-சங்கர சுப்பிரமணியன்.
ஒரே முறைதான் என்னை பார்ததாய்கண்களை நேர்கோட்டில் சந்தித்தாய்
ஒரே ஒரு நொடிப் பார்வைதான் அது
என் உள்ளமதை கொள்ளையிட்டாய்
கொள்ளை கொண்டது மட்டும் அல்ல
என் மனமதில் குடியேறியும் விட்டாய்
நான் உன் கண்களை பார்க்கும்போது
ஏன் இப்படி நீ நாடகம் நடத்துகிறாய்
நேராக கண்களை பார்க்க மறுக்கிறாய்
என் கண்கள் அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததா
சொல்லேன் நானும் அறிந்து கொள்கிறேன்
ஒருமுறை மேல் மறுமுறை கீழென பார்ப்பதா
நேராக பார்த்தால் நானும் உன் மனதி்ல்
குடி புகுந்து விடுவேன் என்ற அச்சமா?
குடியேறினால் பாதுகாக்க பயமாயுள்ளதா
நெஞ்சில் குடியேறிவிட்ட உன்னை நான்
கீழே சிறிதுநேரம் மட்டும் இறக்கிவைப்பேன்
பயப்படாதே மறுபடி மனதினுள் வைப்பேன்
சிவன் சிறிது நேரம் தலையில் இருப்பவளை
கீழிறக்கி தன் முடியை சரி செய்வதுபோல்
உன்னையும் கீழிறக்கி உன்னோடு பேசுவேன்
அப்போது நீ கண்களை திருப்ப இயலாது
உன்முகத்தை கையில் ஏந்திப் பிடிப்பேன்
உன்கண்களை என்னுடன் நேர் செய்வேன்
No comments:
Post a Comment