நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் தோற்ற பார்வை புகைப்படம் வெளியீடு

 July 20, 2023

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடிக்கும் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் அறிவியல் புனைவு கதை திரைப்படம் ‘ப்ராஜெக்ட் கே’ . இதில் பொலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், தீபிகா படுகோன்,  ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ்,  பொலிவுட் நடிகை திஷா படானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தெலுங்கில் பிரபலமான முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் நடித்திருக்கும் நடிகை தீபிகா படுகோனின் தோற்ற பார்வை புகைப்படத்தை வெளியிட்ட படக்குழுவினர், தற்போது பிரபாஸின் தோற்ற பார்வை புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக்கில் பிரபாஸின் தோற்றம், இது ஒரு புரட்சிகரமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. செஃபியா டோன் காட்சி பின்னணியில் வசீகரிக்கும் தோற்றத்தில் கதையின் நாயகனான பிரபாஸ் ஒரு புதிரான அவதாரத்தை அணிந்து தோற்றமளிக்கிறார். மர்மமும், கவர்ச்சியும் கலந்து நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அந்த தோற்றமானது அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.’ப்ராஜெக்ட் கே’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் அறிமுகத்தை சான் டியாகோ காமிக்-கானில் மதிப்புமிக்க ஹெச் ஹாலில் வெளியிடப்படவுள்ளது. இந்த பிரத்யேக நிகழ்வின் போது படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படைப்பாளிகள் வெளியிடுவதால், மறக்க முடியாத பயணத்திற்காகவும், அனுபவத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.   நன்றி ஈழநாடு No comments: