மொழி தமிழாய் தாயாய் என்னோடு உள்ளது!


-சங்கர சுப்பிரமணியன்.




மொழி அம்மா என அழைக்க வைத்தது
மொழி அகரத்தை முதன்மை ஆக்கியது
மொழி வள்ளுவனை மொழியச் செய்தது
மொழி முப்பாலை படைத்தும் நின்றது

மொழி எனை இலக்கியவழி நடத்தியது
மொழி இன உணர்வையும் தந்துள்ளது
மொழி வரலாற்றின் பெருமை பேசியது
மொழி இன்று காக்கும் நிலையில் உளது

மொழி உயிரொடும் ஊணொடும் கலந்தது
மொழியைக் காப்பது நம் கடமை ஆனது
மொழி வேற்று மொழியையும் படைத்தது
மொழி பிறமொழியில் வேர்ச்சொல் ஆனது

மொழி இழந்தால் என் இனத்தை இழப்பேன்
மொழி இறந்தால் நானும் இறந்தவனாவேன்
மொழி சிறக்க செதுக்கியோரை மறவேன்
மொழி என்னைச் செதுக்கவும் பணிவேன்

மொழி அது அன்னை என்னொடு பேசியது
மொழி அதனை எனக்கு ஆசான் கற்பித்தது
மொழி எமக்கு அமுதாய் இனிக்கிறதெனில்
மொழி தமிழாய் தாயாய் என்னோடு உள்ளது!



No comments: