சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 21.03.2010 ல் இரண்டாம் திருவிழாவாக இடம் பெற்றது. இன்று அலை மோதிய மக்கள் முருகப்பெருமானின் அருள் வேண்டி திரண்டிருந்தார்கள். முருகன் யானை வாகனத்தில் வீதிஉலாவந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
சிட்னி முருகன் ஆலய கொடியேற்ற திருவிழா
சிட்னியில் அருள்மிகு முருகன் ஆலய வருடாந்த திருவிழா 20.03.2010 அன்று கொடியேற்றத்துடன் மிக கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.ஆலயத்தின் உள்ளும் வெளியிலும் மக்கள் வெள்ளமாக திரண்டிருந்தார்கள். அந்தணர்கள் வேதமோத நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்களின் நாதவெள்ளம் பரவ முருகப்பெருமான் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. இவ்வருட சைவமன்ற தலைவர் திரு.வி.விஜயரெட்ணம் தலைமையில் சைவமன்ற நிர்வாக சபையின் திருவிழாவாக கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகியது.
சிட்னி முருகன் மயில்வாகனத்தில் வீதிவலம் வருதல்
No comments:
Post a Comment