உலகச் செய்திகள்

 பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம்

காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்

உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்


பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

25 Jul, 2025 | 02:57 PM

பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகபதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மத்தியகிழக்கில் நீதியான நிரந்தர சமாதானம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்;ளார்.யுத்தநிறுத்தம் மற்றும் அனைத்து பயணக்கைதிகளும் விடுதலை ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ள அவர் நாங்கள் பாலஸ்தீன தேசத்தை கட்டியெழுப்பவேண்டும்,அதன் நம்பகதன்மையை  ஏற்றுக்கொண்டு, அதனை இராணுமயப்படுத்தலில் இருந்து விடுவித்து,இஸ்ரேலை முழுமையாக அங்கீகரிப்பது பிராந்தியத்தில் உள்ள அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவும் என அவர் தெரிவித்துள்ளார்   நன்றி வீரகேசரி 

 

இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம்

22 Jul, 2025 | 01:26 PM

இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து  சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பெண்களும் குழந்தைகளும் மோதல்இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில் வைத்தே அவர்களது ஆடைகளைந்து விசாரணை செய்தனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவதுகாசாவின் நடுப்பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில்உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீதான தாக்குதல்கள்இ அங்கு தங்கியிருந்தவர்களை தவறாக நடத்துதல் மற்றும் அதன் முக்கிய  பண்டகசாலைஅழிக்கப்பட்டதை றுர்ழு வன்மையாகக் கண்டிக்கிறது

இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு டெய்ர் அல் பலாவில் அதிகரித்த மோதலை தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்களின் வீடு  மூன்று முறை தாக்கப்பட்டது. வான்வழித் தாக்குதல்கள் தீ மற்றும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் உட்பட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையான ஆபத்தில் இருந்தனர் மற்றும் அதிர்ச்சியடைந்தனர்.இஸ்ரேலிய இராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து தீவிர மோதல்களுக்கு மத்தியில் பெண்களையும் குழந்தைகளையும் அல்-மவாசி நோக்கி கால்நடையாக வெளியேற கட்டாயப்படுத்தியது.

 ஆண் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கைவிலங்கு போடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சம்பவ இடத்திலேயே விசாரித்து துப்பாக்கி முனையில் சோதனை செய்யப்பட்டனர். இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர் அதே நேரத்தில் ஒரு ஊழியர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்   நன்றி வீரகேசரி 




காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

22 Jul, 2025 | 11:25 AM

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட  பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதையும் கண்டித்துள்ளனர்.மனிதாபிமான உதவி பொருட்களை பெற முயன்ற 800 பொதுமக்கள் கொல்லப்பட்டமை பயங்கரமானது என தெரிவித்துள்ள 25 நாடுகளும் இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு பயன்படுத்தும்முறை ஆபத்தானது இது ஸ்திரமின்மையை உருவாக்குவதுடன் காசா மக்களின் மனிததன்மையை பறிக்கின்றது என தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 




இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்

Published By: Rajeeban

21 Jul, 2025 | 04:12 PM

தென்காசாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலா நகரத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் தரை மற்றும் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் இந்த நகரத்திலேயே உள்ளனர் என ஊகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கடும் ஆட்டிலறி மற்றும் வான்தாக்குதலின் மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவவாகனங்கள் இந்த நகரத்தை நோக்கி செல்வதாக உள்ளுர் ஊடகவியலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

டெய்ர் அல் பலா நகரின் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள முதலாவது தரை நடவடிக்கை இது.

கடந்த 21 மாதங்களாக இந்த நகரத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தரைநடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதமை குறிப்பிடத்தக்கது.

இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர் மேலும் காசாவின் ஏனைய பகுதிகளை விட இந்த நகரத்தில் கட்டிடங்களிற்கு குறைவான 

இந்த நகரில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஒருவருடத்திற்கு முன்னர் காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னர் ஐநாவினது அலுவலங்களும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் அலுவலகங்களும் டெய்ர் அல் பலா நகரத்திலேயே இயங்குகின்றன.   நன்றி வீரகேசரி 




உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்

Published By: Rajeeban

21 Jul, 2025 | 02:26 PM

இஸ்ரேல் உணவுவிநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நான்குவயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள்.

பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த சிறுவர்களில் ரசானும் ஒருவர் .மூன்று மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை  வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரசானை சிஎன்என் ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தித்தது,அவ்வேளை அவள் ஏற்கனவே பட்டினியால் பலவீனமானவளாக உடல் மிகவும் மெலிந்தவளாக காணப்பட்டாள்.

சிறுமியின் தாயார் தஹிர் அபு டகெர் பால்மா வேண்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார்.

யுத்தத்திற்கு முன்னர் அவளது உடல்நிலை சிறப்பானதாக காணப்பட்டது,ஆனால் யுத்தம் ஆரம்பித்த பின்னர் மந்தபோசாக்கு காரணமாக அவளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது,அவளை வலுப்படுத்துவதற்கு எதுவுமில்லை என தாயார் தெரிவித்திருந்தார்.   நன்றி வீரகேசரி 


No comments: