கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து எட்டு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

                                   

 

    பனங்குட்டான்களில் பெரிய பனங்குட்டானுக்கு ஆனைப்


பனங்குட்டான் என்று பெயரிட்டு அழைத்தார்கள் என்பதை அறிந்தோம். அதே வேளை மிக வும் சிறியதாகவும் பனங்குட்டான் இருந்தது என்பதும் எங்களில் பலருக் கும் தெரியும். அந்தச் சின்னப் பனங்குட்டான் ஒரு அங்குல அளவினதா கவே இருந்தது என்றால் நம்பவே முடியாமல் இருக்கிறதல்லவா ! அந்த அளவுக்கு குட்டான் செய்த திறனை கட்டாயம் மெச்சியே ஆகவேண்டும் அல்லவா ! அந்தச் சின்ன

பனங்குட்டானை " தாயைத்தின்னிக் குட்டான் " என்று பெயரிட்டு அழைத்தார்கள் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும்.
 கோவில் திருவிழாக் காலங்களில் கச்சான் விற்கும் கடைகள் நிறையவே இருக்கும். கச்சான் கடைகளுக்கு முன்னால் மக்களும் நிறைந்தே இருப்பார்கள். கச்சானுடன் சேர்த்து இந்த சின்னப் பனங்குட்டானையும் கச்சான் விற் பவர் கொடுப்பார். கச்சானுடன் பனங்கட்டி இணையும் பொழுது அதன் சுவையோ ஒரு தனிச்சுவை என்றுதான் சொல்லவேண்டும்.அந்த அனுபவ மும் ஒரு தனியான இனிமையான அனுபவம்தான்.

  குடிசைக் கைத்தொழிலாகச் செய்யப்பட்ட பனங்கட்டியானது காலத்துக்கு ஏற்றாற் போல் நவீனமுறைக்குள் வருகின்ற அவசியமும் தேவையும் ஏற் பட்டது.நவீனம் புகுந்துகொண்ட  காரணத்தால் அதில் அறிவியல் முறைகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பதனீரைப் பக்குவப் படுத்துவதுஅதனைப் பாகாக்கி எடுப்பதுசுத்திகரிப்பதுபின் பனங்கட்டியாய் எடுப்பது எடுத்த பன ங்கட்டியை விற்பதற்கு உரிய முறையில் பொதியாக்குவதுபனங்கட்டியை

கெட்டுவிடாமல் பாதுகாப்பது என்று பல நிலைகளில் புதிய முறைகள் பல கையாளப்பட்டன.குடிசைக் கைத்தொழிலாக இருந்த பனங்கட்டித் தொழில் நாகிரிக வழியில் பயணத்தை ஆரம்பித்தது எனலாம்.

  1954 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பனங்கட்டி உற்பத்திக்கென


ஒரு நிலையம் பலாலியில் அமைத்து தரமான பனங்கட்டி செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. இம்முயற்சி கூட பாரம்பரியம் தொடர்பானதாகவே காண ப்பட்டது.பாரம்பரிய முறையிலிருந்து விடுபட்டு நவீன முறைக்குள் நுழை ந்ததன் விளைவால் முதன் முதலாக அதாவது 1970 ஆம் ஆண்டில் கீரிம லையில் நவீன முறையிலான பனங்கட்டியைச் செய்வதற்கான முதலா வது முயற்சி எடுக்கப்படது என்பதை யாவரும் மனமிருத்துவது அவசிய மாகும். அப்பொழுது சீனித்தொழிலில் நிபுணராக விளங்கியவர்தான் திரு. கே . இரத்தினசிங்கம் அவர்கள். அவர்களின் மேற் பார்வையில் இம் முதல் முயற்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாகவே செயற்பட்டது என்பது நோக்க த்தக்கதாகும்.சீனியின் விளையேற்றத்தினால் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்ப ட்டது. அந்த வேளையில் பனங்கட்டியின் தேவை நன்கு உணரப்பட்ட காரணத்தால் பனங்கட்டி செய்வதற்கு என்று தொடங்கப்பட்ட  பணி சிறப் பாய் அமைந்ததுடன் தொண்ணூற்று ஐந்து என்று எண்ணிக்கையளவில் பனங்கட்டி செய்யும் நிலையங்கள் பெருகியது என்னும் செய்தி மிகவும் பெருமையான செய்தியாகவே அமைகிறது அல்லவா !

    இலங்கையில் ஆட்சியானது மாறும் பொழுது பொருளாதார


நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப் பட்டது எனலாம்.பனங்கட்டி உற்பத்தியிலும் ஆட்சி மாற்றங் கள்அரசியல் கொள்கைகள் பாதிப்பினை ஏற்படுத்தவே செய்தன. தொடர்ந்து ஒரே ஆட் சியே இருந்திடாக் காரணத்தால் பனங்கட்டி உற்பத்தியும் ஏறியும் இறங்கி யும் வந்தது. ஆனால் உற்பத்தி மட்டும் நிற்காமலேயே தொடர்ந்தது. இன் னும் தொடர்ந்த படியே இருக்கிறது என்பதுதான் ஆரோக்கியமான நிலையாகும்.

கற்பகக்கட்டி பனைவெல்லம்என்று பெயரிட்டு அழைப்பதும் பன ங்கட்டி யையேயாகும்.பனங்கட்டி என்னும் பெயர்தான் மனதில் பதி ந்த பெயராகவே ஆகிவிட்டது எனலாம். " ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை - ஆனந்தம் ஆன ந்தம் தோழர்களே - கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் " என்றுதான் எங்கள் தக்கத்தாத்தாவும் பாடியி ருக்கிறார். தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் அவர்களும் " கூடிப் பனங்கட்டி " என்றுதான் பெயரிட்டு மகிழுகிறார்.பனைவெல்லம் என் றாலும் பனங்கட்டி என்றாலும் ஒன்றேதான் என்பதை மனமிருத்தல் வேண்டும்.

  யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட பனங்கட்டியை இலங்கையில் இருப் பவர்கள் மிகவும் விருப்பத்துடன் வாங்கிச் சுவைத்தார்கள். தென்னில ங்கை மக்களுக்கு யாழ்ப்பாணம் என்றவுடன் பனங்கட்டி அவர்கள் நினைவில் நிச்சயம் வந்தே நிற் கும்.அந்த அளவுக்கு அவர்களைக் கவர்ந்து இழுக்கும் தனித்தன்மையினை பனங்கட்டி பெற்றிருந்தது என்பது நோக்கத்தக்கதாகும்.

  தமிழ்நாட்டிலே பனைவெல்லம் என்னும் பெயர்தான்


நிலைத்து விட்டது. பனங்கட்டி என்றால் அவர்களுக்கு அது புதிய ஒன்றாக வேதான் அமைந்தது என லாம்.ஆனால் யாழ்ப்பாணத்தில் பனை வெல்லம்தான் பனங்கட்டி என்பது யாவருக்கும் தெரியும். பெரும் பாலும் பனங்கட்டிதான் யாவர் வாயிலும் வருகின்ற பெயராகவே இன்றுவரை இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் (பனைவெல்லம்)

பனக்கட்டியை யாவரும் விரும்பினார்கள்.இன்றும் பலரும் தேடி வாங்கிப் பயன்பெறுகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டில் திருச்செந்தூரில் செய்யப்படுகின்ற பனங்கட்டிக்கு  " புட்டுக் கருப்பட்டி " என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். தமிழ் நா ட்டில் பெருந்துறைகுன்னத்தூர்காங்கயம்சிறுவலூர்தாராபுரம்கோ யமுத்தூர்அவினாசிபொள்ளாச்சிமூலனூர்நம்பியாரூர்வேலூர்தர்மபுரிமத்தூர்திருப்பூர்காஞ்சிபுரம்விழுப்புரம்கடலூர்மதுரைதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிசெங்கற்பட்டு ஆகிய இடங்களிலெல் லாம் தரமான பனங்கட்டியினைச் செய்கிறார்கள் என்பது மனங் கொள்ளத்தக்கது.தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் - ஆந்திராவங்காளம்பீஹார்பம்பாய்கேரளம்மத்திய பிரதேசம்ஒரிசா,ராஜஸ்தான்உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் பனங்கட்டி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நோக்கத்தக்க தாகும்.

  திருநெல்வேலிஅடைகலாபுரம்காயல்பட்டினம்குலசேகரப்பட்டினம்உடன்குடிஆறுமுகநேரி ஆகிய இடங்களில் " சில்லுக் கருப்பெட்டி " என்னும்  பெயரில் சிறிய குளிகைகள் அளவிலும்நெல்லிக்காயின் அளவிலும் செய்யப்படுகிறது.பனம்பாகினைப் பதமாகக் காய்ச்சி அத னுடன் சுக்கு,மிளகு ஏலக்காய் பொடியினைச் சேர்த்துக் கிளறி எடுக் கப்டுவது சில்லுக் கருப்பட்டி. சுக்கும்எள்ளும் சேர்த்துச் செய்யப் படுவது புட்டுக் கருப்பட்டி. பாகுடன் சேர் க்கப்படுகின்ற சரக்குப் பொருள்களுக்கு ஏற்ப பெயரிடப்படுகிறது என்பது நோக்கத்தக்கதா கும்.இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பனங்கட்டி ஏற்றுமதி செய்ய ப்பட்டிருக்கிறது. அதே போன்று இந்தியாவிலிருந்தும் இலங்கைக்கும் இறக்குமதி செய்யப்பட்டும் இருக்கிறது. அந்த வகையில் 1961 ஆம் ஆண்டில் புட்டுக் கருப்பட்டி இறக்குமதியாகியிருக்கிறது என்று செய் திகள் தெரிவிக்கின்றன.

  பனங்கட்டி உற்பத்தியில் குடிசைக் கைத்தொழில் முறையோ அல் லது நவீன முறைகளோ கையாளப்ப ட்டாலும் உற்பத்தியாகி வருகின்ற பனங்கட்டியினைக் பாதுகாப்பதுதான் மிகவும் பாரிய பணியாகக் காண ப்படுகிறது. ஈரலிப்பு வராமல் பாதுகாப்பது தான் மிகவும் முக்கியம். அதனால் பனங் கட்டியை வரண்ட வெப் பம் படும்வகையில் வைப்பதற்கு ஏற்றவாறு செய்வது என்பதுதான் மிகவும் கவனத் தில் கொள்ளப்படவேண் டிய தொன்றாகவே இருக்கிறது.

  வருடக்கணக்கில் இருக்கும் வகையில் தமிழ்நாட்டில் திருநெல் வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்அடைக்கலாபுரம்பகுதிகளில் பனங்கட்டியினை சிறிய அளவில் அதாவது நெல்லிக்காய் அளவில் செய்கிறார்கள். இப்படிச் செய்யப்படுவது  புட்டுக்கருப்பட்டி.இப்படிச் சி றிய அளவில் செய்யப்படும் நிலையில் வருடக்கணக்கில்  பாது காப் பாய் வைத்திருக்க முடிகிறதாம் என்று அறிய முடிகிறது.. அது மட் டுமல்லாமல் இங்கிருந்து ஏற்றுமதியும் செய்து நல்ல வருமானமும் ஈட்டப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

   தமிழ்நாட்டில் கையாளப்பட்ட முறையினுக்கு ஒப்பாக யாழ்ப்பாண த்திலும் கையாளப்பட்டதாக அறிகிறோம். சிங்கைநகர்அல்வாய்உடு ப்பிட்டிகீரிமலை போன்ற பகுதிகளைக் குறிப்பிடலாம்பனங்கட் டி யைப் பெரிய குட்டான்களில் போட்டு அதனைப் பரணில் கட்டி வை த்து பாதுக்காத்துப் பின்னர் விற்பனைக்கு உரியதாக்கியிருக்கிறார் கள் என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

அதுமட்டுமல்லாமல் மிகவும் சிறிய அளவில் அதாவது தாயைத்தின் னிக் குட்டானைச் செய்து அதனைப் பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனையும் செய்யப்பட்டதாகவும் அறிகின்றோம். இப்படியான பனங்குட்டான் கள் தென்னிலங்கை மக்களால் விரும்பி வாங்கவும் பட் டன என்றும் அறியமுடிகிறது.தென்னி லங்கையில் காணப்படும் வழி பாட்டுத் தலங்களில் விழாக்காலங்களில் இந்தப் பனங்குட்டான் விரு ப்பமாய் வாங்கப்பட் டதோடு நல்ல சந்தை வாய்ப்பினையும் பெற்றிரு க்கிறது.

  பனையானது இருக்கும் இடத்தைப் பொறுத்தே பனங்கட்டியின் தர மும்சுவையும் அமைகிறது என்பது முக்கியமாகும்.வெய்யில் அதிக முள்ள இடம்மண்ணானது நல்ல வளமாக இருக்குமிடம்செம்மண் நிறைந்த பகுதிபசளையும் நீர்ப்பாசனும் உள்ள பகுதிஅதுமட்டும ன்றி சுண்ணாம்புத் தரையான பகுதி என்று அமையும்    பகுதி களில் இருக்கின்ற பனையிலிருந்து பெறப்படும் பதனீரில் இனிப்பு த்தன்மை மிகுந்து காணப்படுகிறது என்பது மிகவும் முக்கிய கருத்தாகும். இந் தப் பதனீரால் செய்யப்படுகின்ற பனங்கட்டி மிகவும் தரமாகவும் சுவையாகவும் இருக்கும் என்று அனுபவத்தால் கண்டறிந்திருக்கிறார்கள்.

  நவீன முறை புகுந்த காரணத்தால் பனங்கட்டியின் தோற்றத்திலும் ஒரு சீரான வடிவமைப்பு வந்திருக்கிறது. அளவான சதுரமாய்  , பார்த் தவுடன் மனதில் பதியும் வண்ணமாய் பனங்கட்டிகள் இப்போது சந் தைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. குட்டான்களின் வருகையொடு - இந்தச்சீரான வடிவம் கொண்ட பனங்கட்டிகளும் நன்றாகப் பொதி செய்யப்பட்டு பார்த்தவுடன் யாவரும் வாங்கிடவேண்டும் என்னும் எண்ணத்தை உருவாக் கும் வகையில் விற்பனைக் கூடங்களில் இரு ப்பதைக் காண முடிகிறது.பனை அபிவிருத்திச் சபையினது வரு கை பனங்கட்டித் தொழிலில் நல்ல பல மாற்றங்களுக்கு வழி வகுத்திருக் கிறது என்பதை மறுத்துரைத்து விடல் முடியாது. பனை அபி விருத் திச் சபையினது வழி காட்டலில் " கற்பகம் " என்னும் அருமையான பெய ரில் இலங்கையில் பல இடங்களிலும் ஆரம்பிக்கப் பட்டிருக்கும் விற்பனைக் கூடங்களில் பனங்கட்டி பொதி செய்யப்பட்டு அங்கே வைக்கப்படிருக்கும் நிலையினைப் பார்க்கின்ற பொழுது மிகவும் பேரானந் தமாகவே இருக்கிறது எனலாம்,பனை ஓலைக் குட்டானு க்குள் அடைக்கலமாக இருந்த பனங்குட்டான் - வெளிநாடுகளி லிரு ந்து இறக்குமதி செய்யப்பட்ட கவர்சிகரமான இனிப்புகள் போன்று - கவர்ச்சிகரமாகவே பொதி செய்ய ப்பட்டு அவற்றுக்கு மத்தியிலே நிமி ர்ந்து நிற்பதையே தற்போது காணமுடிகிறது. இது நல்ல ஆரோக்கியமா ன நிலை என்றுதானே எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அழ கான வடிவில் பொதி செய்யப்பட்ட எங்களின் பனங்குட்டான்கள் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் , இல ண்டன்மாநகரம், கனடா, என்றவகையில் உலகம் முழுவதும் பயண ப்பட்டு , அங்குள்ள விற்பனை நிலையங்களில் விரும்பி வாங்கும் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சிகர மான தாக இருக்கிறதல்லவா ! எங்களின் சொந்தமாய் அமைந்திருக்கின்ற பனைமரத்தின் பண்டமான பனங்குட்டான் உலகின் பல பகுதிகளி லும் விற்பனைக் கூடங்களில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்னும் நிலை மிகவும் பெருமையினை வழங்கியே நிற்கிறது என்பது நிதர்ச னமான உண்மையாகும்.

 பனங்கட்டியில் பல சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என்று ஆராய்ச்சி மூலம் அறியக்கூடியதாக இருக்கி றது. அச்சத்துக்களையும் அவை எப்படி அமைந்திருக்கின்றன என்பதையும் அறிவது முக்கியமானது அல் லவா !       

    100 கிராம் பனங்கட்டியில் இருக்கும் சத்துக்களைப் பார்ப்போம்.                  சக்தி - 384 கலோரிகள், ஈரப்பதன் - 3.9 கிராம், புரதம் - 0.4 கிராம், கொழுப்பு ச்சத்து - 0.1 கிராம் , தாதுக்கள் - 0.6 கிராம், மாச்சத்து - 95 கிராம், சுண்ணா ம்புச்சத்து  - 80 மி.கிராம், பொஸ்பரஸ் - 40 மி.கிராம், இரும்புச்சத்து - 2.64 மி.கிராம்.                        

 


No comments: