ஆன்மீகம்

.

வணக்கம்! இந்த வாரம் சற்று மாறுதலாக கார்த்திகை மாதத்தின் மஹத்துவத்தை பற்றி பார்ப்போம். பிறகு அடுத்த வாரத்தில் இருந்து ஆழ்வார்களின் மஹத்துவத்தை பற்றி தொடரலாம்.

கார்த்திகை மாதத்தை தாமோதர் மாதம் என்றும் அழைப்பார்கள். ஹிந்தியில் ‘தாம்’ என்றால் கயறு ‘உதார்’ என்றால் இடுப்பு . குட்டி கண்ணனை அவர் தாயான யசோதை இடுப்பில் கயிற்றை கட்டி உர லில் கட்டியது இந்த மாதத்தில் தான் என்று கருதப்படுகிறது. கண்ணன் மிகவும் குறும்புகாரன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் குறும்பு அந்த கோப்பியர்கள் ரசிக்கும் வகையில் இருந்தது.

கண்ணன் தினமும் அக்கம் பக்கம் இருக்கும் கோபிமா ர்களின் மனைகளுக்கு சென்று அவர்கள் பானையில் கட்டி வைத்திருக்கும் வெண்ணையையும் , தயிர், பால் எல்லாவற்றையும் நன்றாக அவன் நண்பர்களுடன் உண்டு விட்டு பானையை உடைப்பது வழக்கம்.

கோப்பிகளும் கண்ணனின் தாயிடம் வந்து புகார் கூறுவது வழக்கம். கண்ணனின் கட்டுக்கு அடங்காத குரும்பை கண்டிக்க எண்ணி யசோதை கண்ணனை கயிற்றில் கட்ட முயற்சிக்கிறாள். ஆனால் அந்த குறும்புக்கார கண்ணனோ தன் லீலையை தன் தாயிடமே காட்டுகிறான். யசோதை கண்ணனை கட்ட முயன்ற போது 2 விரல் நீளம் கயறு குட்டியாக போகிறது, உடனே யசோதை இன்னொரு கயிற்றை வைத்து கட்ட
 முயல, மீண்டும் 2 விரல் நீளம் கம்மியாக உள்ளது. உடனே அயராமல் யசோதையும் மற்றொரு கயிற்றை சேர்த்து கட்ட முயன்றும் பயனில்லாமல் போகிறது.

உடனே தன் தாயின் கஷ்டத்தை புரிந்து கொண்டு தான் கயிற்றில் கட்டு படுகிறான். இதிலிருந்து உண்மையான அன்பிற்கும், பக்திக்கும் பகவான் கட்டு படுகிறான். அந்த தாமோதரன் யாருடைய கட்டுக்கும் அடங்காதவன், தன் தாயின் அன்பு என்னும் கட்டுக்கு அடங்குகிறான்.

இந்த மாதத்தில் அவருக்கு பிரியமான தாமோதர் அஷ்டகம் கூறி வழிபடுவது வழக்கம். இது மனத்திர்க்கும், காதிர்க்கும், நாவிற்க்கும் மிகவும் இனிமை தரும் பாடல்கள் ஆகும்.

நாம் ஒரு ஒருவரும் பக்தியில் பகவானுக்கு சேவை செய்வது மிகவும் முக்கியம் ஆகும். இதை கீதையில் கண்ணன்

 மாம் ச யோ(அ) வ்யபிசாரேண பக்தியோகேனா ஸேவதே குணான்ஸமதீத்யைதான் ப்ரஹ்ம பூயாய கல்பதே -- [14.26 ]

அர்த்தம்:

பூரண பக்தி தொண்டில் ஈடுபட்ட, எந்த நிலையிலும் இழிவு அடையாத ஒருவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாக கடந்து பிரம்ம நிலைக்கு வந்து அடைகிறான்.

இந்த கார்த்திகை மாதத்தில் அந்த பகவானுக்கு தாமோதர் அஷ்டகம் பாடி, நெய் விளக்கு தீபம் காட்டி வழிபடுவது மிகவும் விசேஷம். ஆகையால் வாருங்கள் நாமும் அவர் நாமத்தை வாயார பாடி, கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டு மனதார மகிழலாம்.

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்

ஆண்டாள்

No comments: