எம் ஜி ஆர் நடித்து வெற்றி பெற்ற தெய்வத் தாய் படத்துக்கு வசனம்
எழுதியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கே. பாலசந்தர். அந்தப் படத்தை டைரக்ட் செய்தவர் பி. மாதவன். தெய்வத் தாய் வெற்றி பெற்ற போதும் அதன் பிறகு பாலசந்தரும், மாதவனும் மீண்டும் எம் ஜி ஆருடன் இணைந்து வேறு படங்களில் பணியாற்றவில்லை. எம் ஜி ஆரை அணுசரித்துப் போவதில் உள்ள சிரமங்களை எண்ணி இரண்டு பட்டதாரி இளைஞர்களும் அவரை விட்டு ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஆனாலும் இவர்கள் இருவரும் இணைந்து சிவாஜியின் படம் ஒன்றில் பணியாற்றினார்கள். மாதவன் இயக்க பாலசந்தர் கதை வசனம் எழுதி உருவான அந்தப் படம் தான் நீலவானம்.
அறுபதாண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தில் தனது
சொந்த தியேட்டரான சாந்தியின் சிவாஜி டிக்கெட் கிழிப்பவராக ஒரு காட்சியில் நடித்திருந்தார். அது மட்டுமன்றி இந்தப் படத்தில் சிவாஜிக்கு இரண்டு காதலிகள் இருந்தும் டூயட் இல்லை. அதே போல் சிவாஜியும், பாலசந்தரும் இணைந்த முதல் படமும், விசுவநாதன் தனித்து இசையமைக்கத் தொடங்கிய பின் சிவாஜிக்கு இசையமைத்த முதல் படமும் இதுவேயாகும்.

செல்வந்தர் குடும்பத்தில் ஒரே மகளாகப் பிறந்து செல்லமாக வாழ்பவள் கௌரி. திருமணம் செய்து குழந்தைக்கு தாயாக வேண்டும் என்பது அவளின் ஆசை. வெகுளித் தனமும், அப்பாவித்தனமும் கொண்ட அவளை தன்னிடம் வேலை பார்க்கும் வசதி குறைந்த பாபுவுக்கு கல்யாணம் செய்து வைக்க பிரயத்தனம் செய்கிறார் சோமநாதன். அதற்கு காரணம் இருக்கிறது. பாபுவின் கல்விக்கு உதவியவர் சோமநாதன். அதனால் அவனின் இந்த உதவியை அவர் எதிர்பார்க்கிறார். அதுமட்டுமன்றி கௌரிக்கு புற்று நோய் இருப்பதையும், அவள் வாழப் போவது சில காலம் என்பதையும் அறிந்து நொருங்கிப் போகும் சோமநாதனும், அவர் மனைவி கமலாவும் இந்தத் தீர்மானத்துக்கு வருகிறார்கள். பாபு ஏற்கனவே விமலாவை காதலிக்கிறான். ஆனாலும் சோமநாதனின் நிலையறிந்து கௌரியை மணக்க சம்மதிக்கிறான். கௌரி, பாபு கல்யாணம் நடக்கிறது. தனக்கு குழந்தை பேறு இல்லை என்பதையோ, புற்று நோய் இருப்பதையோ அறியாத கௌரி பாபுவை மனதார நேசிக்கிறாள். பாபுவோ அவள் நிலை எண்ணி துன்பத்தில் துடிக்கிறான் . இதனிடையே பாபுவின் பழைய காதலி விமலா அடிக்கடி அவன் வாழ்வில் குறுக்கிட்டு தொல்லை தருகிறாள். கௌரியின் நோயை குணமாக்க பாபு செய்யும் முயற்சி பலித்ததா என்பதே படத்தின் முடிவு.
படத்தின் உயிர்நாடி கௌரியாக வரும் தேவிகாதான் . என்னே நேர்த்தியான நடிப்பு. அப்பாவித்தனம், வெகுளித்தனம், படபடப்பு, நாணம் , சோகம் என்று பல வித குணாதிசியங்களை தன் நடிப்பின் மூலம் பறைசாற்றியிருந்தார் தேவிகா. ஆரம்பத்தில் கலகலப்பாக வருபவர் பிறகு தன் உண்மை நிலை அறிந்து அழும் போது ரசிகர்களையும் கலங்கடிக்கிறார். 1965ம் ஆண்டு தேவிகாவின் நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகின. அவற்றுள் அவர் நடிப்பில் உச்சம் தொட்டது இந்தப் படத்தில்தான். அது மட்டுமன்றி அறுபதாம் ஆண்டுகளின் முற் பகுதிகளில் நட்சத்திர நடிகையாக வலம் வந்த தேவிகா இந்தப் படத்துக்கு பிறகு மெல்ல மெல்ல தன் பட வாய்ப்புகளை தமிழில் இழக்கத் தொடங்கினார். ஆனாலும் நீலவானம் அவருக்கு ஒரு முத்திரைப் படம்தான்.
சிவாஜி , தேவிகா, ராஜஸ்ரீ இருவருக்கும் இடையில் இருந்து
அல்லாடுகிறார். ஓ லிட்டில் பிளவர் சி யுவர் லவர் பாடலில் ராஜஸ்ரீயுடன் இணைந்து ரொமான்ஸாக ஆடுகிறார். பட முடிவில் ரசிகர்களை கவனத்தை நடிப்பினால் பெறுகிறார். எஸ். வி . சகஸ்ரநாமம், சீதாலஷ்மி இருவரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஆனால் நாகேஷ், வி. கே. ராமசாமி, ஹரிகிருஷ்ணன் மூவரும் நகைச்சுவை என்று செய்யும் அசட்டுத்தனங்கள் படத்தின் தரத்தை கெடுக்கிறது.

தான் முதல் முதலாக டைரக்ட் செய்த நீர்க்குமிழி படத்தில் கதாநாயகனுக்கு புற்று நோய் என்று கதையமைத்த பாலசந்தர் , தான் கதை வசனம் எழுதிய இந்தப் படத்தில் கதாநாயகிக்கு அதே நோயை கொடுத்திருந்தார். படத்தில் அவரின் வசனங்கள் மெச்சும் படி அமைந்தன.
அன்னை இல்லம் வெற்றி படத்தைத் தொடர்ந்து நீலவானத்தை இயக்கினார் பி. மாதவன். இந்தப் படங்களின் மூலம் சிவாஜி மனதில் இடம் பிடித்த மாதவன் அடுத்து வந்த ஆண்டுகளில் சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராக மாறி அவரின் பல படங்களை இயக்கினார். அதே போல் பாலசந்தரும் இயக்குனராக உச்சம் தொட்டார்.
No comments:
Post a Comment