மஞ்சுவின் பதக்கம் பறிமுதல்


குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சின் தங்கப் பதக்கம் இலங்கை விளையாட்டு துறை தலைவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே வேளை அவர் விளக்கம் அளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு வார காலத்தி பின் பதக்கத்தை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அதுவரை பதக்கம் எமது பாதுகாப்பில் இருக்கும் என ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான இலங்கையின் செயற்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டித் தொடரின் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கமொன்றை வென்றெடுத்தார்.

72 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக குத்துச் சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை மஞ்சு பாவித்திருப்பதாக தற்போது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இவரின் தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உலக ஊக்கமருந்து தடைப் பிரிவினால் தடை செய்யப்பட்டுள்ள நென்ரோலின் என்ற ஊக்க மருந்தினை மஞ்சு பயன்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட சோதனைகளின் மூலம் புலனாகியுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.

குருணாகல் பிரதேசத்தில் வைத்து ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த மருந்தினைப் பயன்படுத்தியதாக மஞ்சு ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து இந்த தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மஞ்சு வன்னியாரச்சியின் வெற்றி இலங்கை முழுவதிலும் கொண்டாடப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

நன்றி வீரகேசரி இணையம்

No comments: