இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்
பாலஸ்தீன அதிகாரிகளிற்கு வீசா வழங்கப்போவதில்லை - தடைகளையும் விதிப்போம் - அமெரிக்கா
ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை-இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து
பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? - இந்திய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்
இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்
Published By: Rajeeban
28 Jul, 2025 | 10:38 AM
காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை தீவிரசிகிச்சை குழந்தைநோயியல் மருத்துவம் இருதயவியல் போன்றவற்றில் நீண்டகால அனுபவம்மிக்க மருத்துவ ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என தெரிவித்துள்ளது.
இவர்களில் 21 பேர் 400நாட்களிற்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு ஜூலைமாதத்தின் பின்னர் மூன்று மருத்துவசுகாதார பணியாளர்களை இஸ்ரேல் கைதுசெய்துள்ளது என தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக இஸ்ரேல் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது.
பலசுகாதார மருத்துவ பணியாளர்கள் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பகுதிகளில் வைத்து இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவத் அல்செர் இவர்களை வெளியுலக தொடர்பின்றி பல மாதங்களாக தடுத்துவைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அவர்களிற்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகளை இஸ்ரேல் மறுக்கின்றது,அவர்கள் மிகமோசமான விதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கபட்டுள்ள மருத்துவர்கள் மருத்துவசுகாதார பணியாளர்களை விடுதலை செய்யவேண்டு;ம் என இஸ்ரேல் வலியுறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்குவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள அதேவேளை காசாவில் மருத்துவ ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பசிபட்டினி ஊட்டச்சத்து குறைபாடு காயமடைந்தவர்களிற்கு மருத்துவகிசிச்சைவழங்க முடியாத அளவிற்கு அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது என மருத்துவர்கள் கார்டியனிடமும்,புலனாய்வு இதழியலிற்கான அராபிய செய்தியாளர்கள் அமைப்பிடமும் தெரிவித்துள்ளனர்.கடந்த பெப்ரவரியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களை கார்டியன் வெளியிட்டிருந்தது.அவர்கள் தாங்கள்தாக்கப்பட்டதாக சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இஸ்ரேலிய படையினரால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் காசாவின் வடபகுதியில் உள்ள கமால் அத்வான் மருத்துவனையின் இயக்குநர் மருத்துவர் ஹ_சாம் அபு சபியாவும் ஒருவர்.அவர் கடந்த டிசம்பரில் கைதுசெய்யப்பட்டார்.
அவர் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார், அவரது உடல்நிலை மோசமடைகின்றது என இந்த வாரம் அவரது சட்டத்தரணிகள் ஸ்கைநியுசிற்கு தெரிவித்திருந்தனர். நன்றி வீரகேசரி
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்
27 Jul, 2025 | 10:52 AM
அவசரமருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை பிரிட்டன் வான்வழியாக போடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் ஆகியொருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது இதனை தெரிவித்துள்ள அவர் அவசரகிசிச்சை தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவது மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் போடுவது போன்றவற்றை ஜோர்தானுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இஸ்ரேல் காசாவில் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலை பயங்கரமானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை பிரிட்டன் முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இடம்பெறும் விடயங்கள் குறித்து பிரிட்டிஸ் மக்கள் மனவேதனையில் உள்ளனர் என்பது எனக்கு தெரியும், காசாவில் காணப்படும் பட்டினிநிலையை காண்பிக்கும் படங்கள் மிகவும் பயங்கரமானவையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அவசரமாக மருத்துவஉதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றோம்,அதிகளவு பாலஸ்தீன சிறுவர்களை பிரிட்டனிற்கு விசேட சிகிச்சைக்காக கொண்டு செல்லவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாலஸ்தீன அதிகாரிகளிற்கு வீசா வழங்கப்போவதில்லை - தடைகளையும் விதிப்போம் - அமெரிக்கா
01 Aug, 2025 | 01:37 PM
பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாலஸ்தீன மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த அமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் அவற்றிற்கு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசாவை வழங்கப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பல நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டு;ள்ளது. நன்றி வீரகேசரி
ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை-இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து
Published By: Rajeeban
29 Jul, 2025 | 10:41 AM
ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர்.மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினரும் யூதகுடியேற்றவாசிகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களை விபரிக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இவர் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
ஹெப்ரோனிற்கு அருகில் உள்ள உம் அல் கெய்ர் பாலஸ்தீனிய கிராமத்தின் மீது யூதகுடியேற்றவாசிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டார் என பாலஸ்தீன அதிகார சபையின் கல்வியமைச்சு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
நோ அதர் லாண்டினை உருவாக்கிய வேறு இருவரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
இன்றுகாலை எனது நண்பர் அவ்டா படுகொலை செய்ய்பட்டார் என பாலஸ்தீன பத்திரிகையாளர் பசெல் அட்ரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலஸ்தீனிய சமூக செயற்பாட்டாளரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலியர்
அவர் தனது கிராமத்தில் நின்றுகொண்டிருந்தவேளை யூதகுடியேற்றவாசியொருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் அது அவரது உயிரை குடித்தது என அவர் பதிவிட்டுள்ளார்.இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக என அவர் பதிவிட்டுள்ளார்.
ஹடாலின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வீடியோவையும் பதிவிட்டுள்ள அவர் நன்றி வீரகேசரி
பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? - இந்திய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்
28 Jul, 2025 | 05:25 PM
புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார்.
மக்களவையில் பேசிய அவர் “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இறையாண்மையின் அடையாளமாகும். எங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்காகவே இருந்தன.
ஆத்திரமூட்டும் அல்லது எல்லையை கைப்பற்றும் நோக்கங்களுக்காக அல்ல. இருப்பினும் மே 10 2025 அன்றுஇ அதிகாலை 1.30 மணியளவில் பாகிஸ்தான் ஏவுகணைகள் ட்ரோன்கள் ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. நமது எஸ்-400 ஆகாஷ் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தன. இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 22 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ஆயுதப்படை ஒன்பது பயங்கரவாத தளங்களின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
மே 10 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்களில் இந்திய விமானப்படை கடுமையாகத் தாக்கியபோது பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு போர் நிறுத்தத்துகுக்கு முன்வந்தது. அப்போது இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் பாகிஸ்தானின் தரப்பில் ஏதேனும் தவறு நடந்தால் இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும்.
ஆபரேஷன் சிந்தூர் என்பது பிரதேசத்தைக் கைப்பற்றவோ அல்லது போரை தூண்டவோ தொடங்கப்படவில்லை மாறாக சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கவும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கவும் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.
எங்களின் ராணுவ நோக்கத்தை அடைந்ததால் போரை நிறுத்தினோம். எந்தவொரு அழுத்தத்தாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கூறுவது ஆதாரமற்றது முற்றிலும் தவறானது. எனது அரசியல் வாழ்க்கையில் நான் எப்போதும் பொய்களைப் பேசுவதில்லை” என்றார்
மேலும் “எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நமது விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்வி நமது தேசிய உணர்வுகளைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது ஆயுதப் படைகள் எத்தனை எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்ற கேள்வியையே அவர்கள் கேட்க வேண்டும். இந்தியா எதிரிகளின் பயங்கரவாதத் தளங்களை அழித்ததா என்றால் பதில் ஆம் என்பதுதான். நீங்கள் ஒரு கேள்வி கேட்பதாக இருந்தால் இந்த நடவடிக்கையில் நமது துணிச்சலான வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதுதான். இதற்கான பதில் இல்லை என்பதுதான். நமது வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை” என்றார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment