தமிழ் சினிமா

1. கோவா திரைப்பட விழாவில் அங்காடித் தெரு, ராவணன்!
2. அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்!

1. கோவா திரைப்பட விழாவில் அங்காடித் தெரு, ராவணன்!

கோவாவில் அடுத்த மாதம் 22ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு, மணிரத்னம் இயக்கிய ராவணன் ஆகிய 2 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

இந்த விழாவில் கலந்து கொண்ட 140 திரைப்படங்களை பார்த்து, அதில் 26 இந்திய மொழி திரைப்படங்களை என்.சந்திரா தலைமையிலான 10 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளனர்.இதில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ராவணன், இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

ஆத்ம கதா என்ற மலையாளப் படமும் தேர்வாகியுள்ளது.


2.   அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்!

ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதன்பிறகு சிறிதுகாலம் கோலிவுட்டிற்கு வராமலிருந்த அனுஷ்காவை வேட்டைக்காரன் மூலமாக அழைத்து வந்தார்கள்.

வேட்டைக்காரனை தொடர்ந்து சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா, தமிழில் வானம் படத்திலும், தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களோடு நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து நடிக்கும் “வேட்டை” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் அனுஷ்கா. அதுமட்டுமல்லாமல் கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள “தெய்வ மகன்” படத்தில் அனுஷ்காதான் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா வழக்கறிஞராக நடிக்கவுள்ளார்.

தமிழில் பல வாய்ப்புகள் அனுஷ்காவை தேடி வருகின்ற நிலையிலும், அனுஷ்கா தெலுங்குப் படங்களிலும் பிஸியாக நடித்துவருவதால் தெலுங்கு ரசிகர்களுக்கும் ஏமாற்றமில்லை. தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் அனுஷ்காவால் சமமாக கவனம் செலுத்த முடிந்தால்… கோலிவுட், டோலிவுட் என இரண்டிலும் வெகு நாட்களுக்கு ஸ்வீட்டி “அனுஷ்காவின்ஆட்சிதான் போங்க…

நன்றி வீரகேசரி

No comments: