யோகர் சுவாமிகள்

.

யோகர் சுவாமிகளின் வாக்கியங்களில் இருந்து ஒரு சில நம் சிந்தனைக்கு. யோகர் சுவாமிகளைப் பற்றி அறியாதவர்களுக்கு இவர் யாழ்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்தவர்.

தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தால் இறைவன் ஆவாரோ
காலை மேலே ஏற்றிப் பார்த்தால் கடவுளைக் காண்பீரோ

மலைமேலேறி மௌனம் செய்தால் தேவனைக் காண்பீரோ
சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக் காண்பீரோ

கலைகள் பலவும் கற்றுவிட்டால் கடவுளைக் காண்பீரோ
விலைக்குப்புத்தகம் வேண்டிப்படித்தால் விமலனைக் காண்பீரோ

பாலைக்குடித்துப்பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ
வேலைசெய்யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக் காண்பீரோ
மூலையிலிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக் காண்பீரோ
சாலப்பசிக்கொரு போது புசித்தால் சாமி யாவீரோ

2 comments:

kirrukan said...

[quote]தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தால் இறைவன் ஆவாரோ
காலை மேலே ஏற்றிப் பார்த்தால் கடவுளைக் காண்பீரோ

மலைமேலேறி மௌனம் செய்தால் தேவனைக் காண்பீரோ
சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக் காண்பீரோ

கலைகள் பலவும் கற்றுவிட்டால் கடவுளைக் காண்பீரோ
விலைக்குப்புத்தகம் வேண்டிப்படித்தால் விமலனைக் காண்பீரோ

பாலைக்குடித்துப்பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ
வேலைசெய்யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக் காண்பீரோ
மூலையிலிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக் காண்பீரோ
சாலப்பசிக்கொரு போது புசித்தால் சாமி யாவீரோ[/quote]
இப்படி சிந்தித்த மனிதனையே கடவுள் ஆக்கி ,ஆச்சிரமம் கட்டி, பஜனை பாடி நாம் செய்த செய்கிற அட்டகாசம்,தாங்கமுடியல்லடா சாமி......

Ramesh said...

உண்மை தான் கிறுக்கன் கூறியது போல் புரியாமல் கதைத்தால் கடவுள் ஆக்கி விடுவார்கள் பொய்யைக் கதைத்தால் தலைவர் ஆக்கி விடுவார்கள் இது தான் தமிழனின் சிந்தனை. இதனால்தான் சாமியார்களும் தலைவர்களும் கொடிகட்டி பறக்கின்றார்கள்.