அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய பயணம்

.

இந்திய சுற்றுப்பயணத்தின்போது, நாட்டின் நிதித்தலைநகரமான மும்பைக்கும் செல்லவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெக்க அதிபராக ஒபாமா, கடந்த ஆண்டு ஜனவ 20 ஆம் திகதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நெருக்கமான நல்லுறவு வைத்திருப்பதால், அவரது இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, எயார் போர்ஸ் ஒன் விமானம் மும்பை செல்கிறார். அந்த விமானத்துக்கு இருபுறம் இரு விமானங்கள் பாதுகாப்புக்காக செல்கின்றன.
மும்பை விமானநிலையத்தில் இறங்குகிற ஒபாமா, குண்டுதுளைக்காத வகையில் நான்கரை அங்குல தகடுகளால் டப்பட் டுள்ள லிங்கன் கான்டினென்டல் கால் சத் திரப் பிரசித்திபெற்ற தாஜ்மகால் ஹோட்டலுக்கு செல்கிறார். இதற்காக ஒட் டுமொத்த ஹோட்டலும் முன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒபாமாவின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையே மிகப்பெயதாகும். இந்தப்படை ஏற்கனவே மும்பையில் தனது பாதுகாப்புப் பணிகளை தொடங்கி விட்டது.

இரகசிய ஒற்றர் படையினரும் மும்பை சென்று விட்டனர். ஒபாமா செல்லும் பாதைகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்கிற வழிச்சாலைகள், தங்குகிற இடம் ஆகியவற்றினை அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகின்றனர்.

ஒபாமா விஜயத்திற்கு முன்னதாக மேலும் இரகசிய ஒற்றர் படையினர் 30, 40 பேர் செல்கிறார்கள்.

No comments: