ஈழ மண்ணின் தற்போதய கோலம்!!!

.
ஈழ மண்ணின் தற்போதய கோலம்!!!
ஈழ மண்ணிற்கு சென்று வந்த எமது ஊடக நண்பர் தந்த 3 படங்களும் அதனைப் பற்றிய குறிப்புக்களும்.முதல் 2 படங்களும் சிறீலங்கா அரசாங்கத்தின்வடக்கின் வசந்தம்எனும் பெயரில் எமது பாரம்பரிய ஊர்களின் அடையாளங்களும், பெயர்களும் மறைந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக அமைகின்றது.  கீரிமலையிலிருந்து புகழ்பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளபொன்னாலைநகரத்திற்கு செல்வதற்கான பழைய பெயர் பலகையையும், பெயர் மாற்றம் பெற்ற புதிய பெயர் பலகையையும் (தம்பபொல பட்டுன) படங்களில் காண்கிறீர்கள். இதை கண்டு கொள்வார் யாரோ? தமிழ்மக்களின் ஆமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்பி மார்களா? அல்லது அரச சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்  தமிழ் அமைச்சர்களே இந்த அநியாயத்தையும் தட்டிக் கேட்க முடியாமலாமா? உங்கள் நாற்காலிகளை அலங்கரிக்கிறீர்கள்? குறைந்தது புலம்பெயர்ந்த தமிழராவது இதைக் கண்டு வெகுண்டெழுந்து உங்கள் ஊடகங்களின் ஊடாக மக்கள் மனங்களிலும், பதிவுகளிலும் ஆவணப்படுத்துவோம்.
இப்படியான புதிய பல பெயர் பலகைகள் அங்கு முளை விட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புப் படையினரின் காவல் அரண்கள் அருகில் இருப்பதனால் படப்பிடிப்பாளர் தனது பாதுகாப்புக கருதி அவ்விடங்களை, படம்பிடித்துக் கொண்டு வரவில்லை.

3வது படம் 2009 மே அவலத்தின் பின்னர் தென்னிலங்கை வாசிகளின் முக்கிய தரிசிப்பு இடங்களில் ஒன்றாக இன்றுவரை உள்ள எம் தேசியத்தலைவர் மேதகு வே.பிராபாகரன் சிறு பராயத்தில் வளர்ந்த, அவரது குடும்பத்து வல்வெட்டித்துறை இல்லத்தின் தற்போதய பாழடைந்து சீரழிந்து போயிருக்கும் காட்சியே.

1 comment:

kirrukan said...

[quote] தமிழ் மக்களை தாங்கள் நாட்டின் இரண்டாம் தர பிரஜைகள் என்று எண்ணும் வகையில் நடத்திவிடாதீர்கள். [/quote]
ஒபாமாவின் சட்டத்தரணி ஜோர்ஜ் வில்லிக்கு இந்த படத்தை அனுப்பினால் ....துட்டகைமுனுவின் வாரிசு மகிந்தா எப்படி எல்லாளனின் வாரிசுகளுக்கு மரியாதை கொடுக்கிறார் என்பது தெரியவரும்