தமிழில் வெளிவரும் சிறந்த இலக்கிய மாத இதழ் கலைமகள்.
நூற்றாண்டை நோக்கி நடை போடும் கலைமகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறுகதை காணிநிலம். பூவை எஸ் . ஆறுமுகம் எழுதிய இந்த கதை 1975ம் வருடம் சொந்தங்கள் வாழ்க என்ற பேரில் படமாக வெளியானது.
படத்துக்கு திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கியவர் மதுரை திருமாறன். இவர் இயக்கிய சூதாட்டம், வாயாடி, திருடி, ரோஷக்காரி ஆகிய படங்களில் நிரந்தர நாயகியாக கே. ஆர் விஜயா நடித்து வந்த கால கட்டத்தில் இந்தப் படத்தில் அவர் நடிக்காமல் அவருக்கு பதில் கதாநாயகியாக ஜெயசித்திரா நடித்திருந்தார். காரணம் படத்தின் ஹீரோயின் ஒரு கல்லூரி மாணவி!
கிராமத்தில் அரசியல் தலைவராக கோலோச்சுகிறார் நாகலிங்கம்.
ஆலயத் தலைவராக செல்வாக்குடன் விளங்குகிறார் கோயில் தர்மகர்த்தா. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மனைவியை இழந்த தர்மகர்த்தா மறுமணம் செய்யாமல் தன் ஒரே பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார். அவரின் மகளான பூங்கொடி பிடிவாதம் மிக்கவள். ஊர் மக்கள் தன் தந்தைக்குத் தான் முதல் மரியாதையை செய்ய வேண்டும் என்று எல்லா இடத்திலும் வற்புறுத்துகிறாள். நாகலிங்கத்தின் மகன் குமாரோ தன் தந்தைக்குத்தான் முதல் மரியாதையை என்று வலியுறுத்துகிறான். பெரியவர்கள் இருவரும் இதில் ஆர்வம் காட்டாத போதும் பிள்கைகளின் தொல்லை பெரும் பாடாக மாறுகிறது. பூங்கொடியின் வற்புறுத்தலால் தேர்தலில் நாகலிங்கத்தை எதிர்த்து தர்மகர்த்தா போட்டியிடுகிறார். ஆனால் அரசியல்வாதியான நாகலிங்கம் சூழ்ச்சி செய்து தர்மகர்த்தா மீது திருட்டு பட்டமும், தாசி தாசன் என்ற பழியையும் சுமத்தி அவரை தேர்தலில் இருந்து ஒதுங்க செய்கிறார். இதற்கு பழி வாங்கும் முகமாக குமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பூங்கொடி பஞ்சாயத்தில் குற்றம் சாட்டுகிறாள். இதன் காரணமாக குமார், பூங்கொடி திருமணம் நடக்கிறது. ஆனால் இருவரும் தாம்பத்திய உறவின்றி விலகியே இருக்கிறார்கள். இவர்கள் இணைந்தார்களா என்பதே மீதிக் கதை.

இந்த மெயின் கதையோடு ஒரு கிளைக்கதையும் படத்தில் இடம்
பெற்றது. தேவதாசி குலத்தில் பிறந்த தன் மகளுக்கு முருகன் சன்னிதானத்தில் பொட்டு கட்டி நேர்ந்து விடுகிறாள் தாய். அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஒரு உப கதை.

படத்தில் பூங்கொடியாக வரும் ஜெயசித்திரா பாத்திரத்துடன் பொருந்துகிறார். எல்லோருடனும் ஏட்டிக்கு போட்டியாக பேசுவதும், கணவனை மட்டம் தட்டுவதுமாக பாத்திரத்தின் தன்மையறிந்து நடித்திருந்தார் அவர். குமாராக வரும் ஜெய்சங்கரின் நடிப்பும் கவனத்தை கவர்கிறது. ஆனாலும் வி கே ராமசாமி, சுந்தரராஜன் இருவரும் தான் படம் முழுவதும் நிறைகிறார்கள். இவர்களுடன் எம் என் ராஜமும் இணைகிறார். சில காட்சிகளில் மட்டும் வரும் சண்முகசுந்தரம் கவனத்தை கவர்கிறார்.
நகைச்சுவைக்கு என்று மனோரமா, சோ, தேங்காய் சீனிவாசன்,
சுருளிராஜன், டைபிஸ்ட் கோபு என்று ஒரு கூட்டமே இயங்குகிறது. சோவின் சில பொடி வைத்த வசனங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. மனோரமாவின் நடிப்பு அசத்தல். இந்தப் படத்தில் சி ஐ டி சகுந்தலா இருந்தும் கவர்ச்சி நடனம் இல்லை. அதற்கு பதில் அழகர்மலை தேவனுக்கு நான் அடிமை என்ற பாடலுக்கு கோயிலில் சதிராடுகிறார்.

கண்ணதாசன், வாலி இயற்றிய பாடல்களுக்கு கே வி மகாதேவன் இசை தரமாக அமைந்தது. ஸ்ரீ சண்முக எனக்கொரு சந்தேகம், சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தம் அல்ல கண்ணா, இலை விட்டு கனி விட்டு மலர் விட்ட பூமி பாடல்கள் கேட்க இனிமை.என் எஸ் வர்மா படத்தை ஒளிப்பதிவு செய்தார்.
மதுரை திருமாறனின் வசனங்கள் சில இடங்களில் கருத்துடன் வந்து விழுந்தன. தந்தை மீதான அபரிதமான அன்பு, அந்தஸ்து, ஆணவம், கணவன் மனைவி பிணக்கு, தாசி வீட்டில் இடம் பெறும் விவகாரங்கள் என்று பல விஷயங்களை கோர்த்து திரைக் கதை அமைத்து இயக்கி இருந்தார் திருமாறன்.
புதிய தயரிப்பாளரான நமசிவாயம் படத்தை தயாரித்திருந்தார்.
படத்தை வெளியிடும் நாளன்று படப் பிரதிகளை விஜயா லேபிலிருந்து எடுப்பதற்கு அவரால் பணத்தை புரட்ட முடியவில்லை. மதுரை திருமாறன் தன் வீட்டிலிருந்த நகைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து ஒரு பட விநியோகஸ்தரிடம் அடமானம் வைத்தும் பண முடை நீடித்தது. அதன் போது கதாசிரியர் கலைஞானம் தான் உருவாக்கியிருந்த கணவன்மனைவி என்ற கதையை ஒரு தயாரிப்பாளரிடம் அடமானம் வைத்து 15 ஆயிரம் ரூபாய் வாங்கி அதனை கொடுத்து படத்தின் பிரதிகளை லேபில் இருந்து பெற வழி வகுத்தார்! சொந்தங்கள் வாழ்க!

No comments:
Post a Comment