உலகச் செய்திகள்

கடும் மோதலில் முடிவடைந்த டிரம்ப் ஜெலென்ஸ்கி சந்திப்பு – வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் உக்ரைன் ஜனாதிபதி

விமானதாக்குதல் - விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார் டிரம்ப் - யாரை இலக்குவைப்பது என்பதை தளபதிகளே தீர்மானிக்கலாம்

யுத்த நிறுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்த அச்சத்திற்கு மத்தியில் காசாவில் குளிரினால் குழந்தைகள் இறக்கின்றன- என்பிசி நியுஸ்

பாலஸ்தீன மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்இஸ்ரேலிய சிறைச்சாலைகளில்- கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல்போயுள்ளனர்

ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் - ஜேர்மனியின் புதிய சான்சிலர் மேர்ஸ்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு 



கடும் மோதலில் முடிவடைந்த டிரம்ப் ஜெலென்ஸ்கி சந்திப்பு – வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் உக்ரைன் ஜனாதிபதி 

01 Mar, 2025 | 08:51 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை இருவரும் உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டையும் இரத்து செய்தது.

ரஸ்யாவுடனான உடன்பாட்டிற்காக உக்ரைன் விட்டுக்கொடுப்புகளிற்கு தயாராகயிருக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த பின்னரே இருவரும் கடுமையாக உரையாட தொடங்கினார்கள்.

விட்டுக்கொடுப்பின்றி எந்த உடன்பாட்டிற்கும் வரமுடியாது நிச்சயமாக நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்யப்போகின்றோம் ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது போல அது பெரியதல்ல என டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை சந்திப்பின்போது அமெரிக்கஜனாதிபதி டிரம்பும் துணை ஜனாதிபதி ஜேடிவான்ஸ் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார்கள் என தெரிவித்துள்ள சர்வதேச செய்திகள் உக்ரைன் ஜனாதிபதி பிரச்சார பயணங்களில் ஈடுபடுகின்றார் என குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ளன.

நீங்கள் தற்போது நல்ல நிலையில் இல்லை என டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது நன்றி தெரிவித்திருக்கின்றீர்களா என வான்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்திற்கு வந்து உங்கள் நாடு அழிக்கப்படுவதை பாதுகாக்க முயலும் நாட்டை விமர்சிப்பது மரியாதைக்குரிய விடயம் என கருதுகின்றீர்களா என டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கேட்டுள்ளார்.

அதன் பின்னர் கடும் எச்சரிக்கையுடான காலக்கெடுவை விதித்த டிரம்ப் உக்ரைன் உடன்பாட்டிற்கு வரவேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் விலகுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகும் உக்ரைனிற்கான ஆயுதஉதவியை நிறுத்தும் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் என்ன மாதிரி உணர்கின்றோம் என தெரிவிக்கவேண்டாம்,நாங்கள் பிரச்சினைக்கு தீர்வை காணமுயல்கின்றோம் நாங்கள் என்ன செய்யவேண்டும் என தெரிவிக்கும் நிலையில் நீங்கள் இல்லை,நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளப்போகின்றீர்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புட்டின் தனது முதலாவது பதவிக்காலத்தின் போது அரசியல் குற்றவியல் பிரேரணை மோசடி தொடர்பில் என்னுடன் பெரும் நரகத்தை எதிர்கொண்டார்,அவர் உடன்பாட்டிற்கு வரவிரும்புகின்றார் நீங்கள் உடன்பாட்டிற்கு வர தயாரா என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் உங்களை துணிச்சலானவராக மாற்றினேன்,அமெரிக்கா இல்லாமல் இவர் துணிச்சலானவராக காணப்படுவார் என நான் கருதவில்லை,ஆனால் நீங்கள் உடன்பாட்டிற்கு வரப்போகின்றீர்கள் அல்லது நாங்கள் வெளியேறுகின்றோம் நாங்கள் வெளியேறினால் நீங்கள் தனித்து போரிடவேண்டிவரும்,ஆனால் அது அவ்வளவு சிறந்ததாகயிருக்காது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி நன்றி உணர்வுடன் நடந்துகொள்கின்றார் இல்லை என தெரிவித்து டிரம்ப் அந்த சந்திப்பை நிறைவு செய்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





விமானதாக்குதல் - விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார் டிரம்ப் - யாரை இலக்குவைப்பது என்பதை தளபதிகளே தீர்மானிக்கலாம் 

Published By: Rajeeban

28 Feb, 2025 | 11:36 AM
image

cbs news

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் காலத்தில் விமானதாக்குதல் இராணுவநடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் தளர்த்தியுள்ளார்.

வான்தாக்குதல்கள் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க தளபதிகள் உத்தரவிடுவது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள டிரம்ப் யாரை இலக்குவைக்கலாம் என்ற பட்டியலை விரிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் இது பாரிய கொள்கை மாற்றம் என குறிப்பிட்டுள்ளனர்.

அமைதியான ஆனால் பாரிய அதிர்வுகளை  ஏற்படுத்தக்கூடிய இந்த மாற்றம் ஜோபைடன் காலத்தின் உத்தரவுகளை செயல்இழக்கச்செய்துள்ளது.

மேலும் டிரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்தில் வெளிப்படுத்திய கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு திரும்பியுள்ளார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் சமீபத்தில் தனது முதலாவது வெளிநாட்டுபயணத்தினை மேற்கொண்டவேளை ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின் ஆபிரிக்காவிற்கான கட்டளைதலைமையின் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தார்,அவ்வேளை வான்வழித்தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினரை பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆவணத்தில் அவர் கைசாத்திட்டார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் வான்தாக்குதல்கள் அமெரிக்காவின் விசேட படையினரின்நடவடிக்கைகள் தொடர்பில் விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளை அகற்றியுள்ளது நெகிழ்ச்சி தன்மையை வழங்கியுள்ளது,என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள்,யாரை இலக்குவைப்பது என தீர்மானிபதற்கான அதிகாரத்தை தளபதிகளிற்கு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் தங்கள் பெயர்விபரங்களைவெளியிடாமல் அமெரிக்க அதிகாரிகள் இதனை சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

ஜோபைடனின் யுத்தகால கொள்கைள் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தின் கொள்கைகளே என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பைடனின் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் சிரேஸ்ட தலைவர்களை இலக்குவைத்தே தாக்குதல் இடம்பெற்றது.   நன்றி வீரகேசரி 





யுத்த நிறுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்த அச்சத்திற்கு மத்தியில் காசாவில் குளிரினால் குழந்தைகள் இறக்கின்றன- என்பிசி நியுஸ் 

Published By: Rajeeban

27 Feb, 2025 | 12:31 PM
image

குழந்தைகளிற்கான போர்வையில் போர்த்தப்பட்டு தந்தையின் அரவணைப்புடன் ஷாம் அல் சான்பாரி,இரண்டுகிழமைக்கு முன்னர் மிகவும் கடினமான முயற்சியின் பின்னர் சாத்தியமான யுத்த நிறுத்தம் காரணமாக காசாவில் ஒரளவு அமைதி நிலவிய இரண்டு கிழமைக்கு முன்னர் உலகிற்கு வந்தார்.

எனினும் காசா யுத்தம் அவளின் உயிரையும் பறித்தது.

திங்கட்கிழமை இரவு காசாவில் சமீபத்தில் கடும் குளிரினால் உயிரிழந்த ஏழு குழந்தைகளில் ஒருவராகஷாம் அல் சான்பாரி மாறினாள்.சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

அவளது குடும்பம் ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்கள் போல கடும் குளிரில் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களால் அவர்களின் வீடுகள் வாழமுடியாதவையாக மாற்றப்பட்ட பின்னரே அவர்கள் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.

நள்ளிரவு குழந்தையின் தாயார் அவளை உறங்கச்செய்தார் என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி என்பிசி செய்தியாளர்களிற்குஇதனை தெரிவித்தார்.

காசாவின் வடக்குகிழக்கில் உள்ள பெய்ட் இன் கனூனில் அவர் இதனை தெரிவித்தார்.

காலையில் அவளை நாங்கள் எழுப்ப முயன்றோம் அவள் எழும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

தனது மகளின் சிறிய உடல் சிறிய புதைகுழிக்குள் வைக்கப்படுவதை பார்த்தபடி அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரகாலப்பகுதியில் கடும் குளிரால் மேலும் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன என காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார்.

காசாவில் வீடுகள் அழிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் ஏனைய தற்காலிக தங்குமிடங்களிலும் உறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சிலா அப்துல் காதர் என்ற இரண்டு வயது குழந்தையே இறுதியாக கடும்குளிர் காரணமாக உயிரிழந்தது என  பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார்.

எனது மகள் இறப்பதற்கு முன்னர் 100 வீதம் ஆரோக்கியமானவளாக காணப்பட்டாள்,விளையாடினால் வழமை போல சிரித்தால் என என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி தெரிவித்தார்.

ஆனால் நான் கூடாரத்தில் வசிக்கின்றேன் கடும் குளிர் அவள் எப்படி உயிர் தப்பமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

காசாவில் கடந்த ஒருவாரகாலமாக இரவில் குளிர் 10டிகிரிக்கும் குறைவானதாக காணப்படுகின்றது,என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

குழந்தைகள் குளிரினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.

ஒருவருடத்திற்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் முற்றாக அழிந்துள்ளன. இதன் காரணமாக உயிரை பாதுகாப்பதற்காக அடிப்படை மருத்துவ வசதிகளை காசா மக்கள் பெறுவது கூட சாத்தியமற்ற விடயமாகியுள்ளது.

காசாவில் பாடசாலைகள்மருத்துவமனைகள் உட்பட 70 வீதமான உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,65வீதமான வீடுகளும் வீதிகளும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஒக்டோபர் 2023ம் திகதி ஒக்டோபர் மாதம் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 48300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு இரண்டுவயது குழந்தையாவது உயிரிழந்துள்ளதை பதிவு செய்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த பாலஸ்தீனியர்களிற்கான மருத்துவ உதவி என்ற பிரித்தானிய அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

குளிர் காரணமாகவே அந்த குழந்தை உயிரிழந்தது,குளிர் பாதிப்பு காரணமாக மேலும் மூன்று குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 





பாலஸ்தீன மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்இஸ்ரேலிய சிறைச்சாலைகளில்- கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல்போயுள்ளனர் 

Published By: Rajeeban

26 Feb, 2025 | 02:41 PM
image

பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்  இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்  இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு  குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.

162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மருத்துவ அரசசார்பற்ற அமைப்பான சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவின் சிரேஸ்ட மருத்துவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்இமோதல்களின் போது மருத்துவமனைகளில் கைதுசெய்யப்பட்ட24 பேர் காணாமல்போயுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் உட்பட பெருமளவு சுகாதார பணியாளர்களை தடுத்துவைத்திருப்பது சர்வதேச சட்டங்களின் சட்டவிரோதமான செயல் என சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவாத் அல்செர் தெரிவித்துள்ளார்.

மருத்துவநிபுணத்துவம் பராமரிப்பு போன்றவற்றை மறுப்பது பொதுமக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இந்த விதத்தில் இலக்குவைப்பது பாலஸ்தீன மக்களிற்கான சுகாதார சேவை மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் பெரும் துன்பங்கள் நிகழ்கின்றன இ தடுத்திருக்ககூடிய உயிரிழப்புகள் பல நிகழ்கின்றனஇமருத்துவ நிபுணத்துவம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது  என தெரிவித்துள்ளார்.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் 297 சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உறுதி செய்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் எத்தனை பேர் விடுதலை செய்ய்பட்டனர்  என்ற புள்ளிவிபரங்கள் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்ற தகவலின் பின்னரே உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினரால் டிசம்பரில் கைதுசெய்யப்பட்ட கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹ_சாம் அபு சபியாவினை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணியொருவர் ரமல்லாவில் உள்ள ஒவர் சிறைச்சாலையில் வைத்தியரை சந்திப்பதற்கு தனக்கு முதல் தடவை அனுமதி வழங்கப்பட்டதாகவும் தான் சித்திரவதை செய்யப்பட்டேன்,தாக்கப்பட்டேன்தனக்கு மருத்துவசிகிச்சை மறுக்கப்பட்டது என மருத்துவர் தெரிவித்தார் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹ_சாம் அபு சபியா கைதுசெய்யப்பட்டமைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

பலமருத்துவர்கள் தாங்கள் மருத்துவமனைகளில் அம்புலன்ஸ்களில் சோதனை சாவடிகளில் கைதுசெய்யப்பட்டதாக கார்டியனிற்கும்,புலனாய்வு செய்திகளிற்கான அராபிய செய்தியாளர்கள் அமைப்பிற்கும் தெரிவித்துள்ளனர்.

தங்களை சட்டவிரோதமாக இஸ்ரேலில் உள்ள சிறைச்சாலைகளிற்கு மாற்றியதாகவும்,பல மாதங்கள் சித்திரவதை செய்ததாகவும்,தாக்கியதாகவும்பட்டினி போட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும் பின்னர் குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் விடுதவைல செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பில் நான் அனுபவித்த விடயங்கள் குறித்து நான் எவ்வளவு தெரிவித்தாலும் நான் அனுபவித்த விடயங்களில் அரைவாசியாகவே அது காணப்படும் என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அபு செல்மியா தெரிவித்தார்.

.அவரை பல மாதங்கள் தடுத்துவைத்திருந்த இஸ்ரேலிய படையினர் குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் விடுதலை செய்தனர்.

'நான் துப்பாக்கியால் தாக்கப்படுவதை பற்றி நாய்கள் கடிக்கவிடுவது பற்றி குறிப்பிடுகின்றேன்,சிறிதளவு கூட உணவில்லை, சுகாதாரம் இல்லை,சிறைக்கூண்டுகளிற்குள் சோப் இல்லை,நீர்இல்லை கழிவறையில்லை, அங்கு மரணித்துக்கொண்டிருப்பவர்களை நான் பார்த்தேன்,என்னை மிகமோசமாக தாக்கினார்கள் என்னால் நடக்க முடியவில்லை சித்திரவதை இல்லாமல் எந்த நாளும் இல்லை" என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அபு செல்மியா தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 





ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் - ஜேர்மனியின் புதிய சான்சிலர் மேர்ஸ் 

Published By: Rajeeban

24 Feb, 2025 | 01:53 PM
image

ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ்  அமெரிக்காவிடமிருந்துசுதந்திரம் பெறவேண்டும் என  தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர்  ஐரோப்பா சுதந்திரமாகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டையும் அவர் கண்டித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகமும் எலொன் மஸ்க்கும் ஜேர்மனியின் அதிதீவிர வலதுசாரிகளிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவை வலுப்படுத்துவதே எனது மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம் எனதெரிவித்துள்ளஅவர் இதனை கூடியவிரைவில் செய்யவேண்டும், அமெரிக்காவிடமிருந்து படிப்படியாக நாங்கள் சுதந்திரத்தை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

நான் இப்படி ஒரு கருத்தை தொலைக்காட்சிகளிற்கு தெரிவிக்கவேண்டிய நிலைவரும்,என ஒருபோதும் நினைக்கவில்லை  என தெரிவித்துள்ள மேர்ஸ் கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்கா அல்லது அதன் தற்போதைய நிர்வாகம்,ஐரோப்பாவின் தலைவிதி குறித்து அலட்சியமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பிரீடிரிச் மேர்ஸின் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி ( அல்டனேர்ட் ஜேர்மன் கட்சி) 20.8 வீதவாக்குகள் கிடைத்தள்ளன.

பழையபாணி கென்சவேர்ட்டிவும்  . இதுவரை  அரசபதவிகளை வகிக்காதவருமான மேர்ஸ்; ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் அதிக சனத்தொகை கொண்ட நாட்டிற்கும் தலைமைதாங்கவுள்ளார்.   நன்றி வீரகேசரி 





உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு 

25 Feb, 2025 | 10:16 AM
image

உக்ரைன் மீது ரஸ்யா போரை ஆரம்பித்து மூன்று வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை ரஸ்யா மீறியுள்ளதை கண்டிக்கும் விதத்தில் ஐக்கியநாடுகள் பொதுச்சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஸ்யாவுடன் அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.

இதன் பின்னர் உக்ரைன் மோதலிற்கு முடிவை காணவேண்டும் என தெரிவிக்கும் ஆனால் ரஸ்யாவை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ரஸ்யாவும் அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளன.

பாதுகாப்பு சபையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை அமெரிக்காவின் இரண்டுநெருங்கிய சகாக்களான பிரிட்டனும் பிரான்சும் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






No comments: