தமிழ் சினிமா

.
1 . கமலும் கருத்தும்... மைனாவில் ஒரு மாற்றம்!
2 . அசினுக்காகதான் இதெல்லாம்.... விஜய்யின் அட்ஜஸ்ட்மென்ட்!
3 . சென்னையில் நயன்தாரா விளம்பர ஷூட்டிங் பரபர...

1 . கமலும் கருத்தும்...     மைனாவில் ஒரு மாற்றம்!


ஒரு படம் கருவிலிருக்கும் போதே ஏறத்தாழ தெரிந்துவிடும், உள்ளேயிருப்பது காக்கையா, அன்னமா என்று! அப்படி தெரிந்து கொண்டு பலராலும் போற்றப்படும் படம்தான் மைனா. நடிகர் கமல், டைரக்டர்கள் பாலா, இராம.நாராயணன் போன்ற சாதனையாளர்கள் பார்த்து வியந்து போன இந்த படத்தை பற்றி ஒரு லேட்டஸ்ட் தகவல்.

இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் குறித்துதான் படம் பார்த்த எல்லாரும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்களாம் இயக்குனர் பிரபு சாலமனிடம். அதிலும் கமலின் கருத்து சாலமனை சற்றே குழப்பியும் விட்டிருக்கிறது.

இவ்வளவு அழுத்தமான க்ளைமாக்சை மக்கள் மனம் தாங்கி ஏற்றுக் கொள்வார்களா? ரத்தமும் சதையுமான ஒரு படத்தில் ரணமும் வலியும் இருப்பது சகஜம்தான் என்றாலும் அது கொஞ்சம் அளவுக்கு மீறியதாக இருக்கிறதோ என்று தனது ஐயத்தை தெரிவித்தாராம் கமல். முடிந்தால் க்ளைமாக்சை மாற்றுங்கள் என்று அவர் சொன்னதாகவும் தகவல் கசிகிறது. ஆனால், இந்த முடிவில் பிரபு சாலமன் பிடிவாதமாகவே இருக்கிறாராம்.
பார்க்கலாம்....

2 . அசினுக்காகதான் இதெல்லாம்....    விஜய்யின் அட்ஜஸ்ட்மென்ட்!


மணி கூண்டுல சத்தம் வருதோ இல்லையோ, மணிகட்டுல இருக்கிற கடிகாரம் நினைவூட்டுதோ இல்லையோ, மண்டைக்குள்ளேயே ஒரு கடிகாரத்தை செட் பண்ணி வைத்திருக்கும் இரு முக்கிய நடிகர்கள் விஜய்யும் வடிவேலுவும். சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் ஆளை விடுங்க என்று கிளம்பிவிடுவார்கள். அது எவ்வளவு முக்கியமான ஷாட்டாக இருந்தாலும் மறுநாள்தான்.

இயக்குனர்களும் அவரது மூடுக்கேற்ப சாயங்காலம் ஆறு மணிக்குள் தான் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துவிட்டு போயிட்டு வாங்க சார் என்று விடைகொடுப்பதும் கால காலமாக நடக்கிற சங்கதி. இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு குட்பை சொல்லிவிட்டார் விஜய்.

காவலன் படப்பிடிப்புக்கு நள்ளிரவு வரை இருந்து நடித்துக் கொடுத்துவிட்டுதான் செல்கிறாராம். காரணம் அசின். அவரது கால்ஷீட்டை இடையில் இழந்துவிட்டு இரண்டு மாதம் படாத பாடு பட்டுவிட்டார் சித்திக். அதனால் அவர் மீண்டும் கால்ஷீட் கொடுக்கிற தேதிகளுக்குள் படத்தையே முடித்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம். அதன் காரணமாக அசின் தேதி கொடுக்கும் போதெல்லாம் உங்க நேரத்தையும் கொஞ்சம் அனுசரிச்சு கொடுங்க என்று கேட்டாராம் விஜய்யிடம். அவரும் சம்மதித்துவிட்டார்.

கட்டிப்பிடிங்க திரையுல. விட்டுப்பிடிங்க நிஜத்திலங்கிற மாதிரியே நடக்குதே எல்லாமும்!


3 . சென்னையில் நயன்தாரா       விளம்பர ஷூட்டிங் பரபர...

குடும்பம் ஒரு கோவில்தான். ஏன்னா ரமலத் வயிற்றில் சூடம் எரியுதே....! என்று பரிதாபப்படும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கோபம் நயன்தாரா மீது இருக்க, பொண்ணு சைலன்ட்டா வந்து சென்னையில்தான் தங்கியிருக்கு. ஆனால் அவ்வளவு சீக்கிரம் நெருங்கிட முடியாதபடி டைட் செக்யூரிடியாம்.

விளம்பரங்களில் நடிக்கவே மாட்டேன் என்று ஒதுங்கியிருந்த நயன்தாரா, சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்காக பேசப்பட்ட சம்பளம் சுமார் ஒரு கோடி என்கிறது தகவல்கள். ஷ¨ட்டிங் நடக்கப் போவது வெறும் மூன்றே மூன்று நாட்கள்தான். அம்மாடியோவ்... ஒரு நாளைக்கு சம்பளம் முப்பது லட்சத்து சொச்சமா?

போகட்டும்... சென்னைக்கு ஒதுக்கு புறமாக அமைந்திருக்கும் இடம் ஒன்றில் செட் போட்டு இந்த காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஷ§ட்டிங் நடக்கும் போது எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்று தவியாக தவிக்கிறாராம் பிரபுதேவா. ஆனால் உருமி படப்பிடிப்பில் இருக்கும் அவருக்கு இன்னும் மூன்று நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறதாம். அதை முடித்துவிட்டு அவர் சென்னைக்கு திரும்பியிருக்கும் போது நயன்தாரா விளம்பரத்தை முடித்துவிட்டு கேரளாவுக்கு பறந்திருப்பார்.

கொஞ்ச நாட்களாகவே பிரபுதேவாவின் தொடர்பை தவிர்த்து வரும் நயன், உருமி படப்பிடிப்பில் இருக்கும் அவரது ஷெட்யூலை தெரிந்து கொண்டுதான் இந்த தேதிகளில் சென்னைக்கு வரவே சம்மதித்தார் என்கிறது கோடம்பாக்கம் குருவி.

நாக்குல சு­ளுக்கு விழுந்தவனுக்கு நடு வயித்துல தேன் தடவினா சரியாயிடும்னு நம்புவான் அப்பாவி?

நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments: