பாசையூர் புனித அந்தோணியார் திருச்சொருப பவனி



பாசையூர் புனித அந்தோணியார் ஆலயம், பாலைதீவு அந்தோணியார் ஆலயம் என்றால் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல சைவசமயத்தவர்களுக்கு கூட வணக்கத்துக்குரிய இடமாக கொள்ளப்படுவது நான் சின்ன வயதில் பார்த்தது.வெள்ளை மணற்பரப்பு பாய்விரிப்பில் கம்பீரமாக நிமிர்து நிற்கும் கொடிமரமும் அதில் கட்டப்பட்டிருக்கும் நூலும் அந்த நூல்களில் படபடத்துக்கொண்டிருக்கும் கொடிகளும் என்னைக் கவர்தவைகள்.



இவை ஏன் செய்யப்படுகின்றது என்ற காரணம் எதுவும் இன்றுவரை எனக்குத் தெரியாவிட்டாலும் நான் ரசித்திருக்கிறேன் பயபக்தியோடு அங்கு சென்று வணங்கியிருக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப்போன்ற எத்தனையோ பேர் இந்த தேவாலயங்களுக்கு செல்வதுண்டு அந்த பாசையூர் அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு ஜீன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி ஜீன் மாதம் பதின்மூன்றாம்திகதி விசேட திருப்பலியோடும் திருச்சொருப பவனியோடும் நிறைவடைந்துள்ளது .


யாழ் ஆண்டகை வணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இவ்வாண்டு 160வது ஆண்டாக விழா கொண்டாடப் பட்டது குறிப்பித் தக்கதாகும்.

படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி கானா பிரபா
ஒலி வடிவை கேட்பதற்கு http://eelamlife.blogspot.com/2010/06/2010.html

1 comment:

Anonymous said...

punitha antonyar patriya thagaval ennaku upoyamaka erunthathu nantri.
s.Ignaci Muthu,chennai -82