கு வீதிக்குள் நுழைந்து கொண்டிருந்தது, ஒரு சன வெள்ளம் அலைபோலத் திடீரென்று கிளம்பி அடித்தது. எங்கள் கால்கள் மெல்ல மெல்ல நிலத்தி லிருந்து கிளம்பின. நாங்கள் சனத்திரளின் மத்தியில் மிதக்கத் தொடங்கினோம். என்னுடைய கண்கள் அண்ணாந்து பார்ப்பதை நிறுத்திவிட்டு நிலத்தையே பார்த்தன. அங்கே எல்லாம் கால்களாகவே தெரிந்தன. திடீரென்று கால்கள் நாலாபக்கமும் ஓடத் தொடங்கின. சிலர் கீழே விழ, ஓடிய சனங்கள், அவர்களை மிதித்துக்கொண்டே ஓடினார்கள். தண்ணீரில் அடிபட்ட ஒல்லித் தேங்காய் போல வெகு து}ரத்துக்கு அப்பால் கரையொதுங்கினோம்.

என்று எழுதிக்கொண்டே செல்கிறார்.

பாடசாலைப் பருவம், பல்கலைக்கழக மாணவர் உலகம், பின்னர் உத்தியோக வாழ்க்கை, அதன் பின்னர் பணி நிமித்தம் பிற நாடுகள் பலவற்றில் பெற்ற புதுமையான அனுபவங்கள் என தொடரச்சியான படிமுறையில் கதை நகர்கிறது. பாகிஸ்தான், ஆபிரிக்கா போன்ற நாடுகளின் வியப்பான பண்பாடுகள், அவற்றின் பாதிப்பு, ஆசிரியரின் நுட்பமான பார்வையில் வாசகரை ஈர்த்துவிடுகிறது.

இளமைக் காலம், முக்கியமாகப் பாடசாலை அனுபவம், எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும், தேர்ந்த ஓர் எழுத்தாளனின் கைகளில் இவை பெறும் வடிவமே வேறு. இங்கேயும் ~இட்டு நிரப்பு
நிறையவே கைகொடுத்திருக்கலாம்.

நல்லதொரு மகனாக, சகோதரனாக, கணவனாக, தந்தையாக, பேரனாக, எல்லாவற்றிற்கும் மேலாக, நல்லதொரு மானிடனாக வாழ்வின் அனுபவங்களைப் பகிர்வது இதமான வாசிப்பு. இன்று ஒரு தத்துவவாதியாக, தனது பிற்காலத்தில், வாழ்க்கையைப் பின்னோக்கி அசைபோடும் அவர், எழுத்துலகில் வலம் வருவது மனித வளர்ச்சியின் உன்னதம். ~MAN MUST EVOLVE

என்ற பரிணாமத்தை இவருடைய எழுத்திலே தரிசிக்க முடிகிறது.

அம்மாவின் அதீதபாசம், அவர் காட்டும் நிதானம்@ பிள்ளைகள் பிழைவிடும் போது, அவர்களைத் தண்டிக்காது தனது தலையிலே அடித்துக்கொள்ளும் புதுமைiயான பாசமிகு அப்பா@ சகோதரர்களுக்காகவே தனது வாழ்வை மெழுகுவர்த்தியாக உருக்கிய அண்ணா@ என்று குடும்ப உறவுகளின் பாசம் மனதை நெகிழ வைக்கிறது.

பள்ளிக்கூடப் பருவம் ஒருவரின் வாழ்வில் மறக்கமுடியாத காலம். அதனாற்தான் போலும் அவரது பாடசாலை அனுபவங்கள், பல அத்தியாயங்களிலே சுவையாக விரிகின்றன. நண்பர்களிடையே ஏற்படும் நட்பு, சண்டை, போட்டி, பொறாமை, நம்பிக்கைத் துரோகம், மேலும், ஆசிரியர் மாணவர் உறவு, ஆசிரியர்களிடையேயுள்ள போட்டிகள், புரிந்துணர்வற்ற ஆசிரியர்களால் அழிந்துபோன மாணவரின் வாழ்க்கை என்பன, வாசகர்களையும் அவர்களது பாடசாலைக் காலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

பாடசாலைக் கட்டிட நிதிக்காகக் கொழும்புக்குக் கலை நிகழ்ச்சி நடத்த வந்த கதை சுவையானது. யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றிலிருந்து முதன் முதலில் கொழும்புக்கு வரும் சிறுவன், கழிவறையிலே மேலே தொங்கும் ஒரு சங்கிலியைப் பிடித்து இழுத்ததும், குபுகுபுவென்ற ஓசையுடன் தண்ணீர் அடித்தவுடன் மிரண்டுபோய்ச் சுவரோடு ஒட்டிக்கொண்டு நிற்பது, மிகவும் நுட்பமான வர்ணனை. ~இந்தத் தண்ணீர் எங்கே போகிறது
என்ற கேள்விக்கு, ~இந்து சமுத்திரத்திற்குள் கோகிறது
என்ற விடை, சிறுவனை மேலும் குழப்புகிறது. ~பூமிசாஸ்திரம் படிப்பித்த சுப்பிரமணியம் மாஸ்டர், இதுபற்றி ஒன்றும் சொல்லித் தரவில்லையே
என்ற பகுதி ரஸிக்கும்படியாக இருக்கிறது.

தொடர்ந்து அவர் கூறுவுதைப் பார்ப்போம்:

புதிய கட்டிடத்திற்குப் போதிய பணம் சம்பாதித்துக்கொண்டு நாங்கள் திரும்பினோம். பள்ளிக்கூடப் புழுதித்தரை சீமேந்தாக மாறியது. ஓலைக் கூரை ஓட்டுக் கூரையாகியது. பெரிய அட்டைப் பெட்டிகளிலே அடைத்துக் கிடந்த விஞ்ஞானக் கருவிகள் எல்லாம் சோதனைக் கூடத்தில் அடுக்கப்பட்டன. புதிய மஞ்சள் கட்டடத்தின் ஒரு சுவரிலேர், ஒரு செங்கல்லிலோ, ஒரு து}ணிலோ, என் பாட்டுச் சாதனைக்கான அத்தாட்சி இன்றுவரை ஒழித்திருக்கும்.

கல்விக்காகத் தமிழனின் கதை இது.

தான் முதல் முதல் சைக்கிள் ஓடப் பழகியபோது, கீழே விழுந்த ஒரு சாதாரண நிகழ்ச்சியைக்கூட ஒரு சாகசமாக வர்ணிக்கும் திறனை இவரின் எழுத்திலே பார்க்கலாம்.

நான் நிலத்தை அடைந்தேன், சைக்கிளுக்கு இது தெரியாது. அது தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. முதலாவது ஈராக் போரை ஆரம்பித்து வைத்த மூத்த புஷ் (Bush Snr.) தனது எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட ஆகாயத்திலிருந்து பாரசூட்டில் குதித்தார். அது போல நானும் குதித்தேன். இருண்டு பேர் சாகசமும் ஒன்று, உயரம்தான் வித்தியாசம்.

~நான் தயார்
என்னும் பகுதியல், விஞ்ஞான வளர்ச்சியில் பொருள்கள் மாறும் வேகத்தைப் பதிவு செய்வதிலும், மர்றாத எமது புட்டுக்குழல் பற்றிக் கூறுவதிலும், நகைச் சுவை சொட்டுகிறது.

எல்லாம் அசுர வேகத்தில் மாறுகின்றன. தொலைக்காட்சி மாறுகிறது. ரேடியோ மாறுகிறது. டிவிடி பெட்டி மாறுகிறது. மாறும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடவேண்டியிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது புட்டுக்குழல் ஒன்றுதான்! விஞ்ஞானத்தை நிறுத்திவைக்க முடியாது. அதன் வளர்ச்சிக்கு என்னைத் தயார் செய்வதுதான் ஒரே வழி. என்னையும் என்னைச் சுற்றியிருக்கும் பொருட்களையும் நான் மாற்றிக்கொண்டே இருக்க வேணும். கம்ப்யூட்டர் விசயத்தைக் கேட்கவே வேண்டாம். இதைப்பற்றி எல்லோரும் எழுதிவிட்டார்கள். செல்பேசி வாங்கவே முடியர்து. ஆயிரம் வகைகள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து ஒன்றை வாங்க அரைநாள் பிடிக்கும். அந்த அரைநாளில் ஒருபுதிய மொடல் வந்து சேர்ந்து விடும்.

அக்காவின் சங்கீத வகுப்பு ஆகட்டும், நண்பனின் ரேடியோ நிகழ்ச்சி ஆகட்டும், எல்லாமே அங்கதம் கலந்த நகைச்சுவையுடன் கூடிய வர்ணனை@ சில இடங்களிலே ~நக்கலாகவும்
இருக்கும். ~அஸ்வமேத யாகம்
என்னும் பகுதியில் மகளின் விரலைக் குதிரை கடித்த நோவின் வேதனையிலும் இவருடைய ரசனைக்குக் குறைவில்லை. தமிழ் எப்படி வளைந்து கொடுக்கிறது! தமிழிலே இப்படி எழுத, வர்ணிக்க முடிகிறதே என்ற வியப்பு ஏற்படுகிறது.

பழந் தமிழ் இலக்கியத்திலே ஆசிரியருக்கு இருக்கும் பரிச்சயம்@ பொருத்தமான இடங்களிலே அதைக் கொண்டுவந்து சேர்ப்பது@ பழமைக்கும் புதுமைக்கும் போடும் முடிச்சு@ இங்கே கம்பரையும், அவ்வையாரையும் பார்க்கிறோம். ~கைக்கிளை
, ~படிக்காசு
, ~மற்றுப் பற்றெனக்கின்றி
போன்ற தலைப்புகள் சங்ககாலத்தையும், திருமுறைகளையும் நவீன காலத்துடன் இணைத்துப் புதுமை சேர்க்கின்றன.

1958ம் ஆண்டு தமிழ் மக்களின் வாழ்வில் சோகம் படிந்த காலம். அகதி முகாமில் தங்கியதுகூட இவருடைய எழுத்திலே பெறும் வடிவம் தனித்துவமானது.

யாரோ போட்டு முடித்துத் தானமாகக் கிடைத்த இரவுச் சட்டையை, நான் பல தேசத்திற்கும், பல வருடங்களாக, ஒரு ஞாபகத்துக்காகக் காவித் திரிந்தேன். நான் வளர்ந்து பெரியவனாகி அந்தச் சட்டையை நிரப்புவேன் என்று நினைத்தேன். அது நடக்கவே இல்லை.

இந்த வார்த்தைகளிலே தொக்கி நிற்பது என்ன?

அராமிக் என்னும் மொழியைப் பேசுகின்ற ஒருவரை ஆசிரியர் சந்திக்கின்றார். அவர் கனடாவிற்கு அகதியாக வந்து, அதன் சுதந்திரக் காற்றை அனுபவிக்கிறார். அதுவரை அராமிக் மொழி பற்றி இவர் கேள்விப் பட்டிருக்க வில்லை.

ஒரு மில்லியன் மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். எங்களுக்கென்று ஒரு நாடு கிடையாது. நாங்கள் உலகெங்கும் சிதறிப் போயிருக்கிறோம். நாடு இல்லாதபடியால்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால்தானே இறந்துபோன ஹிப்ரூ மொழி உயிர் பெற்றது. அந்த நாடு இஸ்ரேல். அவர்களுடைய மொழி இனிமேல் அழியாது. நான் இரவு நேரத்தில் சுவர்களுடன் அரமிக்கில் பேசுவேன். நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய மொழியை அழிய விடுவோமா? இது யேசு பேசிய மொழி அல்லவா.

என்று இவர் கூறிய இந்தப் பதிவு மனதில் ஏற்படுத்தும் தாக்கம் பாரியது!

ரொபின்சன் குரூசோ - ROBINSON CRUSOE - வின் கதையை நாமெல்லோருமே வாசித்திருக்கிறோம். கப்பல் விபத்தில் மனித சஞ்சாரமற்ற தீவொன்றில் ஒதுங்கி, பல வருடகாலம் வாழ்ந்து வந்தவன்.

அவனுக்கு விலங்குகள், பாம்புகள் என்று எதற்கும் பயமில்லை. ஒரு நாள் கடற்கரையில் மனிதக் காலடியைக் கண்டு மிரண்டு போகிறான். பீதி பிடித்து நடுங்குகிறான். அப்போது எனக்கு ஓர் உண்மை துலங்கியது. மனிதனுடைய உண்மையான எதிரி இன்னொரு மனிதன்தான். நாங்கள் ரயிலில் போகமுடியாமல், அகதிமுகாமிலிருந்து கப்பலில் போனதற்குக் காரணம் இன்னோரு மனிதனிடம் எங்களுக்கிருந்த அச்சம்தான்.

என்ற ஆசிரியரின் எழுத்திலுள்ள உண்மை, இன்றும் நம் மனதில் எழும் பல கேள்விகளுக்குச் சுலபமாக விடை அளித்துவிடுகிறது! இதைப் பார்த்தபோது, 2400 கி. மீ. நீளமுள்ள சீனப் பெருஞ்சுவர் அதிசயிக்கத் தக்க சாதனையாக இருந்தாலும், மனிதன் மற்ற மனிதன் மீதான பகைமையின் நிமித்தமும், தற்பாதுகாப்பின் நிமித்தமும் இதனைக் கட்ட நேர்ந்தது என வரலாறு கூறுவது நினைவுக்கு வருகிறது.

ஆபிரிக்க மண்ணிலே அவர் சந்தித்த சோகம் - தனது வயதான நோயாளித் தாயாரைச் சுமந்தபடி வைத்தியத்திற்காக மிதவையிலே சக பிரயாணிகளோடு செல்லும் ஒரு மகன், ஆசிரியரின் கண்முன்னாலேயே, பாதி வழியில் தாயை இழப்பதையும்@ பின்னர் அதே மிதவையில் அந்த உடலைத் தோளிலே சுமந்தபடி மறுகரைக்குத் திரும்புவதற்காக வரிசையில் நிற்பதும்@ அந்தத் தாய் சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் திணறியபடி உயிர் பிரிந்த காட்சியும@; மனதை உலுக்கும் அனுபவம். சக பிரயாணிகள், தங்கள் அவசர உலகில் இதனைக் கண்டுகொள்ளாமல் தத்தமது வழிகளில் செல்வதுதான் பெரிய சோகம். இப்பதிவிலே ஆசிரியரின் மனிதநேயத்தின் ஆழத்தை உணரமுடிகிறது.

பாகிஸ்தானியக் கிராமம் ஒன்றிலே சகோதரன் செய்த குற்றத்திற்காக, குற்றமற்ற சகோதரியை நாலு ஆண்கள் வல்லுறவுக் குட்படுத்தும் தண்டனை - அப்பப்பா! அந்தக் கொடுமையிலிருந்து பொங்கி எழுந்து நீதி கேட்டுப் போராடி வெல்லும் பெண்ணின் துணிச்சலை, ~அம்மாவைச் சாப்பிட்டேன்
என்ற பதிலில் பார்த்து வியப்படைகிறோம். பின்னர் தனக்கு வெகுமதியாகக் கிடைத்த பரிசுப் பணத்தில், அவள் படிப்பறிவுற்ற தனது கிராமத்திலே இரண்டு பாடசாலைகளைக் கட்டி, உலகத்தின் பார்வையில் உயர்ந்துவிடுகிறாள். உலகில் பெண்கள் படும் துயர் திரு முத்து லிங்கத்தின் எழுத்தில் மனதைப் பாதிப்பதை தவிர்க்க முடியாது.

அதிகாலை ஐந்து மணிக்கு அம்மா அடுப்பு மூட்டினால், அது அணையாமல் இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் எரியும். அல்லது புகைத்துக் கொண்டிருக்கும். அவர் சுவாசப் பையை யாராவது ஆராய்ந்திருந்தால் அதற்குள் பிராண வாயுவிலும் பார்க்க அதிகமாகப் புகையே இருந்திருக்கும்.

என்னும் வரிகளில் தொக்கி நிற்கும் சோகத்தை எல்லா அம்மாக்களின் பிள்ளைகளும் அனுபவிக்கிறோம்.

நூலாசிரியர் மிகச் சிறிய வயதிலேயே தாயாரை இழந்ததினாற்போலும், நு}ல் முழுவதுமமே அந்தச் சோகம் ஒரு சரடுபோலப் பின்னிப் பிணைந் திருப்பதைப் பார்க்கலாம். இந்த நு}லை அவர் தன் வாழ்வில் நிறைந்திருக்கும் எல்லாப் பெண்களுக்கும் - அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள், பேத்தி - சமர்ப்பணம் செய்கிறார்.

~உலகத்துக் கவலைகளையெல்லாம் ஆண் சுமக்கிறான், ஆணைப் பெண் சுமக்கிறாள்
என்னும் ஆபிரிக்கப் பழமொழியை இந்நு}லின் முகப்பிலே இணைத்திருப்பது ஆசிரியரின் ஆழமான பார்வை.

இந்நூலிலுள்ள சிறப்புகளைக் கூறும் வேளையில், சில நெருடல்களையும் குறிப்பிட வேண்டும். திரு முத்துலிங்கம் அவர்கள் 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து பணியின் நிமித்தம் வெளிநாடு சென்றார். தனது வாசிப்புப் பழக்கத்தைக் கைவிடவில்லை என்கிறார். ஆனால் தொடர்ந்து ஆங்கில நு}ல்களையே வாசித்ததாகக் குறிப்பிடுகிறார். இன்று போல ~இணையத் தமிழ
; அன்று இருக்கவில்லை. மேலும், அவர் வாழ்ந்த நாடுகளில் தமிழ் நு}ல்களைப் பெறுவதற்கு முடியாமல் இருந்திருக்கலாம். இதனாற் போலும் அவருடைய ஆங்கில மொழிச் சிந்தனை, மொழி, வசன அமைப்பு என்பன அவருடைய தமிழ் எழுத்திலே பாதிப்புச் செலுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அத்துடன் இந்நு}லை அவர் ~நாவல்
என்று முன்னுரையில் கூறுகிறார். இதை எப்படி நாவல் இலக்கியத்துள் அடக்கலாம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கான விடையையும் அவர் விளக்குகிறார். இங்கும் அவருடைய ஆங்கில வாசிப்பின் தாக்கத்தை உணரமுடிகிறது.

இருதாம் நூற்றாண்டின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு கட்டுரை இலக்கியம். TRUMAN CAPOTE> NORMAN MAITER போன்றவர்கள் கட்டுரை இலக்கியுத்தை உயரத்துக்குத் து}க்கிச் சென்றார்கள். கட்டுரை என்றும் இல்லாமல் முழுப்புனைவு என்றும் இல்லாமல் இரண்டுக்கும் உள்ள இடைவெளியில் படைத்தார்கள். ~THE EXECUTIONER’S சாங் என்ற உண்மைக் கதை, ~நாவலுக்கு முதல் முறையாக புலிட்சர் பரிசு கிடைத்தது. இலக்கிய வாசர்களுக்கு இது முற்றிலும் புதுமையான விருந்து என்கிறார்.

அம்புலி மாமாவில் ஆரம்பித்த வாசிப்பு ஆர்வம் பல புத்தகங் களையும், பல நாடுகளையும் கடந்து இன்றும் தொடர்கிறது. அவை தரும் வாசிப்பு இன்பமும் கூடுகிறது. புத்தகத்தில் உண்மையான பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று இருக்காது. என்னுடைய எஞ்சிய வாழ்நாள் மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. அபூர்வமான ~சொற்றொடர்
, ~வசனங்கள்
வரும் போது, ~என்ன அமைப்பு
, ~என்ன நுட்பம்
, இது எனக்குத் தோன்ற வில்லையே என்று எனது தலையிலே அடித்துக் கொள்வேன்.
என்று ~மற்றுப் பற்றெனக்கின்றி
என்னும் பதிவிலே சொல்கிறார். இந்தக் கட்டுரையோடு இந்நு}லை நிறைவு செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

பெற்றார், சகோதரர், நண்பர், என்று அவரைப் பற்றி எழுதும்போதும், அவர்களுடைய நிறைகளைக் கூறும் அதேவேளை ~தயவு தாட்சண்யமின்றி
அவர்களின் குறைகளையும் ஒளிவு மறைவின்றிக் கூறிவிடுகிறார். ஆனால், அப்படி எழுதும் போது வாசகர்களும் அவற்றை ஏற்றுக்கொண்டு ரசிக்கும் வகையில் மிகவும் பண்புடனும், அக்கறையுடனும், நகைச்சுவையாகவும் ~நாகரிகமான
முறையில் எழுதுவது இவரின் சிறப்பு (refined என்று சொல்லலாம்).

ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுந்து, எந்த ஒரு சிறிய நிகழ்வையும் ஒரு மர்மமான ரஸவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றிவிடும் அவர், நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார்,

என்ற வாசகம், ~உண்மை கலந்த நாட்குறிப்பு
களின் பின் அட்டையில் காணப்படுவதைப் பார்த்த போது, இதைவிட வேறென்ன கூறவேண்டும் எனத் தோன்றுகின்றது.

புல்லை நகையுணர்த்தி
பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி
நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி
விந்தை செய்யும் ~ரஸவாதம்

இந்நூலாசிரியரின் எழுத்து
என பாரதியாரின் வார்த்தைகளை மாற்றலாமா?
பாரதியார் மன்னிப்பாராக!

நன்றி கலப்பை

3 comments:

kalai said...

விமர்சனத்தை படிக்கும் போது புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

kiri said...

நல்ல வேளை ஊரில் சனம் கஷ்டப்படும் போது புத்தக விமர்சனமா என்று கலை அவர்கள் இம்முறை கவலைப்படவில்லை

Ramesh said...

நானும் ஒரு அ.மு வின் ரசிகன் அவரின் எழுத்து நடையை ரசித்து வாசிப்பவன். ஆனால் இந்த நாவலை இன்னும் வாசிக்கவில்லை.நாவல் பற்றிய பரா வின் விமர்சனத்தையும் அவரின் எழுத்து நடையையும் இன்னும் மேலாக ரசிக்கக் கூடியதாக இருந்தது.