மரண அறிவித்தல்

 

திருமதி. சந்திரா வரதராஜா


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும், கண்டி பெண்கள் உயர் பாடசாலையின் முன்னாள் விஞ்ஞான ஆசிரியையுமான திருமதி. சந்திரா வரதராஜா அவர்கள் 11.07.2024 அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் அம்பலவாணர் நாராயணபிள்ளை, ரத்னவதி தம்பதிகளின் அன்பு மகளும், சகுந்தலாவின் அன்புச் சகோதரியும், காலம்சென்ற வரதராஜாவின் ஆருயிர் மனைவியும் கந்தசாமி நாகநாதர், வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மருமகளும், கமலினி, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், உதிஷ்ரன் ராமதிலகம், அருந்ததி ஆகியோரின் ஆருயிர் மாமியாரும், அஷுவினி, சஞ்சீவ், ஆர்னா, ஆருஷி ஆர்தனா ஆகியோரின் பாசமுள்ள பேத்தியாரும், காலம்சென்ற ஜெயரட்னம் கந்தையா, காலம்சென்ற கணேஷராஜா, காலம்சென்ற நாகநாதர்,பத்மநாதன், காலம்சென்ற மங்கையர்கரசி  ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆவார்.

 அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம்:

காலம்: 14th July 2024 (Sunday)

நேரம்: காலை 9 மணிமுதல் 9.30மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து கிரிகைகள் நடைபெற்று 11 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இடம்: Magnolia Chapel

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113

 தொடர்பு: கமலினி (மகள்) 0425 353 400 ; மயூரன் (மகன்) 0434 004 158


No comments: