கட்டுரை - கலக்கமடைகின்றனவா தமிழ் தேசியவாத கட்சிகள்?

 


உள்ளூராட்சி தேர்தலை காரணம் காண்பித்து – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னத்துக்கு உரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சி – தேர்தல் முறைமையை முன்வைத்து தனித்து போட்டியிடும் தீர்மானத்தை அறிவித்தது.
உள்ளூராட்சி தேர்தல் என்பதால் வெள்ளோட்டம் ஒன்றை ஓடிப் பார்ப்பதில் கட்சிகள் மத்தியில் தடுமாற்றங்கள் இருக்கவில்லை.
உளளூராட்சித் தேர்தலில் தங்களின் செல்வாக்கை எடைபோட முடியுமென்றே அனைவரும் எண்ணினர் – ஆனால்இ தற்போது நிலைமைகள் தங்களுக்குப் பாதகமாகிவிடுமோ – என கட்சிகளின் தலைவர்கள் அச்சப்படுவதுபோல் தெரிகின்றது.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற பின்னர் – விரைவாக பாராளுமன்ற தேர்தலொன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் நிச்சயம் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை.
ஜனாதிபதி – மற்றும் பாராளுமன்றம் இவைகள் உறுதியான நிலையை அடைந்த பின்னரே ஏனைய தேர்தல்கள் நடைபெறும்.
இந்த நிலையில் கட்சிகளின் தலைவர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில் தங்களின் வெற்றி வாய்ப்பு தொடர்பில் கலக்கமடைந்திருக்கின்றனர் எனத் தெரிகின்றது.
இதனால்இ கூட்டணியில் இருப்பவர்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால்இ தாங்களாக இதனை கூறாமல் மற்றவர்களைக்கொண்டு பேச வைப்பதற்கும் அவர்கள் முயற்சிக்கக்கூடும்.
தமிழ்த் தேசியவாத கட்சிகள் அனைத்துமே தேர்தல் மைய கட்சிகள்தான்.
தேர்தல் வெற்றியில்லாவிட்டால் தங்களால் அரசியலில் நிலைகொள்ள முடியாதென்பதில் அனைவருமே தெளிவாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலை தனித்தனியாக எதிர்கொண்டால் – நிச்சயமாகஇ தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற சிலர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பில்லை.
இதேவேளை தமிழ் தேசியவாத கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் – அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் தமிழ் கட்சிகள் பலமடைவதற்கான வாய்ப்பே அதிகம் உண்டு.
2020இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மோசமான பின்னடைவுகளை சந்தித்திருந்தது.
அரசாங்க ஆதரவு தமிழ் கட்சிகள் கூடுதலான ஆசனங்களை பெற்றிருந்தன.
மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஒருவர் மட்டக்களப்பில் வெற்றிபெறும் நிலைமை உருவாகியது.
தமிழ்த் தேசியவாத கட்சிகளைப் பொறுத்த வரையில் இது மோசமானதொரு பின்னடைவாகும்.
இவ்வாறான பின்புலத்தில்தான் தற்போது பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கலக்கமொன்று ஏற்பட்டிருக்கின்றது.
தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து செயல்படுவதில் பிரச்னையில்லை.
ஆனால்இ கட்சிகளின் தலைமைகள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் மக்களை முட்டாளாக்கும் நோக்கில் அமையக்கூடாது.
ஓர் ஐக்கிய முன்னணி தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் சிந்திப்பார்களாயின் அதில் தவறில்லை.
அதனை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால்இ வெறுமனே ஒரு சிலரின் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுமாயின் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
தமிழ் தேசியவாத கட்சிகள் மேற்கொள்ளும் தீர்மானமானது குறுகிய கால – நீண்டகால அடிப்படையில் மக்களின் நலனை கருத்தில்கொள்வதாக இருக்கவேண்டும்.   நன்றி ஈழநாடு 

No comments: