வள்ளி மணாளன் மஞ்சத்தில் வருகிறான்உள்ளம் உருகிட திருமுறை ஒலிக்கிதுகள்ளம் களைய கந்தன் வருகின்றான்மெள்ளவே மஞ்சம் வீதியிலே வருகிறதுவாடிய பயிரென நின்றிடு மடியார்வாட்டம் போக்கிட மஞ்சத்தில் வருகிறான்நாடிடும் அடியார் கூடியே குவிகிறார்வேலவன் மஞ்சம் மெள்ளவே வருகிதுமஞ்சம் பார்த்திட மங்கையர் வருகிறார்தம்பிகள் தங்கைகள் கூடவே இணைகிறார்அப்பாவும் அம்மாவும் அரோகரா என்கிறார்அரனார் மைந்தன் மஞ்சத்தில் வருகிறார்காளையர் கன்னியர் கந்தனின் மஞ்சத்தைகாதலில் கரைந்து கைகூப்பி நிற்கிறார்வாழ்வினில் வசந்தம் வந்திட அவரும்வேலவன் அருளை வேண்டியே நிற்கிறார்வீதிகள் எங்கணும் அடியவர் வெள்ளம்வேலவன் மஞ்சம் மெள்ளமாய் வருகிதுபேதங்கள் அனைத்தும் பறந்துமே போகபெரும் பொருளாகி முருகனே தெரிகிறான்மஞ்சம் பார்க்க வந்திடு மடியவர்தஞ்சம் என்றே எண்ணியே வருகிறார்நெஞ்சம் நிறைய நிம்மதி தருவான்கந்தக் கடவுள் என்றே குவிகிறார் !
No comments:
Post a Comment