இருபது20 கிரிக்கெட் போட்டிகள்

.

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 20 -20 கிரிக்கெட் ஆட்டம் 31 .10 .2010 அன்று perth  நகரில்  நடை பெற்றது.  முதலில் துடுப்பெடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிவிக்கெட்டுகளை  இழந்து 133  ஓட்டங்களைப் பெற்றது. பின்பு ஆடிய இலங்கை அணிவிக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டது. பெரேரா ஒரே ஓவரில் ஒருஇரண்டுஅடித்து தனது அணிக்கு வெற்றியை சேர்த்துக் கொடுத்தார்.
-----------------------------------------------------------------------------------------------------
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி மழை காரணமாக இலங்கைக் குழுவிற்கும் நியூ சவுத் வேல்ஸ்சிற்கும் நடைபெறவிருந்த இருபது20 கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை.

சென்ற புதன்கிழமை ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி பிளாக்ரவுணில் (சிட்னி) நடைபெற்ற இப்போட்டியில் இலங்கைக்குழு 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

4 comments:

kalai said...

சிறிலங்கா, இந்தியாக்களின் வெற்றிகளை சொல்லும் முரசு , அவுஸ்திரெலியாவின் வெற்றிகளை சொல்லுமா?

Anonymous said...

நிச்சயமாக சொல்லும். முரசுக்கு செய்திகளை தரும் அன்பர்கள் இலங்கை, இந்திய, ஆஸ்திரேலிய செய்திகளைத் திரட்டித் தரும் போது, ஏன் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அதை தர மாட்டார்கள் என்று எண்ணுகின்றீர்கள். அடுத்து நடக்க இருக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் நிச்சயம் முரசில் அந்தச் செய்தியும் வரும்.

நன்றி
ஆசிரியர் குழு

kalai said...

முரசு ஆரம்பிக்கப்பட்டது சென்ற மார்ச்சு மாதத்தில். அதன்பிறகு பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு இடையில் நடைபெற்ற சில போட்டிகளில் அவுஸ்திரெலியா வெற்றி பெற்றது. அச்செய்திகள் முரசில் வரவில்லை

Anonymous said...

செய்திகளைத் திரட்டி தருவதற்கு முதலில் முரசில் யாரும் இருக்கவில்லை. ஆனால் தற்போது செய்திகளை முரசுக்கு திரட்டி தருவதற்கு ஒரு சிலர் உள்ளனர். எனவே தான் முதலில் இப்படியான செய்திகள் விடுபட்டு விட்டன. இனி வரும் காலங்களில் எம்மால் இயன்றளவு செய்திகளை தரலாம் என நம்புகின்றோம். நீங்களும் எங்களுக்கு உள்ளூர் செய்திகளை அனுப்பி வைத்தால் எங்களுக்கும் வாசகர்களுக்கும் நன்மையாக இருக்கும்.

நன்றி
ஆசிரியர் குழு