December மாதம் 1ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவிருக்கும் சிலப்பதிகாரமாநாட்டில் மாலை 5:30 மணிக்கு பெரும் திரளான மக்கள் முன்னிலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.
நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை, டிசம்பர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் 3வது சர்வதேசச் சிலப்பதிகார மாநாடு நடைபெறவுள்ளது. இம் மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
2000 ஆண்டுகளுக்க முன் தமிழரின் பெருமைகளை முதன்முதலில் உலகிற்கு எடுத்துரைத்த நூல் சிலப்பதிகாரம். நமது வருங்காலச் சந்ததியினர் இதனை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே எமது இலக்காகும். தமிழின் இனிமையையும, எமது கலாசாரத்தையும் வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகும்.
வெளிநாடுகளிலிருந்து பெயர் பெற்ற அறிஞர்களும், பேச்சாளர்களும், புகழ்பெற்ற கலைஞர்களும், பேராசிரிகளும், வருகை தந்து இம்மநாட்டைச் சிறப்பிக்கவுள்ளார்கள். சிலப்பதிகாரம் சம்பந்தமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன.
அத்துடன் உள்நாட்டு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும், பேச்சாளர்களின் ஆழம் நிறைந்த சொற்பொழிவுகளும், இடம் பெறவுள்ளன. மேலும் சிட்னியில் உள்ள தமிழ்க் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் சிலப்பதிகாரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. உங்கள் குடும்பத்துடன் இரு நாட்களும் வருகை தந்து, நடைபெறஇருக்கும் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டு மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் வருகை எமக்குப் பெருமையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
No comments:
Post a Comment