தனது சொந்தக் காதலை சொல்லாமல் போன ஜானகி!

 November 5, 2023 12:16 pm 

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை அமைப்பில் அதிகமான பாடல்களை பாடிய ஜானகியின் காதல் பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்தவையாகும்.

ஜானகி என்று அவரை சொல்வதை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் அவரை ஜானகி அம்மா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார். பல பேர் காதலுக்கு மருந்தாக இவருடைய பாடல்கள் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் காதலித்த நபரிடம் அவருடைய காதலை சொல்லவே இல்லையாம்.

ஜானகி ஆரம்ப காலகட்டத்தில் மேடை பாடகியாக இருந்தபோது ராம் பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் யார் என்றால் ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன் தானாம். ஆனால் அவர் தன்னுடைய தந்தையிடம் ஜானகியின் திறமை வெறும் இசை கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. சினிமா பாடல்களில் பாட வைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம். அவரின் ஆலோசனையில்தான் சென்னைக்கு வந்து ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இப்படி தன்னுடைய இசைப்பயணம் தொடங்க காரணமாக இருந்த ராம் பிரசாத் மீது ஜானகிக்கு ஆரம்பத்தில் நட்பு இருந்த நிலையில் பிறகு காதலாக மாறி இருக்கிறது.

எத்தனையோ கதாநாயகிகளின் காதலை அழகாக வெளிப்படுத்திய ஜானகி தன்னுடைய காதலை ராம்பிரசாத்திடம் சொல்லவே இல்லையாம். ஆனால் இவர்களுடைய வீட்டில் இவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகும் ஜானகிக்காக ரெக்கோர்டிங் போது கூடவே இருப்பாராம். அந்த அளவிற்கு மனைவியின் வெற்றியை பார்த்து ரசித்த வந்த ராம் பிரசாத் 1997 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார். அதுபோல ஜானகி- ராம் பிரசாத் தம்பதிகளுக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். அவரும் ஹைதராபாத்தில் தான் இருக்கிறார். அவருடைய மனைவியின் பெயர் உமா முரளி கிருஷ்ணா. அவர் சென்னையில் ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடன கலைஞராகவும் இருக்கிறார்.   நன்றி தினகரன் 

No comments: