தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா
மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
வசந்தம் வீசிட வாழ்வதே வாழ்க்கையே !
பாரதிசெய்த வீணையை மீட்டிய என் விரல்கள்!
-சங்கர சுப்பிரமணியன்.
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
சொல்லடி சிவசக்தி - எனை
பகுத்திடும் அறிவொடு படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி - எனை
பகுத்திடும் அறிவொடு படைத்துவிட்டாய்
நல்லருள் தாராயோ
நல்லருள் தாராயோ இந்த
மானிடர் பகுத்திங்கு வாழ்வதற்கே
நல்லருள் தாராயோ இந்த
மானிடர் பகுத்திங்கு வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - இதைப்
புரிந்துமே வாழ்ந்திட புரிகுவையோ
சொல்லடி சிவசக்தி - இதைப்
புரிந்துமே வாழ்ந்திட புரிகுவையோ
நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
07 - 02 - 2026 Sat: சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது. இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200
நேரம்: மாலை 6 மணி
20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா ஆரம்பம்
21 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்
28 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா
01 - 03 - 2026 Sun: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா
02 - 03 - 2026 Mon: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா
07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா
at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 9…..சங்கர சுப்பிரமணியன்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றால் கடைகளில் கூடும் கூட்டம் வேறு, இதுவேறு. ஆண்டவனைக் கண்டும் களிக்கலாம் உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்ற பழமொழிக்கும் உயிர் கொடுக்கலாம். ஒரு நாள் அன்னதான வரிசையில் நின்றபோது என்னைப்பற்றி நன்கறிந்த ஒருவரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். அடுத்து அவர் என்னிடம் கேட்ட கேள்விதான் ஹைலைட்.
மனைவி பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாதா? இப்போது வேண்டுமானால் அன்னதானம் கிடைக்கும் ஆனால் எப்போதும் கிடைக்குமா? சரி அதன்பின் நடந்தவற்றைக் கூறவேண்டாமா? சொல்கிறேன். கேட்டவரிடம் என் பதிலைச் சொன்னேன். உங்களுக்கு பெரியோரை மதிக்கும் பண்பாடு உள்ளதா? என்றேன்.
இலங்கைச் செய்திகள்
நயினாதீவு, யாழ். விகாரதிபதிகளின் உண்மையின் வெளிப்பாட்டுக்கு பாராட்டு; அவர்களின் ஆலோசனையை பெறுமா? - நல்லையா குமரகுருபரன்
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு
சகலரும் சகல உரிமைகளோடும் வாழ வழி பிறக்க வேண்டும் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஆறு திருமுருகன்
வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
நயினாதீவு, யாழ். விகாரதிபதிகளின் உண்மையின் வெளிப்பாட்டுக்கு பாராட்டு; அவர்களின் ஆலோசனையை பெறுமா? - நல்லையா குமரகுருபரன்
Published By: Vishnu
02 Jan, 2026 | 12:38 AM
வடபகுதியின் இருபெரும் மூத்த விகாரதிபதிகள் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள உண்மையை ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அனைவரும் கவனத்தில் கொண்டு தீர்க்கமான முடிவெடுக்க அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதோடு அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்ண வேண்டுமென தமிழ் தேசியப் பணிச் சபையின் தலைவர் கலாநிதி குமாரகுருபரன் வலியுறுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தையிட்டி தொடர்பான செம்மையான வரலாற்று உண்மையை நயினாதீவு நாகவிகாரை மற்றும் யாழ்ப்பாணம் நாகவிகாரை ஆகியவற்றின் இருபெரும் மூத்த விகாரதிபதிகள் தெட்ட தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
உலகச் செய்திகள்
சுவிஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பாரிய வெடிப்பு! - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியது ; 115 பேர் காயம்!
டெல்லியில் கடும் பனிமூட்டம் : 128 விமானங்கள் இரத்து
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்
புதிய குடியேற்ற விதிமுறைகளை அறிவித்தது பிரித்தானியா
இது மிகவும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு - வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ
சுவிஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பாரிய வெடிப்பு! - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியது ; 115 பேர் காயம்!
02 Jan, 2026 | 11:50 AM
சுவிற்ஸர்லாந்து நாட்டில் கிரான்ஸ் - மொன்டானா (Crans-Montana) என்ற ரிசோர்ட் நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் சுமார் 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு நேரப்படி, நேற்று (ஜன. 1) அதிகாலை 1.30 மணியளவில் பாரில் விருந்தினர்கள் அனைவரும் புத்தாண்டு நிகழ்வுகளில் மூழ்கியிருந்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்ஹிதா 07/02/2025
சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது
இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200நேரம்: மாலை 6 மணி
தமிழ் முரசு வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
தமிழ் முரசு வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் தமிழ் முரசு மகிழ்ச்சியடைகிறது.
பிறந்திருக்கும் 2026ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறையும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அனைவருக்கும் தமிழ் முரசுவின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....


.jpeg)
.jpg)





-page-001.jpg)

