ஆன்மீகம்

.
தொண்டரடி பொடி ஆழ்வார்

இந்த வாரம் 12 ஆழ்வார்களுள் அடுத்த ஆழ்வாரான தொண்டரடி பொடி  ஆழ்வாரை பற்றி காண்போம்.  பெரியாழ்வரின் குமாரியான ஆண்டாளின் பெருமையை புனிதமான மார்கழி  மாதத்திர்க்கு முன் பார்ப்போம்.
தொண்டரடி பொடி ஆழ்வார் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளால் மண்டங்குடி  என்னும் ஊரில் கலியுகம் 289 ஆம் ஆண்டில் ஒரு அந்தணர் குலத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர்விப்ர நாராயணன்” என்று பெயர் சூட்டினார். இவர் பகவானின்வைஜயந்தி மாலையின்” அம்சம் ஆவார். விப்ர நாராயணன்  தக்க வயதில் கல்வி கேள்விகளிலும், வேத சாஸ்திரங்களிலும் தேர்ச்சி, பகவத் பக்தியிலும் , பாகவத சேவையிலும் சிறந்து விளங்கினார்.

இவர் திருவரங்கம், பூலோக வைகுண்டம் என்று எல்லாம் கொண்டாடபடும்ஸ்ரீரங்கம் என்று  இன்றும் அறியப்படும்  ஊரில்  பகவானுக்கு கைங்கரியம் செய்ய ஒரு அழகிய நந்தவனம் அமைத்து அதில் பகவானுக்கு  உகந்த மலர்களை  வளர்த்து, மாலை தொடுத்து அந்த அரங்கனுக்கு  சாற்றி  மகிழ்தார். இவர் தன் ஒரு ஒரு நாளையும் அரங்கனின் சேவைகாகவே அர்பணிதார்.
இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும் கைங்கரியமே கண்ணாக  இருந்தார்.  இப்படி இருந்த பக்திமானின் வாழ்விலும் தடம் புரள ஒரு சம்பவம்  நேர்ந்தது.
திருக்கரம்பனூர் என்னும் ஊரில் தேவி, தேவதேவி என்று சகோதரிகள்  இருவர் இருந்தனர்இருவரும் ஒரு முறை உறையூர் மன்னன் முன் ஆடிப் பரிசில் பெறுவதற்காக வந்திருந்தனர்.
பரிசில் பெற்றுவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் வழியில், திருவரங்கப் பெருமானை தரிசிக்க  அத்திருத்தலத்திற்குச் சென்றனர். அப்பொழுது, அங்கிருந்த பூங்காவனத்தின் அழகும், அமைதியும் அவர்கள் இருவரையும் மிகவும் கவர்ந்தது. நாம் இப்பொழுது இருப்பது பூலோகத்திலா? இல்லை, இந்திரலோகத்திலா என்று அதிசயித்து, இந்த அழகிய நந்தவனம் எவருக்கு சொந்தமானது? என்று வியந்தனர்.
பின் 'இது விப்ர நாராயணர் என்னும் மிகப்பெரிய விஷ்ணு பக்தன் உருவாக்கியது. அவர் இறைவனுக்கு நாள்தோறும் பூமாலை அணிவிப்பதற்காகவே இதை உருவாக்கினார்,' என்று அறிந்த பின்னர் அவரை பார்க்க  ஆவல்  பெருகியது.
இருவரும் அவரைக் காண அவர் குடிலுக்குச் சென்றனர். அங்கே அவரின் அழகைக் கண்டு  இருவரும் மயங்கினர். முதல் பார்வையிலேயே, தேவதேவி விப்ர நாராயணரை விரும்ப ஆரம்பித்தாள்.
விப்ர நாராயணரிடம் தானும் அந்த பகவானுக்கு கைங்கரியம்  செய்ய அனுமதி வேண்டினாள். சுபாவத்திலேயே நல்ல குணம் உடைய விப்ர நாராயணன்  தேவ தேவியின் உண்மையான குறிக்கொள் அறியாமல் அவள் வீசிய வலையில் சிக்கி கொண்டார். பல காலம் பகவானுக்கு புஷ்ப கைங்கரியம் குறைவில்லாமல் நடந்தது.
தேவதேவியின் அன்பில் விப்ர நாராயணரின் மனம் மெதுமெதுவாக தேவதேவியின் பக்கம் திரும்பியது. சிறின்பத்தில் மூழ்கி  பகவான் சேவையை மறந்தார்.  இப்படி  இருந்த விப்ர நாராயணனை ஆட்கொள்ள அந்த பகவான்  திரு உள்ளம் கொண்டார்.
விப்ரநாராயணர் தாசி வலையில் சிக்கி தன் சிறப்பையும், செல்வதையும் இழந்த பிறகு தேவ தேவி அவரை வெறுப்பதை  கண்டு வியந்து போனார்.
அந்த நேரம், அந்த பகவான்  தன் பக்தனை ஆட்கொள்ள எண்ணி, வேலை ஆள் போல் மாறி தேவ தேவியிடம் அந்த அரங்கன்  பூஜை  பாத்திரமான பொன் வட்டிலை  கொடுத்து சென்றார்.
பொன் வட்டிலை கண்டதும், தேவ தேவி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்.  
மறு நாள் கோவிலில்  தட்டு  காணாமல் போன  செய்தியை அறிந்த அரசன், விப்ர நாராயணன் தேவ தேவிக்கு அந்த வட்டிலை கொடுத்ததாக தவறாக புரிந்து கொண்டு  மிக்க கோபத்தோடு இருவரையும் சிறை வைத்தான்.
விப்ர நாராயணன்  திருஅரங்கன்  சேவையை விட்டு தேவ தேவியின் மோக வலையில் சிக்கி கைங்கரியத்தை விட்டதை எண்ணி மிகவும் மனம் நொந்தார்.
அந்த பக்த ரக்ஷகனிடம்  மனம் உருகி தன் பிழையை பொறுத்து அருள வேண்டினர்பக்தன்  ஒரு அடி வைத்தால் 10 அடி பக்தனை நோக்கி வைக்கும் அந்த அரங்கன், உடனே அரசன் கனவில் தோன்றி விப்ர நாராயணன் குற்றமற்றவர்  என்று,  அவரை விடுதலை செய்ய பணித்தார். அரசனும் பகவானின் ஆணை படி அவரை விடுவித்தான்.
அதன் பின், அவர் திருவரங்கத்திலே இருந்த எம்பெருமானின் பக்தர்கள் எல்லோர் அடி பணிந்து, தொண்டு புரிந்தும், அரங்கனுக்கு மீண்டும் பூமாலை பாமாலை கைங்கரியம் செய்ய தொடங்கினார்.
இப்படி பகவதர்கள் அடி பனித்தும், அவர்களுக்கு இதை விடாது தொண்டு புரிந்தும், அவர் வாழ்வே தான் வாழ்வு என்று அவர் உள்ளம் மகிழ தொண்டு புரிந்து வந்ததால் அவரை " தொண்டர் அடி பொடி ஆழ்வார்" என்று அழைத்தனர்.
மேலும் இவர் அந்த பக்த ரக்ஷகனின் கல்யாண குணங்களை எல்லோரும் அனுபவிக்க பகவானை துயில் எழுப்பும் 10திருபள்ளியெழுச்சி”, மற்றும் “திருமாலை” 45 திவ்ய பாசுரங்களையும் அருளி அந்த பகவான் திருவடி அடைந்தார்.
இவர் பாடிய பாடல்களில் மிகவும் பிரசித்தியான திருமாலை பாடலை பற்றி பார்ப்போம்.
பச்சைமா மலைபோல் மேனி பவள வாய் கமலசெங்கண்
அச்சுதா! அமறரேறே ! ஆயர்தம்  கொழுந்தே! என்னும்
ஈசுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அக்ச்சுவை பெரிதும் வேண்டேன் அரங்கமா நகருளானே! -- [திருமாலை ]
இந்த எளிய தமிழ் பாடலில் ஆழ்வாரின் தூய பக்தி வெளிப்படுகிறது.
பச்சை மாமலை போல மேனியையும், பவளம் போன்ற வாயும், தாமரை போல் கண்களும் உடைய அரங்கனை அனுபவிக்கும் சுகத்தை விட இந்திர லோகம் ஆளும் பதவி கொடுத்தாலும் பெரிதாக  வேண்டாம் என்று மறுக்கிறார். பகவானின் கல்யாண ரூபதையும் அவன் குணத்தையும் அனுபவித்து அதன் மஹிமையை பாடுகிறார்.
ஆழ்வாரின் வாழ்க்கையில் இருந்து இந்த உலகில் மாய வாலை மிக்க சக்தி வாய்ந்தது. அதில் இருந்து தப்பிக்க அந்த பகவான் மீது நம்பிக்கையும் பக்தியும் மட்டுமே மீட்க முடியும் என்று புரிகிறது.
இப்படி ஆழ்வார்கள் எல்லாம் உருக வேண்டுமானால் அந்த அச்சுத்தனின் குணமும் அழகும் எப்படி பட்டது என்று சற்று சிந்தித்துபார்க்க வேண்டும். அதை அனுபவிக்க நாமும் அவன் நாமத்தை சொன்னால் தானே அந்த சுகத்தை உணர  முடியும்.
வாருங்கள் நாமும் அவர் நாமத்தை வாயார பாடி மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்,
ஆண்டாள்


No comments: