அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி ( 02 ஆம் பாகம் ) மின்னூல் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இம்மாதம் அமேசன் கிண்டிலில் வெளியாகிறது.
இதன் வெளியீட்டு அரங்கு
இம்மாதம் ( மார்ச் ) 15 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் இடம்பெறும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாதுமாகி – முதலாம் பாகத்தின்
மின்னூலை வெளியிட்டிருக்கும் முருகபூபதி, இந்த ஆண்டு மீண்டும், அதன் இரண்டாம்
பாகத்தினை வெளியிடுகிறார்.
முதல் பாகத்தில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றனர்.
குறிப்பிட்ட நூலை தற்போதும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.
எதிர்வரும் மார்ச் மாதம்
வெளியாகவிருக்கும் யாதுமாகி
( இரண்டாம் பாகத்தில் )
( அமரர்கள்
)
யோகா பாலச்சந்திரன், மகேஸ்வரி சொக்கநாதர்
, பாக்கியம் பூபாலசிங்கம், கமலி ஞானசுந்தரன்,
பராசக்தி சுந்தரலிங்கம் , கலாலக்ஷ்மி தேவராஜா,
சங்கீத கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன், மற்றும்
,
புஸ்பராணி தங்கராஜா, கலையரசி சின்னையா, ஞானலக்ஷ்மி ஞானசேகரன், ஆனந்தராணி பாலேந்திரா, மெல்பன் மணி , யோகேஸ்வரி சிவப்பிரகாசம் , சந்திரகௌரி சிவபாலன், ரேணுகா தனஸ்கந்தா , சாந்தி சிவக்குமார் , விஜயலக்ஷ்மி இராமச்சந்திரன் , நவஜோதி யோகரட்ணம், பூங்கோதை – கலா ஶ்ரீரஞ்சன், கவிஞி அனார், தேவகி கருணாகரன் , சூரியகுமாரி ஶ்ரீதரன் பஞ்சநாதன் , தேவகௌரி சுரேந்திரன் , சியாமளா யோகேஸ்வரன் , வசந்தி தயாபரன் , உஷா ஜவகார் , பத்மா இளங்கோவன், ராணி சீதரன் , சுபாஷினி சிகதரன் , சிவநேஸ் ரஞ்சிதா ஆகியோரின் கலை, இலக்கிய, கல்வி, சமூக தன்னார்வத் தொண்டுப்பணிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நூல் கலை, இலக்கியவாதி ( அமரர் ) அருண். விஜயராணி
அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
யாதுமாகி ( இரண்டாம் பாகத்தின்
) முகப்பு ஓவியத்தை மெல்பனிலிருந்து ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம், மற்றும் அக்கினிக்குஞ்சு
யாழ். பாஸ்கர் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
சிறுகதை, நாவல், கட்டுரை,
பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு
சாராத பத்தி எழுத்துக்கள் , திறனாய்வு முதலான துறைகளில் எழுதிவந்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான்
யாதுமாகி ( இரண்டாம் பாகம்
)
இந்நூல் பற்றிய வாசிப்பு
அனுபவ உரைகளை எழுத்தாளர்கள் கான. பிரபா, அசோக், பாடும் மீன் ஶ்ரீகந்தராசா, நொயல் நடேசன், ஜே.கே.
ஆகியோர் நிகழ்த்துவர்.
கிறிஸ்டி நல்லரெத்தினம் தலைமையில் இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியா - கன்பரா தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) தமோ.
பிரம்மேந்திரன் ஒருங்கிணைத்துள்ளார்.
மெய்நிகரில் இணைந்துகொள்பவர்களின் கலந்துரையாடலைத் தொடர்ந்து நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.
இலங்கையில் பாரதி, வாழும் வரலாறு மல்லிகை ஜீவா, பாரதி தரிசனம் ,The Mystique of
Kelani River ( ஆங்கில மொழிபெயர்ப்பு ) ஆகிய முருகபூபதியின் இதர நூல்களையும் அமேசன் கிண்டிலில்
தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.
மெய்நிகர் இணைப்பு:
அவுஸ்திரேலியா
நேரம்: இரவு 07 – 00 மணி
இலங்கை – இந்தியா நேரம் : மதியம் 1-30 மணி
இங்கிலாந்து நேரம் : காலை 8-00 மணி
நியூசிலாந்து நேரம் : இரவு 9-00 மணி
ஜெர்மனி – பிரான்ஸ் நேரம் :
காலை 9-00 மணி
கனடா நேரம் : அதிகாலை 3-00 மணி
----0----

%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.jpg)
%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg)
%20%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg)
%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.jpg)


.jpg)


No comments:
Post a Comment