சங்க இலக்கிய இலங்கை திருநாட்டை ஈழம் என்று குறித்தமைக்கு சான்றுகள் உண்டு

.
மனனாரில் நடைபெற்ற மன்னார் தமிழ்ச் செம்மொழி விழாவின் 2ஆம் நாள் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை கலைப்பீடப் பேராசிரியர் கலாநிதி கி. விசாகரூபன் சமர்ப்பதித்த ஆய்வுக்கட்டுரை



“இலக்கிய வரலாறு” என்பது தமிழி ஆய்வாளர் பலரது புலமைச் சிரத்தைக்குய ஆய்வுப் பொருளாக இன்றுவரை இருந்து வருகிறது. தமிழ கத்தை மையப்படுத்திய பொதுவான தமிழ் இலக் கிய வரலாற்றில் விடுவிக்கப்படாத ஆய்வுப் பிரச் சினைகள் பல இன்றுவரை தொடர்கின்றன. கல் வெட்டுக்களும் தொல்பொருட் சான்றுகளும் ஆய்வுகள் பலவற்றின் டிவுகளை மாற்றி யுள்ளன. மறுபசீலனைக்கு உட்படுத்தியுள்ளன.


ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறும் இதற்கு விதி விலக்கானதல்ல.

ஆய்வின் வசதி மற்றும் தெளிவு கருதி இந்த ஆய்வானது பின்வரும் ன்று பகுதிகளாக அணு கப்பட்டுள்ளது. அவையாவன

(1) ஆரம்ப காலம் தல் ஆயச் சக்கரவர்த்தி கள் காலம் வரையிலான இலக்கிய யற்சிகள்.

(2) ஆயச் சக்கரவர்த்திகள் காலகட்டத்து இலக்கிய யற்சிகள்.

(3) போர்த்துக்கேயர் காலகட்டத்து இலக்கிய யற்சிகள் என்பவையே அப்பகுதிகளாகும்.

ஈழத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண மன் னர் காலம் வரையிலான காலப் பகுதிக்குய இலக்கிய வெளிப்பாடுகள் குறித்த அச்சொட் டான தகவல்கள் எம்மிடம் இல்லை. ஆயினும் வர் என்பதற்குச் சான்றுகளில்லை. இப்பெயரைத் தவிர்த்து ஏனைய இரு பெயர்களுக்குயவர் கள் ஒருவரா அல்லது இருவரா என்பதில் அறிஞர் களிடம் கருத்தொருமைப்பாடு இல்லை. “ஈழத் துத் தமிழிப் புலவர் சதம்' என்ற நூலிலே இருவ ரும் ஒருவரே என மகாவித்துவான், சி. கணேசை யர் குறிப்பிடுகிறார். பூதந்தேவனாரை ஈழத்தவரா கக் காட்டுவதில் அவருடைய பெயருடன் ன்னொட்டாக அமையும் “ஈழம்' என்ற சொல் பெரும் பங்காற்றியுள்ளது. சங்கப் புலவர்கள் பல ரும் “ஊர்ப் பெயருடன்' சேர்த்துப் பேசப்பட, பூதந்தேவனார் மட்டும் “நாட்டுப் பெயருடன்' இணைத்துப் பேசப்படுவது சற்று வித்தியாசமா கப் படுகிறது. ஆயினும் மதுரை ஈழத்துப் பூதந்தே வனார், ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயர்க ளில் வரும் “ஈழம்' என்ற சொல் இலங்கையைத் தான் குறித்திருக்க வேண்டும் என்பது பெரும் பான்மைக் கருத்தாக உள்ளது.

சங்க இலக்கியங்களிலே ஈழத்துப் பூதந்தேவ னார் தொடர்பில் அகம் 88, 231, 307 குறுந்தொகை 189, 360, 343 நற்றினை 366 தலிய ஏழு பாடல் கள் உள்ளன. இப்பாடல்களை நுணுகி ஆராய்ந்த பேராசியர் ஆ. வேலுப்பிள்ளை ஈழத்துப் பூதந் தேவனாரை ஈழத்தவராகவே நிறுவியுள்ளார்.

சங்க இலக்கியங்கள் இலங்கை நாட்டினை “ஈழம்' என்று குறித்தமைக்கான பிற சான்றுகளும் உள்ளன. பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துனா வும் காழகத்தாக்கம்' என்ற தொடர் இதற்குச் சான்றாகும். ஈழ நாட்டிற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையேயான வணிகத் தொடர்பினையும் இத் தொடர் காட்டி நிற்கிறது. புவியியல் அண்மைத் தன்மை இத்தகு வணிகத் தொடர்புகளுக்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம்.

சம காலத்தில் செழிப்பானதொரு புலமைப் பாரம்பயம் தமிழகத்தில் இருந்திருந்த நிலை யில் ஈழத்திலும் அவ்வாறானதொரு இலக்கியப் பாரம்பயம் இருந்திருக்கலாம் எனக் கருதுவது தவறாகாது. ஈழத்துத் தமிழ்ப் புலவர்களது ஆக் கங்கள் பலவும் பேணுகை செய்யப்படாது அழிந்து போயிருக்கலாம். போதுமான ஆதப்புச் சூழல் அமையாத போது இப்புலவர்களில் சில ரோ பலரோ கடல் வழியாகத் தமிழகம் சென்றி ருக்கலாம். அவர்களுள் ஒருவராகப் பூதந்தேவ னார் இருக்கக் கூடும்.

சங்க காலப் புலவரான “ரஞ்சியூர் டிநாகரா யர்' என்பவரை மன்னார்ப் பகுதியைச் சேர்ந்த “ சலி' என்னும் பகுதிக்குயவராக ஆ. த்துத்தம் பிப் பிள்ளை குறிப்பிடுவதையும் இவ்விடயத் தில் பொருத்திப் பார்த்தல் வேண்டும்.

ஈழ நாட்டில் மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளமையினை தொல் லியலாளர்களும் வரலாற்றாசியர்களும் தகுந்த சான்று கொண்டு நிறுவியிருக்கிறார்கள். அனுராத புரம், கந்தரோடை, மாந்தை, திசமகாராம, ஆணைக்கோட்டை, பொம்பப்பு தலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வா ராய்ச்சி டிவுகள் பெருங்கற்காலப் பகுதியிலி ருந்தே தொடர்ந்து வரும் தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்குமான நாககப் படர்ச்சியினைக் காட்டு கின்றன. இவ்வாறான நீண்டகால வாழ்வுப் பின் புலத்தில் அவர்களுக்கான தனித்துவமான கலை, இலக்கிய யற்சிகள் இருந்திருக்கப் பெதும் வாய்ப்பு இருக்கிறது.

பல்லவர் காலப் பகுதியிலே வாழ்ந்தவர்களா கக் கருதப்படும் திருஞான சம்பந்தரும் சுந்தரரும் ஈழத்து தமிழ் மக்களிடையே வழிபாட்டு நிலை யில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த திருகோண மலையமர்ந்தார் மீதும் திருக்கேதீச்சரத்தார் மீதும் தேவாரத் திருப்பதிகங்கள் பாடியுள்ளனர். இக்கா லப் பகுதியில் வாழ்ந்திருந்த மக்களுடைய கலை இலக்கிய யற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது விடைகாண வேண்டிய வினாவாக உள்ளது.

சோழப் பெருமன்னர் காஒலப் பகுதியில் ஈழம் அவர்களால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் தமிழக ஈழப் புலவர்களுக்கிடையிலான ஊடகச் சாத்தியப்பாடுகள் இருந்திருக்கும். கவிச் சக்கர வர்த்தி ஒட்டக் கூத்தர் இலங்கைக்கு வந்து சென் றமை பற்றிய கர்ணபரம்பரைக் கதையை புகழேந்திப் புலவர் மற்றும் அந்தக் கவி வீரராகவ தலி யார் ஆகியோன் தனிப்பா டல்களையும் இவ்விடத் தில் மனங்கொள்ளல் வேண்டும். கி. பி. 9 தொடக் கம் 14 ஆம் நூற்றாண்டுக ளுக்கெதிராக நம்பப்படும் வியா, பண்டு வஸ்நுவர, கோட்டாகம தலிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற் றுள் அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட “நான்கு நாட்டார் கல்வெட்டு' க்கியமானது.

இக்கல்வெட்டு செய்யுள் அமைப்பிலேயே கா ணப்படுகிறது. இலக்கிய வளம்மிக்கதொரு ச தாயத்திலேயே செய்யுள் அமைப்புச் சாத்தியப்ப டும். தமிழ் மொழி வல்லார்க்கே பெதும் வசப்ப டும் விருத்தம், வெண்பா தலிய வடிவங்க ளிலே இச்செப்புள்கள் பயின்றுள்ளமையானது இக்காலப் பகுதியில் பரவலாக வாழ்ந்திருக்கக் கூடிய தமிழ்க் குடிகளின் இலக்கிய வளமைக்குச் சான்று பகருவனவாக உள்ளன.

ஈழத்துத் தமிழ் நூல்களிலே காலத்தால் ற்பட் டதாகக் கருதப்படும் நூல் “சரசோதி மாலை' என் னும் சோதிட நூலாகும். தேனுவரைப் பெருமாள் என அழைக்கப்பட்ட போசராச பண்டிதர் இந் நூலை 1310 இல் அரங்கேற்றினார் என நம்பப்படு கிறது. தம்பதெனியாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புந்த ன்றாம் பராக்கிரமபாகு வின் விருப்பை நிறைவேற்ற இந்நூல் எழுந்தது.

மேலே சுட்டிய சான்றுகள் பலவும் ஈழ நாட் டிலே ஆயச் சக்கரவர்த்திகள் காலம் வரையி லான காலப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்தமைக் கும் அவர்களுடைய இலக்கிய யற்சிகளுக்கும் சான்று பகருகின்றன. இப்பின்புலத்தில் அவர்க ளுடைய இலக்கிய யற்சிகள் தொடர்பான ழுமையான சான்றுகள் கிடைக்காமல் போன மைக்கு பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள டிகிறது. இலங்கை தமிழன் அரசி யல் வரலாற்றுத் தெளிவின்மை, கையளிப்பு ஊட கக் குறைபாடு, கையளிப்பு மனோபாவம், இயற்கை அனர்த்தங்கள், பிற நாட்டார் படையெ டுப்புக்கள், சேகப்பு மற்றும் தொகுப்பு யற்சி களின்மை, இலக்கியம் குறித்த கொள்கை நிலைப்பாடு தலியன இக்காரணிகளில் சிலவா கும்.

3. ஆயச்சக்கரவர்த்திகள் காலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் யாழ்ப் பாணத் தமிழ் வேந்தர்கள் என அழைக்கப்படும் ஆ0யச் சக்கரவர்த்திகள் காலம் (1216 1621) மிக வும் க்கியத்துவமானதாகும். யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆயச் சக்கரவர்த்திகளில் சிங்கைச் செக ராச சேவரனும் (1380 1414) நல்லூர் பரராச சேகர னும் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாண அரசு சிறந்து விளங்கியது.

யாழ்ப்பாண அரசர்களில் சிலர் தமிழ்ப் புலமை மிக்கவர்களாகவும் இருந்துள்ளனர். அரச ஆதர வுப் பின்புலத்தில் சோதிடம், வைத்தியம், வர லாறு, சமயம் மற்றும் பிற துறைகள் சார்ந்து நூல் கள் இயற்றப்படவும் அவற்றைப் பாதுகாக்கவும் இக்காலத்தில் யற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. அத்துடன் யாழ்ப்பாண மன்னர்கள் தமிழகத் திலிருந்து தமிழ்ப் புலர்கள் பலரைத் தருவித்து ஈழத்தின் பல்வேறு பாகங்களிலும் குடியமர்த்தி தமிழ் இலக்கியம், தமிழ்க் கல்வி தலானவற் றின் வளர்ச்சிக்கு அடிப்படை அமைத்தனர்.

யாழ்ப்பாணக் கல்வி வரலாற்றோடு நெருங்கிய பிணைப்புடையவரான கச்சிக்கணேசையர், கூழங்கைத் தம்பிரான் எனும் கனகசபாபதி யோகி தலியோரை இவ்விடத்தில் சுட்டுதல் தகும்.

யாழ்ப்பாணத்திலே “சரஸ்வதி பண்டாரம்' என்ற பெயல் இம்மன்னர்கள் சிறந்த நூல் நிலையம் ஒன்றையும் அமைத்திருந்தனர். இக்கால கட்டத் துக் கலை இலக்கிய மற்றும் கல்விசார் நடவடிக் கைகளில் பிரõமணர்களின் பங்களிப்புக் கணிச மாக இருந்தது. இக்கால கட்டத்தில் பிராமண குலத்தினர் அரசியல், கல்வி, புலமை தலான வற்றில் சிறந்து விளங்கினர். ஆயச் சக்கரவர்த்தி கள் காலத்தில் எழுந்த நூல்களில் பெரும்பõலான வற்றைப் பிராமணர்களே இயற்றியுள்ளமை இதற்குச் சான்றாகும். பிராமண குலத்தோன்றல் களான ஆயச் சக்கரவர்த்திகளும் இவர்கள் பால் மிகுந்த கசணையுடனே இருந்திருக்கின்றனர்.

ஆயச் சக்கரவர்த்திகள் காலத்துக்குய இலக் கியங்களாக பரராச சேகரம், செகராச சேகர மாலை, செகராச சேகரம், தட்சிண கைலாச புரா ணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கரவைப் புராணம், வியாக்கிரபாரத புராணம், இரகுவம் சம், கண்ணகி வழக்குரை, கோவலனர் கனதி, சிலம்பு கூறல், கதிரை மலைப் பள்ளு தலான வற்றைக் குறிப்பிடலாம்.

மேலே சுட்டிய நூல்களை அவற்றின் பொருள், வடிவம் மற்றும் பொதுப்பண்பு ஆகியன கொண்டு வகைப்படுத்துவதிலே உள்ள சிக்கல் கள் குறித்துப் பேராசியர் எஸ். சிவலிங்கராஜா விவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆய்வாளர் சிலர் வைத்திய சோதிட நூல்கள், தவ புராணங்கள், மொழி பெயர்ப்பு அல்லது தழுவல்கள், வர லாற்றுத் தன்மை கொண்டவை எனப் பகுத்து நோக்குவர். இவ்வாறு கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. இரகுவம்சம், மாத்திரமன்றி சில வைத் திய சோதிட நூல்களும் சில புராணங்களும் வட மொழித் தழுவல்களாக அமைந்துள்ளன. வர லாறு குறித்த பல்வேறு செய்திகளைக் கொண் டுள்ள தலபுராணங்களை வரலாறு சார்ந்த நூல்க ளுக்குள்ளும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகப் பேரா சியர் எஸ். சிவலிங்கராஜாவின் பகுப்பு றைமை அமைந்துள்ளது. அது வருமாறு

(அ) சமயச் சார்புடைய இலக்கியங்கள்.

(ஆ) வரலாற்று வரன் றை கூறும் இலக்கியங் கள்.

(இ) வைத்திய சோதிட நூல்கள் (ஈ) காவியங்கள் என இப்பகுப்பு றைமை அமைந்துள்ளது.

சமயச்சார்புடைய இலக்கியங்கள் ஆயச் சக்கரவர்த்திகள் காலம் சைவ சமயத் துக்குச் சிறப்பான ஒரு காலகட்டமாக விளங்கி யது. இக்காலகட்டத்தில் ஆலயங்கள் பலவும் புதி தாக கட்டப்படவும் புனருத்தாரணம் செய்யப்பட வும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பிராமண குலத்தவரõன யாழ்ப்பாண மன்னர்கள் இம்யற்சிகளுக்குப் பெதும் வாய்ப்பளித் திருந்தமையை இக்காலகட்டத்துச் சமயச் சார்பு டைய இலக்கியங்கள் வழியும் கண்டுகொள்ள டிகிறது. சைவ ஆலயங்கள் பலவற்றுக்கு இக்கால மன்னர்கள் நிவந்தங்களை வழங்கியி ருந்தனர்.

ஆலயங்களின் நித்திய பூசைக்கென இந்தியாவி லிருந்து பிராமணர்கள் பலரும் தருவிக்கப்பட்ட னர். இவர்கள் கியை றைமைகளில் மாத்திர மன்றிப் பிற பல்வேறு துறைகளிலும் மிக்க புல மையுடையோராக இருந்தனர். வடமொழி, சோதிடம், திருக்கம், கட்டடக்கலை, சிற்பம் த லிய துறைகள் அவற்றுட் சிலவாகும்.

சமயச் சார்புடைய இலக்கியங்களில் சிங்கைச் செகராச சேகரனால் இயற்றப்பட்ட தக்கினை கைலாசபுராணம், திருக்கரசைப் புராணம் தலி யன குறிப்பிடத்தக்கனவாகும். ஈழத்தின் கற்றறி சகத்தினடையே இவ்விலக்கியங்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்துள்ளன. திருக்கரைசைப் புராணத்தைப் பாடிய புலவர் பெயார் தெயுமாறில்லை. திருகோணமலைக்கு அருகில் உள்ள “கரைசை' என்னும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் அருளை இந்நூல் வியந்து பாடு வதாக உள்ளது.

யாழ்ப்பாணத் தமிழருக்கும் தமிழ்நாட்டவருக் குமிருந்த நெருங்கிய ஊடாட்டம் காரணமாக கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்டதா கக் கருதப்படும் “கந்தபுராணம்' உடனடியாகவே ஈழத்துக்கு வந்து விட்டது. ஈழத்துப் புராண படன மரபினூடாக “கந்தபுராணம்' ஈழத்தவர் மத்தியில் பிரபல்யம் பெறத் தொடங்கியது. இப்பின்புலத் திலே தான் ஆயச் சக்கரவர்த்திகள் காலத்திலும் புராணங்கள் தோன்றின.

கர்ணபரம்பரைக் கதைகளுடன் ஆட்சியாளர்க ளின் பல்துறைச் செயற்பாடு, ஆள்புலம் பற்றிய விவரணம், பல்வேறு திருப்பணிகள் தலான வற்றை விவப்பது பெரும்பாலான தலபுராணங் களின் பொதுவான போக்காக உள்ளது. ஆட்சிப் பரப்பின் நிலைபேற்றையும் விசாலிப்பையும், கருத்தில் கொண்டு ஆலயங்களைப் புதிதாக அமைத்தும் புனரமைத்தும் வந்துள்ளனர். இவை குறித்த பதிவுகளைத் தலபுராணங்களாகத் தக் கோரைக் கொண்டு பாடுவித்துள்ளனர்.

தக்கிண கைலாசபுராணம், திருக்கரை சைவப் புராணம் ஆகியன தோன்றியதாகக் கூறப்படும் சமய, சக, அரசியல் சூழ்நிலை க்கியமானது.

யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சியதிகார எல்லை விஸ்தப்பு மற்றும் சைவ சமயத்தின் பா லான அவர்களுடைய பெருவிருப்பு தலியன இவ்விலக்கியங்களினூடே தெயவருகின்றது.

ஆயச் சக்கரவர்த்திகள் தமது ஆட்சிக்குச் சாதக மான ஒரு நிலைப்பாட்டை மக்களிடையே தோற் றுவிப்பதற்கு “சமயத்தை' ஒருவகை ஊடகமாகப் பயன்படுத்தினர்.

கோவலனார் கதை, சிலம்பு கூறல், கண்ணகி வழக்குரை இம்ன்று இலக்கியங்களும் சிலப்ப திகாரக் கதையினை ஒட்டி ஈழத்தில் வழங்கி வரும் சமயச் சார்புடைய இலக்கியங்களாகும்.

கோவலனார் கதையிலே வாய்மொழி மரபுத் தன் மைகள் பெருமளவுக்குக் காணப்படுகின்றன.

நீண்டகாலமாக வாய்மொழி மரபில் வழங்கி வந்த கோவலனார் கதை பின் வந்தோரால் எழுத்து நிலைப்படுத்தப்பட்டிருக்கலாம். சிலம்பு கூறல், கண்ணகி வழக்குறை தலியன ஈழத்துக் கண்ணகி கோவில்கள் பலவற்றிலும் ஒருவித சடங்காகப் பின்புலத்தில் பிடிக்கப்பட்டு வருவ தையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.

இம்ன்று இலக்கியங்களும் சாதாரண அடி நிலை மக்களை இலக்காகக் கொண்டு படைக்கப் பட்டனவாகத் தெகின்றன.

“கதிரைமலைப்பள்ளு' ஈழத்தில் தோன்றிய தல் பள்ளு பிரபந்தமாகும். இதனை க்கூடற் பள்ளுக்கும் ந்தியதாகவும் சிலர் குறிப்பிடுவர்.

1906 ஆம் ஆண்டு இந்நூலை தன் தலில் பதிப் பித்தவர் ல்லைத்தீவைச் சேர்ந்த தா. கைலாச பிள்ளை என்பவராவார்.

வரலாற்று வரன்றை கூறும் நூல்கள் ஆயச் சக்கரவர்த்திகள் காலத்தில் எழுந்த நூல் களில் வையாபாடல், கைலாய மாலை, கோணே சர் கல்வெட்டு தலான நூல்கள் பெருமளவுக்கு வரலாறு தொடர்பான செய்திகளைக் கொண்டன வாக விளங்குகின்றன. ஆட்சியதிகாரத்தில் உள்ள வர்களின் பீடு மற்றும் பெருமையை வழிவழி யான சந்ததிகள் அறியும் பொருட்டுப் பல்வேறு வகளிலே ஆவணப்படுத்தும் றை தொன்மை யானதாகும். கல்வெட்டுக்கள், மெய்க் கீர்த்திக ளுக்குப் புறம்பாகச் சமகால இலக்கிய மரபுகளை யும் இத்தகு யற்சிகளுக்கு ஆளும் வர்க்கத்தினர் பயன்படுத்தினர். ஆளும் வர்க்கம் புகழின் உச்சி யில் இருக்கும் பொழுதும் அது சவை நோக்கிச் செல்லும் போதும் இத்தகு பதிவு யற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மன்னர் நல்லூரைத் தலைநகரமா கக் கொண்டு “தமிழரசு' ஒன்றை நிறுவ ற்பட்ட போது தமது தொல்மரபை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அதன் விளைவாகவே மேலே சுட்டிய வரலாற்றுணர்வு கொண்ட நூல் கள் தோன்றின. இக்காலத்திற்குயதாகக் கருதப் படும் “இராசறை', “பரராச சேகரன் உலா' ஆகிய நூல்களிலும் வரலாற்றுச் செய்திகள் பயின் றுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆயினும் அந்நூல் எக்காரணம் பற்றியோ பேணப்படவில்லை.
(தொடரும்)


நன்றி வீரகேசரி

1 comment:

Anonymous said...

Dear Baskaran U have given link to Thesamnet.co.uk. An article published last month in thesamnet regarding the Jaffna University says Prof. K. Visakaruban is a sexual criminal forcibly having sex with his university female students. Now u are re-publishing his article in ur web. Is that because u are defending a fellow Theevu man a fellow theevan? Is he related to U Baskaran?