கந்தக் கடவுள் கருணையின் வடிவமே ! - கந்தசஷ்டிப் பிரார்த்தனை

 















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்         

மெல்பேண் …. அவுஸ்திரேலியா



வதைக்கும் எண்ணம் கொண்டவன் அல்ல 

வளங்கும் எண்ணம் கொண்டவன் வேலன் 

சினத்தை அடக்குவான் சிறப்பைக் கொடுப்பான் 

சிங்கார வேலன் திருவருட் செல்வன்


ஆணவம் கொண்டால் அடக்கியே நிற்பான் 

அடியினைப் பரவினால் அணைத்தே மகிழ்வான் 

அன்புடன் வேண்டினால் அனைத்தும் அருளுவான் 

அரனார் மைந்தன் அழகன் குமரன்


 குன்றைத் தேர்ந்து அமர்ந்தான் குமரன் 

குறைகள் களைந்திட வருவான் குமரன் 

கன்றைத் தேடும் தாய்மனம் கொண்டவன் 

கந்தக் கடவுள் கருணையின் உருவே !


No comments: