வாடகை வாகனத்தை அழைக்க சிலமுறை முயன்றும் பயனளிக்காததால் கையை அசைத்து வாகனத்தை கூப்பிடலாம் என்று முடிவு செய்தோம். ஒருசில வாகனங்கள் வந்தன. செயலி மூலம் மொழிமாற்றம் செய்து செல்லுவேண்டிய இடத்தைச் சொன்னேன். வெளிநாட்டினர் என்பதை புரிந்து கொண்டு நாங்கள் வரும்போது கொடுத்த பணத்தைப் போன்று மும்மடங்கு கேட்டனர். எல்லா இடங்களிலும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அந்த வாடகை வாகன ஓட்டுனர் எப்படிப்பட்ட கடும் உழைப்பாளி என்பதையும் கண்டு கொண்டேன். சீனாவில் கால் வைத்ததும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த வாகன ஓட்டுனர் முதன் முதலிலிலேயே சீனர்பால் நேர்மையின் காரணமாக நன் மதிப்பை ஏற்படுத்தினார். ஆனால் நான் கடைசியாக சந்தித்த வாடகை வாகன ஓட்டுனர் என் எண்ணத்தை மாசுபடுத்தும்படி நடந்தார்.
சரி இனிமேல் இந்த வழி கதைக்கு உதவாது என்று மாற்று வழி
ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன். நினைத்தேன் வந்தாய் நூறுவயது என்பதைப் போன்று ஒரு வழி நினைவில் வந்தது. அது என்ன வழி என்றால் ஏதாவது ஒரு கடைக்குள் நுழைவது அங்கு சில தேவையான பொருட்களை வாங்குவது. மாற்றுவழிக்கும் கடையில் பொருள் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களில் சிலர் நினைப்பது புரிகிறது.
ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன். நினைத்தேன் வந்தாய் நூறுவயது என்பதைப் போன்று ஒரு வழி நினைவில் வந்தது. அது என்ன வழி என்றால் ஏதாவது ஒரு கடைக்குள் நுழைவது அங்கு சில தேவையான பொருட்களை வாங்குவது. மாற்றுவழிக்கும் கடையில் பொருள் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களில் சிலர் நினைப்பது புரிகிறது.
உங்கள் நினைப்புக்கு பதில் சொல்கிறேன். பொருள் வாங்குவது மட்டுமல்லாமல் நம் பண்பாட்டுக் கதைகள் சொல்லிக் கொடுத்த வித்தையை களமிறக்குவதையும் செய்தேன். குழம்பாதீர்கள் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைத்ததைத்தான் சொல்கிறேன். உடனே நீங்கள் பணம் கொடுத்ததால் பொருள் கொடுத்தார் இதற்கு எப்படி வரம் கொடுத்ததை ஒப்பிடலாம் என்று கேட்காதீர்கள்.
வரம் என்ன சும்மாவா கொடுத்தார்? தவமிருந்ததால்தானே கொடுத்தார். அதுவும் கடுந்தவம். நானும் ஒரு பொருள் மட்டும் வாங்கவில்லை பலபொருட்களை பணம் கொடுத்து வாங்கினேன். வரம் பெற்றவன் வரம்கொடுத்தவர் தலையில் கைவைக்க முயன்றதும் ஓடினார். ஆனால் இங்கு கடைக்காரர் கடையைவிட்டு வெளிவந்து வாசல்வரை வந்தார்.
நாங்கள் நுழைந்தபின்னும் பொருட்களை வாங்கிய பின்னரும் அதே நிலைதான். நாங்கள் உதவிகேட்க ஆரம்பித்ததும் எங்களுக்கு உதவவிடாமல் ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். வந்தவர்களுக்கு பொருட்களை கொடுப்பாரா எங்களுக்கு உதவ செய்வாரா? நம்ம ஊராய் இருந்தால் போ போ முன்னுக்கு போப்பா என்று சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.
எதற்கும் ஒரு முகராசி வேண்டும். என் முகராசி அந்த கடைக்காரரிடம் ஒர்க் அவுட் ஆனதை என் மனைவியிடம் பெருமையாக சொன்னேன். கடையில் பொருட்கள் வாங்காவிட்டால் உங்க முகராசி தெரிந்திருக்கும். கூடுதலாக அவருக்கும் மூடநம்பிக்கை இருந்திருக்கும். மவராசன் கடையில் கால் வைத்ததும் வியாபாரம் சூடுபிடிக்கிறது என்றும் நினைத்திருக்கலாம் என்ற பதில் மனைவியிடமிருந்து வந்தது.
சரி, விசயத்துக்கு வருவோம் எனது கைபேசி மூலம் செயலியைப் பயன்படுத்தி எனக்கு ஒரு வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்து தரமுடியுமா? என்று உதவி கேட்டேன். சற்று தயங்கிய அவர் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு சற்று தாமதியுங்கள். ஆட்கள் வந்தவண்ணம் உள்ளனர் என்றார். பத்து நிமிடம் ஆனது பதினைந்து நிமிடம் ஆனது அவர் அசைவதாய் தெரியவில்லை.
அதன் பின் கல்லாவில் இருந்த மனைவியிடம் வருபவர்களிடம்
பொருளையும் பணத்தையும் பெறும்படி சொல்லிவிட்டு எங்களுக்கு உதவ முன்வந்தார். பணம் வாங்குவது ஒன்றும் பெரிய வேலையில்லை. எல்லோரும் போன்மூலமே பணம் கொடுக்கின்றனர். பொருட்களைத்தான் தேடி எடுத்துத்தர வேண்டும். கடைக்காரர் செயலி மூலம் இந்த நேரத்தில் இன்றுபோல் வியாபாரம் நடந்தில்லை என்று தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டார்.
பொருளையும் பணத்தையும் பெறும்படி சொல்லிவிட்டு எங்களுக்கு உதவ முன்வந்தார். பணம் வாங்குவது ஒன்றும் பெரிய வேலையில்லை. எல்லோரும் போன்மூலமே பணம் கொடுக்கின்றனர். பொருட்களைத்தான் தேடி எடுத்துத்தர வேண்டும். கடைக்காரர் செயலி மூலம் இந்த நேரத்தில் இன்றுபோல் வியாபாரம் நடந்தில்லை என்று தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டார்.
செயலியில் வாடகை வாகனர் ஓட்டுனர் கேட்ட பணத்தைக் காட்டினார். நான் அதற்கும் சற்று கூடுதலாக அவருக்கு பணம் கொடுத்தேன். இது லஞ்சம் ஆகாது. உதவிக்கு அன்பளிப்பு. புன்னகையுடன் பெற்றுக் கொண்டார். சிறிது நேரத்தில் வாகனம் வரவே கடையைவிட்டு வெளியேவந்து எங்களை வழியனுப்பி வைத்தார். திரும்பவும் சீனர்கள் என் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்தனர். அப்படி இல்லாவிட்டால் நம் முன்னோர்கள் சீனாவில் வியாபாரம் செய்திருப்பார்களா?
ஒரு வழியாய் எனது கடைசி நாள் பயணத்தை வாடகை வாகன ஓட்டுனர்களோடு எதிர் கொள்ளும் சவாலுக்கு முற்றுப் புள்ளி வைத்து முடித்தேன். தங்குமிடம் வந்ததும் மறுநாள் சீனாவை விட்டும் பிரிவதை எண்ணினேன். இந்தியாவில் இருந்தபோது இந்திய சீனப்போரால் மனதில் ஏற்பட்படுத்தப் பட்டிருந்த மாயை விலகுவதைக் கண்டேன்.
பண்டைத் தமிழர் சீனாவுடன் வியாபாரம் செய்ததையும் போதி தர்மன் சீனா வந்து தற்காப்புக் கலையை சீனர்களுக்கு கற்பித்ததையும் எண்ணிப் பார்த்தேன். நம் தமிழர் தடம் பதித்த மண்ணில் நானும் தடம் பதித்தேன் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். சீனா முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் வெகுநாட்கள் இருக்கவேண்டும்.
உடலையும் உணவையும் சமாதானம் செய்ய வேண்டும். உணவைச் சமாதானம் செய்ய முடியவில்லை. ஊரைச் சுற்றிப்பார்க்கும் ஆசையால் சுவையாக இருந்த நூடுல்ஸ் டம்ளிங் போன்ற சீன உணவுகளால் எங்களை சமாதானப்படுத்த முடியவில்லை. என்னதான் குளிரூட்டிய அறையில் பஞ்சுமெத்தையில் படுத்திருந்தாலும் வயலோரப் புங்கைமரத்தடியில் துண்டை விரித்து படுத்திருப்பது போலாகுமா?
பறவைகளின் சத்தத்துடனும் தூரத்தில் மின்விசை இயந்திரத்தால் கிணற்றிலிருந்து நீரை பாசணத்துக்காக வெளியேற்றும் சத்தமும் காதில் தாலாட்ட இலேசான காற்றுவருடிச் செல்லும்போதே கண் அயரும் சுகத்துக்கு ஈடாகுமா? கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே என்றல்லவா எண்ணத்தோன்றும்.
நாவிலுள்ள சுவை அரும்புகள் விழித்தெழுந்நு
இட்லி சாம்பார், வத்தக்குழம்பு சுட்ட அப்பளம், கொத்துரொட்டி மற்றும் இடியாப்பம் சம்பலை தேட ஆரம்பித்தன. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என்றபடி அந்தார பஜ்ஜியையும் ஜூந்தார சொஜ்ஜியையும் எண்ணி எந்தன் உள்ளம் எண்ணி எண்ணி ஏங்குதே என்று ஏங்க ஆரம்பித்தது.
எந்த ஊரானாலும் எந்தன் சொந்த ஊராகுமா? என்பதைப் போல மெல்பனைத் தேட ஆரம்பித்தத்து. வெகுநாளாய் காணாமல் போன மாடசாமி அண்ணாச்சி கண்ணெதிரே தோன்றி கனிமுகத்தைக் காட்டி என்னாது மெல்பன் உன் சொந்த ஊரா என்றார். அண்ணாச்சி நான் பிறந்த ஊரைக்காட்டிலும் நான் வளர்ந்த ஊரைக்காட்டிலும் நான் வாழ்ந்த ஊரைக்காட்டிலும் நான் வாழும் ஊரான மெல்பனில்தான் அதிக ஆண்டுகள் இருக்கிறேன் என்றேன். அண்ணாச்சி அமைதியானார்.
பொழுது புலர ஆரம்பிக்க முதல்நாளே ஹோட்டல் மூலம் பேசி ஏற்பாடு செய்திருந்த வாடகை வாகனமும் வந்தது. இதுவரை பழகிக் களி(ழி)த்த பீஜிங் ஓட்டலையும் எங்கள் அறையையும் பணியாளர்களையும் விட்டுப் பிரியும்போது எதையோ இழப்பதுபோல் இருந்நது. வாகனம் எங்கள் சுமந்தபடி பீஜிங்கின் மற்றொரு பன்னாட்டு விமானநிலையமாள டாக்ஸிங் விமான நிலையத்தை நோக்கி விரைந்தது.
பீஜிங் டாக்ஸிங் விமான நிலைய சோதனகளைக்கடந்து விமானத்தில் அமர்ந்தோம். பீஜிங்கிலும் ஷியானிலும் மற்றும் பல இடங்களிலும் பயணித்து களித்திருந்த இனிய நினைவுகளை சுமந்தபடி நாங்கள் இருக்கையில் இருக்க விமானம் வானில் ஏறிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். சீனாவின் தலைநகரான அந்த மிகப் பெரிய நகரம் கொஞ்ச நேரத்தில் சிறிது சிறிதாக என் கண்ணிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.
(நிறைவுற்றது)
-சங்கர சுப்பிரமணியன்.
.png)

.jpg)
No comments:
Post a Comment