சைவமும் வைணவமும் சங்கமிக்கும் சமயவிழா

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 


  " மாதங்களில் நான் மார்கழி " என்று கீதையில் கண்ணன்


கூறுகிறார்.திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திரு வாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின் றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய் சமய விழாவாய் " மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும் " அமைகிறது அல்லவா ! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய்

ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும்
  - மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல - ஆடியிலும் சங்க மிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

  ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும்.  வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய் சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது.ஆடிப் பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும் உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப் பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம்சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவ தாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது.இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான் சித்தர்களும்,யோகிகளும் தவத்தைத் தொடங்குவார்கள் என்று புராணங்கள் புகலுவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  உலகத்தின் நன்மைக்காகவே அவதாரங்கள் நிகழ்கின்றன.


இராமராய்கிருஷ்ணராய் பகவான் விஷ்ணு அவதாரம் செய்தார் என்பதைப் புராணங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன. அந்த அவதாரங்களுக்குத் துணையாக லக்ஷ்சுமி தேவி - சீதையாய் ருக்மணியாய் பூமியில் அவதாரம் செய்கிறார்கள்.ஆனால் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் இம்மண்ணில் நிகழ்ந்த வேளை அவளுக்கு துணையாக இணையாக பகவான் விஷ்ணு எந்தவித

அவதாரமும் மேற் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகவும் முக்கிய மாகும்.ஆனால் சிலையாய் இருந்த கண்ணனையே மனத்தில் உறுதியாய் இருத்தி அவனையே மணப்பேன் என்னும் வைராக்கியத்தை உலகுக்கே காட்டிய பெண்ணாய் வைணவத்தின்
 மாமலர் ஆண்டாள் நாச்சி யார் போற்றப்படுகிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அப்படியான அந்த ஆண்டாள் நாச்சி யாரைக் கொண்டாடும் அற்புத நாளாகவும் ஆடிப்பூரம் அமைகிறது என்பதும் சிறப்பல்லவா ! பெரியாழ் வார் என்பவர் வைணவத்தில் மதிப்பக்கப்படுகின்ற மிகச்சிறந்த அடியார் ஆவார்.அவரின் வளர்ப்பு மகளாய் ஆண்டாள் நாச்சியார் ஆவது ஆண்டவனின் திருவருளே.

    சைவமும் வைணமும் பெயரளவில் இரண்டாக இருந்தாலும் -


இறைவனை உறவாய் ஆக்கிக் கொள் ளுவதில் ஒன்றுபட்டே நிற்கின்றன. தாயாய்தந்தையாய்சகதோழனாய் , காதலனாய் காதலியாய் என் றெல்லாம் எண்ணி கசிந்து உருகிப் பின்னிப் பிணைந்து நிற்பதை யாவரும் மனங்கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் உலகினைக் காத்து நிற்கும் பெருஞ்சக்கியான அம்பாளை பல நிலைகளில் கண்டும் அந்தச் சக்திக்கு தங்களின் விருப்பங்கள் எது எது இருக்கிறதோ அத்தனையையும் நிறைவேற்றிப் பார்ப் பதில் பேரானந்தம் அடைகிறார்கள். அப்படிப் பேரானந்தம் அடையும் பாங்கினை ஆடிப் பூரம் காட்டி நிற் கிறது என்பதே முக்கிய நிலையாகும்.இங்கே செய்யப்படும் செயல்களுக்கு முக்கிய காரணம் - பக்தியின் பரவசம் என்றுதான் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

  ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே கணவனாக்குவேன் என்று ஒரே பிடிவாதமாய் இருக்கிறார்.கட வுளை மானிட உருவில் இருக் கும் ஒரு பெண் கணவனாய் கொள்ளுதல் பொருந்துமா என்று விமர்சனம் செய்வது பொருத்த மற்றதாகும். இங்கு பக்தியின் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. மணிவாசகப் பெரு மான் எந்தளவுக்கு சைவத்தில் முக்கியத் துவத்துவப்படுத்தப் படுகிறாரோ அவ்வாறே ஆண்டாளும் அமை கிறார். ஆண்டாள் தன்னுடைய பதினைந்தாம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலந்ததாய் சொல்லப் படுகிறது. அதற்கு முன்பாகவே திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் தந்திருக்கிறார். ஆண் டாளின் இவ்விரு படைப்புக்களுமே தத்துவத்தையும் பக்தியையும் தேனாய் இனிக்கச் செழுந்தமிழில் பொக்கிஷமாய் அமைந்திருகிறது. இப்படிப் பெருமைக்குரிய ஆண்டாள் நாச்சியாரை அகத்தினில் அமர் த்திட ஆடிப்பூரம் அமைகிறது என்பது மனங்கொள்ளத்தக்கது.வைணவ ஆலயங்களில் ஆடிப் பூரம் மிகவும் பக்திபூர்வமாய் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  சைவ ஆலயங்களில் அம்பாளை முன்னிறுத்தி ஆடிப்பூரம் பெருவிழாவாய் கொண்டாடப்படுகிறது. அம்பா ளுக்கு பத்து நாட்கள் திருவிழாவாய் ஆடிப் பூரம் அமைவதையும் காணலாம். உலகத்தின் இயக்கத்து க்குக் காரணமான சக்தியே அம்பாளாய் இருப்பதாய் எண்ணும் அடியார்கள் தங்கள் விருப்பத்துக்கு அமைய - அம்பாளுக்குப் பலவித அலங்காரங்களைச் செய்து தங்கள் ஆராத பக்தியைக் காட்டி நிற்ப தைக் காணக்கூடியதாக ஆடிப்பூரம் காணப்படும். அம்பாளுக்கு வளையல்களால் அலங்காரம் செய்வதுஅம்பாள் பூப்படைந்து விட்டாள் என்று பலவித சடங்குகளை ஆற்றுவது என்று ஆடிப்பூரத்தை ஆனந்த விழாவாக ஆக்கியே விடுவார்கள்.

  அம்பாளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு உறவாகவே எண்ணி - தங்கள் குடும்பப் பெண்கள் எப்படி யெல் லாம் அலங்கரிப்பார்களோ அப்படியே அலங்கரித்து பேருவகையும் பேரானந்தமும் பெறுவதை ஆடிப் பூரத்தில் கண்டிடலாம். மஞ்சள் காப்பு சந்தனக்காப்பு குங்குமக் காப்பு என்றெல்லாம் நடத்தி வளைகாப்பும் நடத்துவார்கள்.

  அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும் வளையல்கள் பலவகையாய் அமையும். அந்த வளையல்கள் நிறைவில் அனைவருக்கும் அருட் பிரசாதமாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  திருமணம் ஆகாதவர்க்குத் திருமணம் விரைவாய் திருமணம் ஆவதற்கும் மனக்கசப்பினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும் ஆடிப்பூரத்தின் வழிபாட்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்னும் நம்பி க்கை யாவரிடமும் நிறைந்தே இருக்கிறது. தோஷங்கள் கொண்ட தம்பதியர்களுக்குத் தோஷங்கள் நீங்கி விடும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது.

  சைவமும்.  வைணவமும் சங்கமிக்கும் சயயப் பெருவிழா ஆலயங்கள் தோறும் நடக்கும்  ஆடிப்பூரம் அமைந்த ஆடி மாதத்தை எப்படி ஒதுக்கிட முடியும் ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய பக்குவமான நாளாகும். பக்தர்கள் மனக் குறைகளைக் களையும் பாங்கான நாளாகும். அமங்கலமே ஆடியென எண்ணும் எண் ணத்தை அகத்தைவிட்டே அகற்றிடுவோம். ஆடியும் ஆடியில் வருகின்ற அத்தனை நாட்களுமே அம்மனு க்குரிய மங்கல நாட்களேயாகும். ஆடிப்பூரம் வாழ்வில் மனமகிழ்ச்சியையும் மனவமைதியையும் மன எண்ணங்களையும் நிறைவேற்றித் தரும் உன்னத நாளாகும். அது மட்டுமல்ல சைவமும் வைணவமும் சக்தியை முன்னிறுத்திச் சங்கமித்து ஒரே நிலையில் பயணப்படும் பக்தி நிறை நாளுமாகும் என்பதை மனமிருத்துதல் வேண்டும்.

 

         ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெலாம்

          பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
          காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்புமங்கை
         சேர்த்தாளை முக்கண்ணியைய் தொழுவார்க்கு    ஒருதீங்கில்லையே

          இன்றே திருவாடிப்பூரம் எமக்காக

          அன்றே ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
          வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
          ஆழ்வார் திருமகளாராய்

          திருவாடிப்பூரத்துச்  செகத்துதித்தாள் வாழியயே

          திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியவே
          பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியவே     

          பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

         வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ்
          ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
          வையம் சுமம்பதும் வம்பு .





No comments: