-சங்கர சுப்பிரமணியன்.
நடைப்பயிற்சி உடலநலம் காக்குமென
விளையாட்டு ஆசிரியர் தினமும் சொல்வார்
பூங்காக்களில் சிலர் நடைபயிற்சி செய்வர்
தினம் பயிற்சி செய்வதைக் கண்டுவத்தேன்
அதற்கென்று உள்ள கால்சட்டை அணிவர்
காலணிகளையும் தவறாமல் அணிந்திடுவர்
காலை மாலை கைகளை மிக வேகமாகவே
வீசி வீசி விரைவாக நடந்து பயிற்சி செய்வர்
அண்டைவீட்டு மாமா நடைபயிற்சி செய்வார்
காலையும் மாலையும் கட்டாயமாய் செய்வார்
கால்சட்டையின்றி லுங்கியோடுதான் பயிற்சி
காலணி அணியாமல் செருப்புடனே பயிற்சி
கால்சட்டை கலணியென எதுவும் வேண்டாம்
பயிற்சிதான் அவசியமென்று எண்ணினேன்
மாமாவின் செயலால் பெருமையில் மிதந்தேன்
அக்கம் பக்கம் பலரிடம் சொல்லி மகிழ்ந்தேன்
பொய்யகல நாளும் புகழுரைத்தல் என்னபயன்
வையகம் போர்த்த வலங்கொலி நீர்போல
உண்மையை ஒருநாள் நானும் உணர்ந்தேன்
மாமா நடைபயிற்சி எதுவும் செய்யவில்லை
அரைகல் தொலைவில் இருக்கும் கடையில்
தேநீர் குடிக்கவே தினமும் அவர் செல்கிறார்
காலையும் மாலையும் விடாமல் செல்கிறாரே
நடைபயிற்சிக்கு புது இலக்கணமா குதம்பாய்!
விளையாட்டு ஆசிரியர் தினமும் சொல்வார்
பூங்காக்களில் சிலர் நடைபயிற்சி செய்வர்
தினம் பயிற்சி செய்வதைக் கண்டுவத்தேன்
அதற்கென்று உள்ள கால்சட்டை அணிவர்
காலணிகளையும் தவறாமல் அணிந்திடுவர்
காலை மாலை கைகளை மிக வேகமாகவே
வீசி வீசி விரைவாக நடந்து பயிற்சி செய்வர்
அண்டைவீட்டு மாமா நடைபயிற்சி செய்வார்
காலையும் மாலையும் கட்டாயமாய் செய்வார்
கால்சட்டையின்றி லுங்கியோடுதான் பயிற்சி
காலணி அணியாமல் செருப்புடனே பயிற்சி
கால்சட்டை கலணியென எதுவும் வேண்டாம்
பயிற்சிதான் அவசியமென்று எண்ணினேன்
மாமாவின் செயலால் பெருமையில் மிதந்தேன்
அக்கம் பக்கம் பலரிடம் சொல்லி மகிழ்ந்தேன்
பொய்யகல நாளும் புகழுரைத்தல் என்னபயன்
வையகம் போர்த்த வலங்கொலி நீர்போல
உண்மையை ஒருநாள் நானும் உணர்ந்தேன்
மாமா நடைபயிற்சி எதுவும் செய்யவில்லை
அரைகல் தொலைவில் இருக்கும் கடையில்
தேநீர் குடிக்கவே தினமும் அவர் செல்கிறார்
காலையும் மாலையும் விடாமல் செல்கிறாரே
நடைபயிற்சிக்கு புது இலக்கணமா குதம்பாய்!
No comments:
Post a Comment