இறைவன் சுதர்சன மூர்த்தி தனது குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றவர். எனவே ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்வதன் மூலம் அறியப்படாத உடல்நலக் கஷ்டங்கள், தீய கண் பார்வைகள், எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஸ்ரீ சுதர்சன மகா யாகம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் காலை 8 மணிக்கு விஸ்வக்சேன பூஜை, புண்யாவசனம், கலச பிரதிஷ்டையுடன் பூஜை விதானம் துவங்கி ஸ்ரீ சுதர்சன மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, ஸ்ரீ சுதர்சன மூர்த்தி மற்றும் ஸ்ரீ யோக நரசிம்மர் அலங்காரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஷோடஷோபசார தீபாராதனையுடன் ஸ்ரீ சுதர்ஷன உத்ஸவ உற்சவர் கோவில் வளாகத்தில் ஊர்வலம் நடக்கிறது.
No comments:
Post a Comment