சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 29 பேர் படுகாயம்
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம்
பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை நீடிப்பு
கராச்சியும் வெள்ளத்தில் மூழ்கியது; 10 பேர் பலி
சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !
Published By: Priyatharshan
19 Aug, 2025 | 07:18 AM
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில்,
"பல நல்ல விவாதங்களையும், நல்ல பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தோம். பல வழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கான ஏற்பாடுகளைத் ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கான ஒரு "வரலாற்று படி" என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் – புட்டின் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் என்பதற்கான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச சமூகம் இந்தச் சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 29 பேர் படுகாயம்
18 Aug, 2025 | 09:22 AM
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (17) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 5.8 ரிச்டராக பதிவாகியுள்ளது.
சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 29 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம்
23 Aug, 2025 | 02:13 PM
சுதந்திர வர்த்தகத்தின் முழுப் பலன்களையும் அமெரிக்கா அறுவடை செய்து வருவதாகவும் இப்போது வரிகளை மிரட்டும் கருவியாக பயன்படுத்துவதாகவும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் மேலும் தெரிவிக்கையில்,
மௌனம், அச்சுறுத்துபவர்களை மேலும் வலிமையாக்குகிறது. சீனா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும். சீன சந்தையில் அதிகமான இந்திய பொருட்கள் வரவேற்கப்படுகின்றன.
மின்னணு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்தியா-சீனா சந்தைகள் ஒன்றிணைந்தால், அது பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். சீனாவில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சீன நிறுவனங்களுக்கு இந்தியாவும் இதேபோன்ற சலுகையை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சீனத் தூதர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை நீடிப்பு
Published By: Digital Desk 3
22 Aug, 2025 | 09:34 AM
இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7 ஆம் திகதி இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா. இதற்குப் பதிலடியாக, பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்களும் இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்தியத் தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 23 வரை நீட்டித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து இந்திய விமானங்களுக்கு ஏப்ரல் 23 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி
கராச்சியும் வெள்ளத்தில் மூழ்கியது; 10 பேர் பலி
Published By: Vishnu
21 Aug, 2025 | 03:20 AM
பாகிஸ்தானின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கராச்சி, இந்த நாட்களில் நாட்டைத் தாக்கும் பலத்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அங்குள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக குறைந்தது 10 பேர் இறந்துள்ளனர், மேலும் இப்பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பருவமழை பாகிஸ்தான் முழுவதும் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு மலைகளைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது, மேலும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையைக் காணவில்லை என்று அந் நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment