இவ்வார செய்திகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் வெடி குண்டு நிரப்பிய காரை மோதி தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதி திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபைக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை அந்நாட்டு புலனாய்வுத் துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த தீவிரவாதி அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் என்பது தெரியவந்தது. தீவிரவாதி ஷாஷத் பைசல் கைது செய்யப்பட்டதுமே அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், அவசரமாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது, ஷாஷத்தை புலனாய்வு அமைப்பினர் காவலில் வைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அவர் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவரும் என்றார். டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்த முயற்சித்தவர் ஷாஷத் பைசல்தான் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. எனினும் இதை நிரூபிக்கும் விதத்தில் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அவர் அமெரிக்கர்களை கொல்லும் நோக்கில்தான் கார் குண்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார் என்றும் எரிக் ஹோல்டர் கூறினார்.


00000000000000000000000000000

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. சிலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தெமுகோ நகரில் இருந்து 68 கி.மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டரில் 6.4 அளவில் பதிவானது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆந் திகதி இங்கு 8.8 ரிச்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் சுமார் 1000 பேர் உயிர் இழந்தனர். கட்டிடங்கள் இடிந்து தரமட்டமாகின. நேற்று நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி தாமிர சுரங்கங்களை ஒட்டி அமைந்துள்ளது. நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என சிலி நாட்டின் கப்பற்படை தெரிவித்துள்ளது.

0000000000000000000000000

பிரிட்டனில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில், அங்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில், ஆளும் தொழிற்கட்சித் தலைவர் கோர்டன் பிறவுன், பழமைவாத கட்சித் தலைவர் டேவிட் கமெரோன் மற்றும் லிபரல் டெமோகிராட் கட்சித் தலைவர் நிக்ளெக் ஆகியோர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். பிந்திய கருத்துக் கணிப்புக்களின்படி இந்தத் தேர்தலில் பழமைவாதக் கட்சியே வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதில் சாத்தியமில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

000000000000000000000

ட மற்றும் P வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரங்களது வடிவினை மாற்றி அமைக்க போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. தற்போதைய அனுமதிப் பத்திரங்களில் வயது ஒரு இடத்தில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள படியால் வயது குறைந்தவர்கள் அதனை மாற்றுவதன் மூலம் மதுக் கடைகளுக்கு சென்று மது அருந்தங்க்கூடியதாக உள்ளது. புதிய வடிவமைப்பில் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களில் அவர்களது படத்தைச் சுற்றி அவர்கள் வயது குறைந்தவர்கள் என்ற குறிப்பு இடப்பட உள்ளது. இப் புதிய அனுமதிப் பத்திரங்கள் எதிர் வரும் ஜுலை மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இம் மாற்றம் வயது குறைந்தவர்களிடையே காணப்படும் மதுப்பழக்த்தைக் குறைக்க உதவும் என முதல்வர் கிறிஸ்ரீனா கெனலி கருத்தத் தெரிவித்துள்ளார்.


000000000000000000000000

கோதுமை விளையும் பகுதிகளில் உள்ள தொடரூந்து சேவையில் ஒரு பகுதியை மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் பேரவைத் தலைவர் இப் பாதைகளை மூடும் திட்டத்தினை மறு பரிசீலனை செய்யக் கோரி மூவாயியம் கையொபங்கள் அடங்கிய மகஜரை கிராம அபிவிருத்தி அமைச்சர் டீசநனெழn புசலடடள ம் கையளித்துள்ளார். இம் மகஜரில் இப் பாதைகளை மூடுவது 60 ஆயிரம் பார ஊர்திகள் பயன் படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் எனவும் இதனால் விவசாயிகள் மாத்திரமன்றி பாதைகளை பயன் படுத்தும் ஏனையவர்களும் சிரமங்களை எதிர் கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: