என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
உன்னைத் துதிக்கையிலே நெஞ்சில்
உன்மத்தம் உணர வைத்தாய்
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
பெருமைமிகு தமிழே - உயிரே
பேராண்மை பெற்றவளே
நிறையுறு வாழ்வியலே - என்றும்
நிலைபெறு பேரமுதே!
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
சங்கத் தமிழழகே - உயிரே
சாதனை படைத்தவளே
உந்தன் செழுமை கண்டு உன்னில்
என் உயிரும் இணைகிறதே
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
உன் பெருமை சொன்னால் - உள்ளம்
களியாட்டம் கொள்ளுதம்மா
மெச்சி உனை புழ்ந்தால் - மனமும்
மோகனம் கொள்ளுதம்மா
எண்ணத்தில் நீ உறைந்தால் - அதுவும்
இன்பமாய் இனிக்குதம்மா
வண்ண மலர்களைப்போல் - உயிரே
கண்ணைக் கவருதம்மா
உன்னைப் பழி சொன்னால் என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதம்மா
என் வாழ்வே நீயன்றோ? - உயிரே
என்னுயிர் தமிழன்றோ!
என்னுயிர் தமிழன்றோ!!
என்னுயிர் தமிழன்றோ!!!
-சங்கர சுப்பிரமணியன்.
செந்தமிழ்ச் செம்மொழியே!
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
உன்னைத் துதிக்கையிலே நெஞ்சில்
உன்மத்தம் உணர வைத்தாய்
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
பெருமைமிகு தமிழே - உயிரே
பேராண்மை பெற்றவளே
நிறையுறு வாழ்வியலே - என்றும்
நிலைபெறு பேரமுதே!
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
சங்கத் தமிழழகே - உயிரே
சாதனை படைத்தவளே
உந்தன் செழுமை கண்டு உன்னில்
என் உயிரும் இணைகிறதே
என் அருமைத் தமிழே - உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
உன் பெருமை சொன்னால் - உள்ளம்
களியாட்டம் கொள்ளுதம்மா
மெச்சி உனை புழ்ந்தால் - மனமும்
மோகனம் கொள்ளுதம்மா
எண்ணத்தில் நீ உறைந்தால் - அதுவும்
இன்பமாய் இனிக்குதம்மா
வண்ண மலர்களைப்போல் - உயிரே
கண்ணைக் கவருதம்மா
உன்னைப் பழி சொன்னால் என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதம்மா
என் வாழ்வே நீயன்றோ? - உயிரே
என்னுயிர் தமிழன்றோ!
என்னுயிர் தமிழன்றோ!!
என்னுயிர் தமிழன்றோ!!!
-சங்கர சுப்பிரமணியன்.
.jpg)
No comments:
Post a Comment