இயற்றியவர் - சிவஞானச் சுடர்
கலாநிதி பாரதி இளமுருகனார்
வாழ்நாள் சாதனையாளர்
வையத்தில்
வழங்கிவரும் வாழ்க்கைநெறி பலவற்றில்
உய்யும்வகை
உணர்த்திநின்று மன்பதையை உயர்த்துவதில்
மெய்யான
சமயமெங்கள் விடைக்கொடியன் முழுமுதலாய்ப்
பெய்வளையாள்
உமையோடு பேரருள்செய்; சைவமன்றோ?
முறைமைமிகு
சமயமென்று மூத்தமொழி தமிழ்கொண்டு
அறைகூவி
மகிழ்ந்திடுவேன்! அற்பன்யா னென்றாலும்
இறையோம்பி
ஏற்றநெறி இதுவென்றே போற்றுகின்றேன்!
நிறைவாகப்
பிறசமய நெறிகளையும் வரவேற்பேன்!
சிந்தைகவர்
சைவமதம் சிறந்ததெனச் சொல்வதற்கு விந்தையம்மா! சான்றுகளோ வேண்டுமட்டும் உண்டுகாண்பீர்!
அந்திரனாய் அநாதனென அநிமிடனாய் அநங்கனாய்
முந்தியென்றும்
சூல்காணாப்; பிறப்பிலிதான்
சிவபெருமான்!
கருவாகி
உருவெடுத்தோர்; ஐயிரண்டு மாதமதில்
உருவாகிப்
பிறப்போரை உண்மையான கடவுளென ஒருபோதும் சைவமதம் ஒல்லையென ஏற்பதில்லை!
அருபையென அநாதியான அனலாடி நம்கடவுள்!
சிறப்பையெலாம்
தன்னகத்தே தக்கவைத்த சோதியனாய்ப்
பிறப்பிறப்போ
என்றுமிலாப் பெருஞ்சோதிச் செழுஞ்சுடராய்
புறப்புறத்துச்
சமயத்தையும்; புரிந்துணர்வோ டுள்வாங்;கும்
அறங்காக்குஞ்
சைவத்தின் அங்கலிங்கம் சிவபெருமான்!
கல்லூரி
வகுப்பறையிற் காணுங்கட் டுப்பாடோ
கடும்ஒழுங்கு
வழிபாட்டு முறையமைப்போ இல்லாது
எல்லோரும்; ஆன்மீக முதிர்ச்சிக்கு
ஏற்றபடி
இயல்பாகச்
சுதந்திரமாய் இறைவணக்கஞ் செய்திடுவர்!
கண்மூடிக்
கைகூப்பி வணங்கிடுவோர் ஒருசாரார்!
கருத்திருத்திக்
கண்விழித்துக் குறையிருப்போர் ஒருசாரார்!
பண்ணிசைத்துத்
திருமுறையைப் பாடிடுவோர் ஒருசாரார்!
பலன்வேண்டித்
தியானித்துப் பதங்கேட்போர் ஓருசாரார்!
வீதிவலம்
சுற்றிவந்து விரதம்நிறை வேற்றுவோரும்
விரைவாக
வணங்கிப்பின் வேடிக்கை பார்ப்போரும்
நாதியில்லைக்
கதிநீயே காப்பாயென்; றழுவோரும்
நம்பிக்கை
இல்லாது நடிப்போருங் கூடுவார்கள்!
இயன்றவரை
பரம்பொருளைச் சரியைவழிப் புறத்திலேயும்
ஏற்றதிது
எனநினைந்து கிரியைவழி அகத்திலேயும்
முயன்றுநின்று
பலவிதமாய்த் தொழுவோர்கள் பலரெனினும்
மூவாமுதல்
யாவர்க்கும் முறைமையாய் அருள்வனன்றோ?.
விஞ்ஞானம்
ஆய்ந்தறிய வெகுகாலம் முன்னதாக
வேதமுதல்
அருள்பெற்ற மேதாவி ஞானியர்கள்
மெய்ந்ஞானத்
தாற்பலதை நுண்ணியமாய்க் கண்டறிந்த
வியப்பெங்கள்
சமயத்தின் மேன்மையெலாம் செப்பாதோ?
தென்நாடுடைச்
சிவனென்று போற்றியதொடு நிற்காமல்
எந்நாட்டிற்கும்
இறையான சிவனவனின் திருச்சிலையின்
மன்னுபுகழ்
தனையுணர்ந்து 'நாசா’முன்; மாட்சியுடன்
மறுசமயத்
தோர்கூடி வைத்ததொரு பெருமையன்றோ?
இன்னுமெங்கள்
சமயத்தின் எழிற்பெருமை எத்தனயோ!
இன்றென்னைத்
தமிழனாகப் பிறக்கவைத்த பாய்க்கியத்தால்
மன்னுசிவன்
தேசுபாடி மன்பதைக்கவன் அருள்வேண்டிச்
சைவனாக வாழ்வதற்கு
என்னதவஞ் செய்தேனோ?
ஜெனீவாவிலே காணப்படும் கண்ணையும்
கருத்தையும் ஈர்த்து உலகத்தோருக்கு உண்மையை விளக்கும் நடனமாடும் நடராசர்
சிலை. ( சிவதாண்டவ நிலை)
The famous
2-meter-tall Bronze statue of Lord Shiva as Nataraja (Lord of the Dance) is
located in front of the CERN (European Organization for
Nuclear Research) headquarters in Geneva, Switzerland this form of the dancing
Lord Shiva is known as the Nataraj and symbolises Shakti, or life force. As a
plaque alongside the statue explains, the belief is that Lord Shiva danced the
Universe into existence, motivates it, and will eventually extinguish it. Carl
Edward Sagan drew the metaphor between the cosmic dance of the Nataraj and the
modern study of the 'cosmic dance' of subatomic particles. Prof Carl Edward
Sagan was an American astronomer, planetary scientist and science communicator .





No comments:
Post a Comment