கற்பதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்தாறு ]

 


 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
  மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

  பலவிதமான பழங்கள் இருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றுமே


தனித்தனி யான தன்மையும் , சுவையும் கொண்டனவாகவே இருக்கின்றன. அநேகமான பழங்களை அது இருக்கின்ற மரத்திலோ அல்லது கொடியிலோ அல்லது செடி யிலோ நாமே சென்று பறித்துத்தான் சுவைக்கும் நிலை காண ப்படுகிறது. ஆனால் பனம்பழம் அப்படியான பழமல்ல. தானாகாகவே கனிந்து மண்ணிலே விழுந்து தேனாக இனிப்பினை எமக்கெல்லாம் அளித்து நிற்கிறது என்பதுதான் முக்கியமாகும். மண்ணில் விழுந்தவுடன் அதன் வாசம் காற்றில் பரவி சூழவுள் ளார்கள் மனமெல்லாம் பதிந்து நாவூறச் செய்து நிற்கும்.நன்றாகக் கனிந்த பனம்பழம் உயரான பனையிலிருந்து மண்ணில் விழும் பொழுது தரை சற்று கடினமாய் இருந்தால்

விழுந்த பழம் பிளந்த வண்ணம் காட்சி தரும்.கறுப்புத் தோல் வெளியிருக்க மஞ் சள் நிறத்துடன் உட்பகுதி வெளிப்பட பனம்பழம் விரிந்து கிடப்பதைப் பார்த்தபடியே இருக்கலாம்
அந்த அழகு அகத்திலே பதிந்தே விடும்.அது ஒரு தனி அழகு என்றுதான் சொல்ல வேண்டும்.தென்னை எப்படி முயன்றாலும் பனைக்குப் பக்கத்தில் வந்துவிடவே முடியாது. தேங்காய் பழத் தேங்காய் என்று பெயர் பெற்றாலும் பனைபோல பழத்தைக் கொடுக்க முடி யாமல் இருக்கிறது அல்லவா ! பனை என்றுமே தனித்துவமானதுதான் என்று தென்னையானது தெரிந்து கொண்டால நல்லது அல்லவா !

  பனம்பழத்தை ஊட்டச்சத்து நிறைந்த உணவாகக் கருதி அந்தக் காலங்களில் தினமுமே பலரும் உண்டு மகிழ்ந்தார்கள். இன்று அந்தப்பழக்கம் அருகி வரு வதைத்தான் காணமுடிகிறது. இதுதான் காலத்தின் கோலம் என்று கருதிடக் கூடியதாக இருக்கிறது. பப்பாளிப் பழத்தை அனைவரும் விரும்பி உண்ணுகி றார்கள்.அந்தப் பப்பாளிப்பழத்தைவிட கூடுதலான வைட்டமின் சி மற்றும் கல்சியம் அதிகளவில் பனம்பழத்தில் காணப்படுகிறது என்பது நோக்கத்தக்க தாகும்.பனம்பழத்தின் சாறில் நீர்ச்சத்துபுரதச் சத்து ,  கொழுப்பு சத்துஉலோக உப்புக்கள் சர்க்கரைகரோட்டின் ஆகியன நிறைந்து காணப்படுகின்றன என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.அதுமட்டுமல்லாமல் கண்ணினது பார்வைத் திறனை அதிக ரிக்கச் செய்யும் பீட்டா கரோட்டின் என்னும் வைட்டமின் ஏ சத்து பனம்பழத்தில் நிறைந்தே இருக்கிறது என்பது நோக்கத்தக்கதேயாகும்.

  பனம்பழத்தைச் சாப்பிட்டுவந்தால் உடலில் நோயெதிர்ப்புச்


சக்தி ஏற்படுகிறதாம் என்றும் அறிய முடிகிறது. இதனால் சருமத்தில் வருகின்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் ப்னம்பழம் அமைகிறது.வெப்பம் என்பது மிகவும் முக்கிய மானதாகும். அந்த வெப்பத்தை உடலுக்கு வழங்கிடப் பனம்பழம் உதவியாய் நிற்கிறது. மலச்சிக்கல் என்பது பல நோய்களுக்குக் காரணமாகி விடுவதை யாவரும் அறிவோம். அந்த மலச்சிக்கலினையே பனம்பழம் இல்லாமல் செய்து துணையாகி நிற்கிறது.அதுமட்டுமல்ல உடலிலே உள்ள கழிவுகளை அகற்று வதற்கும் பனம்பழம் கைகொடுத்து நிற்கிறது.

  இன்று பலபேருக்கும் பிரச்சினையாக இருக்கும் வியாதி சர்க்கரை வியாதி ஆகும். சர்க்கரை வியாதி யினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திடும் ஆற்றல் பனம் பழத்துக்கு இருக்கிறது என்பது மிகவும் முக்கியமாகும்.சருமத்திலே ஏற் படும் நோய்களுக்கு பனம்பழத்தின் சாறு நல்ல மருந்தாகிறது. சருமத்தில் நோ ய்கள் வந்தால் பனன்பழச்சாற்றினைச் பூசுவது நல்ல சுகத்தை அளிக்கிறது என்று அறிந்திடக் கூடியதாக இருக்கிறது.பனம்பழமானது மிகவும் கைகொடு க்கும் பழமாக இருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். பனம்பழத் தினை அழவோடு உண்டு ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுவது என்பது தான் மிகவும் முக்கியமாகும்.

   பனம்பழத்தை விருப்பத்துடன் சுவைத்து மகிழும் நிலை தொடருவதில்லை. காரணம் பருவம் முடிந்தபின்னர் அடுத்த வருடந்தான் பனம்பழத்தைப் பார்க்க வும் சுவைத்திடவும் முடியும் என்னும் நிலை இருப்பதாலே. பனப்பழப் பிரியர்க ளின் மனப்பாங்கினை கருத்திருத்திலிருத்து பனம்பழச் சுவையினை வேண்டய பொழுதெல்லாம் சுவைத்து மகிழ்வதற்கான வழி வகைகளும் நிறைந்தே வந்தி ருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமான கருத்தெனலாம்.

  பனம்பழத்தினை விரும்பிய பொழுதெல்லாம் சுவைப்பதற்கு என்னதான் வந் திருக்கிறது என்று அறிவதில் ஆர்வம் ஏற்படுகிறதல்லவா ! பனம்பழத்தின் முக் கிய பாகம்தான் அதில் நிறைந்து காணப்படும் களியாகும். களியில்லாவிட்டால் பனம்பழம் வெறும் விதையாகவும் அதைச்சுற்றியிருக்கும் தும்பாகவுமே காட்சி தரும். அதில் நிறைந்த களியால்த்தான் பனம்பழம் விரும்பும் பழமாக விளங்கு கிறது அல்லவா !

  பனம்பழத்தின் களியினை நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பது எப்படி என்று எங்களின் முன்னோர்கள் திறம்பட அறிந்திருந்தார்கள்.ஏதாவது ஒரு பொரு ளை நீண்ட நாட்களுக்குக் கெடாமல் வைத்திருக்க வேண்டுமென்றால் - அத ற்காக இரசாயனப் பொருட்களையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ப துதான் பொதுவான புரிதலாகும்.ஆனால் எந்தவிதமான இரசாயனப் பொருட்க ளையும் பயன்படுத்தாமல் எங்கள் முன்னோர்கள் பனங்களியை நீண்டநாள் பய ன்படுத்தினார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ! அவர்களின் உணவு பதனிடும் தொழில் நுட்பத்தின் விளைவாக பனங்களியினைப் பாது கா த்து பயன்படுத்த எடுத்த முயற்சியின் பயனாக வெளிவந்ததுதான் " பனாட்டு ".

பனாட்டு என்றதும் நாவூறுகிறதா பனாட்டு என்று சொன்னாலே இலங்கையும் குறிப்பாக யாழ்ப்பாணமும்தான் மனதில் வந்து நிற்கும். பனாட்டின் பல நிலை களை யாழ்ப்பாணம் பலருக்கும் உணர்த்தி நின்றது. யாவரையும் திரும்பிப் பார் க்கவும் வைத்தது என்றால் அது மிகையாது. பனாட்டு என்றதும் யாழ்ப்பாணம் மனதில் வந்து நிற்பது போல - அந்த மண்ணில் பிறந்த மகத்தான ஒருவரும் கட்டாயம் வந்தே நிற்பார். அவர் வேறு யாருமல்ல ! எங்கள் தங்கத் தாத்தா

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களே ! பனாட்டை எங்கள் தங்கத்தா த்தா எப்படிக்காட்டுகிறார் பாருங்கள் ! " செங்கதிரேன் சுடும் பலகாரம் " என்று சொல்லும் தங்கத்தாத்தாவின் பனாட்டுப்பற்றிய பார்வை புதுப்பார்வையாக இருக்கிறதல்லவா ! அத்துடன் அவர் விடவில்லை ..... பனாட்டினைக் கண்முன்னே காட்டிவிடவே துடிக்கிறார்....

 

                    சுத்தத் தலத்திற் றொடைக்குமே லாகவே

                          தோன்றிடப் பந்தர் சமைத்துக்கொண்டே

                    வைத்த பழங்களைப் பட்டடை யிற்கட்டி

                              வாங்கிப் பிசைகுவர் ஞானப்பெண்ணே

 

                        கூறுஞ் சிறுதடி கூட்டியொன் றாய்க்கட்டிக்

                                குந்தைத் துழாவித் துழாவியெடுத்

                          தூறுங் களியினைச் சல்லாப் புடைவையி

                                  லூற்றி வடிப்பார்கள் ஞானப்பெண்ணே

 

                          எட்டுநா ளெட்டுக் களியினைப் பாயில்விட்

                                  டேவெயிற் காயப் பரவியிறை

                          மட்டதா கத்தடித் துப்பத மாகவே

                                வந்தா லெடுப்பார்கள் ஞானப்பெண்ணே

 

"  அல்லற் பசிக்கும் அரும் பிணிக்கும் ஆரமுதாம் செல்வப் பனாட்டு “ எவ்வளவு அருமையான கருத்து.பனாட்டு என்னும் கண்டுபிடிப்பு பயனான கண்டுபிடிப்பாக விளங்குகிறதல்லவா !

பனாட்டுப்பற்றிய இன்னுமொரு பார்வையினைப்பார்ப்போமா …..

 

                        கடகமதிற் பினைந்துகளி காயப்பாய் மேற்

                          கவிழ்த்தூற்றிப் பரவியது காய்ந்தபின்னே

                        திடவிரும்புத் தட்டகப்பை திட்டிக் கீறிச்

                            செய்யசிறு தட்டுகளாய்ச் செதுக்கியோலைத்

                        தடவுயரக் கூடையது தன்னிற் போட்டுத்

                                தாங்குபரண் மேலடுப்பின் சாரல்வைத்த

                        புடமதுரப் பனாட்டதனை புசிப்பையாயின்

                                  புத்துடம்பு பூக்குமிது பொய்யாக்கூற்றே 

 

இந்தப் பார்வையினைப் பார்த்தது பனை இராசன் நாடகமாகும்.பனாட்டு என்றாலே யாவரும் விரும்புவார்கள். அந்தப் பனாட்டில் - பாணிப் பனாட்டு, தோற் பனாட்டு , என்னும் வகையும் இருக்கிறதாம். அந்தப் பனாட்டுகள் பற்றி சாதாரணமாகச் சொல்லுவதைவிட எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் அழகிய தமிழில்

கேட்டால் இனிக்கும் அல்லவா ! அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம் வாருங்கள்.....

 

          மாணிழையாய் செல்வர் மனமாக வுண்ணுகின்ற

          பாணிப் பனாட்டின் பர்சுரைப்பேன் - பேணுபனங்

          கட்டுயு நெய்யுங் கலந்துகளி பாதியிறை

          மட்டுந் தடித்திறுக வார்த்ததற்பின் - கெட்டியாய்

          முன்போ லெடுத்து மடித்துமுடை கூடையிலிட்

          டன்பாக வுண்ப ரதுநிற்கப் -பின்புமொரு

 

          பாக முரைத்திடுவேன் பக்குவமாய்க் கேள்சிறுதுண்

          டாகப் பனாட்டை யரிந்துகொண்டு - வேகவறுத்

          திட்டிடித்த வெள்ளு மிளகரிசி சீரகமும்                          

          அட்டெடுத்த பாணி யுடனளவி - முட்டியிலே

          பெய்துவைத்துப் பின்பு பெருவிருந்தா யுண்பார்கள் 

 

என்று பனாட்டின் ஒருவகையான பாணிப் பனாட்டிப் பாடி எங்களையும் மகிழ்விக்கின்றார் தங்கத்தாத்தா. பாணிபனாட்டைக் காட்டிய தங்கத்தா த்தா தோற் பனாட்டையும் காட்டுகிறார் பாருங்கள் ..... 

               செய்யதோற் பனாட்டின் திறமுரைப்பே - னெய்தும்

               அமளிபோய் மாறி யருந்தலாய் வீழுங்

               கமழுங் கநியின் களியை - யமைவுபெற

               மூன்றிரண்டு நாள்வார்த்து முற்றாகக் காய்ந்ததற்பின்

               ஏன்றதாள் போல வுரித்தெடுத்துத் - தோன்றுஞ்

               சுருளாக்கிப் பச்சடியுந் தொட்டுண்பர் மேலும் 

 

பனாட்டையும் பெருமைப்படுத்தி அதன் வகைகளையும் சுவைப்படுத்தி தன்னுடைய சுந்தரத்தமிழில் தந்திருக்கும் எங்கள் தங்கத்தாத்தாவை மனமிருத்தினால் , கூடவே பனாட்டும் இனித்தபடியே இருக்கும் அல்லவா !

  யாழ்ப்பாணத்தவர் பலர் தென்னிலங்கையிலே வியாபாரத்தில் ஈடு பட்டி ருக்கிறார்கள். பெரும்பாலும் சுருட்டுக்கடை வைத்துப் பெரும் செல்வாக்கினை அந்த நாளில் பெற்றிருந்தார்கள். யாழ்ப்பாணத்துப் புகையிலை, சுருட்டு என் றால் தென்னிலங்கையிலும், மலைநாட்டிலும் பெரும் செல்வாக்கை நிலை நாட்டிருந்தது எனலாம். சுருக்கடை முதலாளிகளாய் யாழ்ப்பாணத்தவர்கள் பார்க்கப்பட்டனர் என்பதும் நோக்கத்தக்கது. அந்தச் சுருட்டுக்கடை முதலாளி மார் , யாழ்ப்பாணத்தும் பனாட்டினை தென்னிலங்கையக்குக் கொண்டு சென் று தங்கள் கடைகளில் வைத்து விற்றனர். ஏனைய தமிழ்க் கடைகளிலும் பனா ட்டு விற்கப்பட்டது. தென்னிலங்கைவாழ் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்துப் பனாட்டை மிகவும் பிரியமாக வாங்கிச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.தென்னிலங் கை மக்களைத் தன்வசப்படுத்தும் ஆற்றல் எங்களின் யாழ்ப்பாணத்துப் பனா ட்டுக்கு இருந்தது என்பது கருத்திருத்த வேண்டிய கருத்தேயாகும். தென்னில ங்கையில் மட்டுமல்லாது கிழக்கிலங்கை மக்களும் யாழ்ப்பாணத்துப் பனா ட்டை மிகவும் விரும்பி வாங்கினார்கள். பனாட்டை அவர்கள் பழைய சோற்று டன் கலந்து அதில் தேங்காய்ப்பாலையும் சேர்த்து காலைச் சாப்பாடாக உண் டு பசியாறியிருக்கிறார்கள் என்பதையும் அறியக் கூடியதாகவே இருக்கிறது. பிஸ்கட் , சொக்கிலேற் வகைகளை விரும்ப்பியது போலவே - பனாட்டையும் சிறுவர்கள் யாவரும் விரும்பி கடைகளில் வாங்கிச் சுவைத்தார்கள். யாழ்ப்பா ணத்தில் அதிகமாகப் பனாட்டு எல்லா இடங்களிலும் இருக்கும். கிழக்கிலங் கையில் கடைகளில் மட்டுமே காணப்படும். அங்கு பனாட்டைப் பார்க்கும் சிறு வர்கள் ஆவலுடன் வாங்கிச் சுவைப்பதை நான் என்னுடைய அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

 கொழும்பிலே நிரந்தரமாகவே வசிக்கத் தொடங்கிய தங்கள் உறவுகளைக் காண்பதற்குக் கொழும்புக்கும் செல்லும் யாழ்ப்பாண உறவுகள் இராசவள்ளிக் கிழங்கு, நல்லெண்ணிய், மாம்பழம், எள்ளுப்பாகு, இவற்றுடன் கட்டாயம் பனாட்டையும் எடுத்துச் செல்ல மறக்கவே மாட்டார்கள். சிங்கள நண்பர்கள் இருந்தால் அவர்களுக்காகவும் பனாட்டை எடுத்துச் செல்லுவார்கள். பனாட்டை க்கண்டதும் அதனை எடுத்து ஒரு கடி கடித்து விட்டுத்தான் ... பேசவே தொடங் குவார்கள்.பனாட்டைக் கொடுத்தே பல காரியங்களைச் சாதிப்பதும் இருந்திரு க்கிறது. அந்தளவு ஆற்றல் மிக்கதுதான் எங்களின் கற்பகதருவின் பனாட்டா கும்.

 பனாட்டின் வகைபற்றி தங்கத்தாத்தா பாட்டாய் வெளிப்படுத்தினார். பனாட் டைப் பலநாட்களுக்கு வைத்துப் பயன்படுத்துவதற்காகக் கண்ட தொழில் நுட் பம்தான் பாணிப் பனாட்டாக அமைந்தது. பதனீர் பாணியுடன் தேனும்  , மிள கும் சீரகமும் சேர்த்து பாணி காய்ச்சப்பட்டு அதில் பனாட்டினைச் சிறு சிறு துண்டுகளாகப் போட்டு வைப்பார்கள். இப்படி வைக்கப்படும் பனாட்டு ஏறக்கு றைய ஐந்து ஆண்டுகள் வரை பழுதுபடாமல் சுவைத்திடக் கூடியதாகவே இரு க்கும். இதனைவிட இன்னுமொரு முறையும் கையாளப்பட்டது.சீனிப் பாணியில் இட்டு மூடிவைத்துப் பயன்படுத்துவதாகும். 

   பனாட்டினைப் பாதுகாப்பாக வைக்கும் முறையில் பாணிப்பனாட்டு அமைகிறது என்பதைப்பார்த்தோம். காய்ந்த பனாட்டினை பனை ஓலை களினால் செய்யப்பட்ட கூடைகளில் வைத்துப் பொதியாக ஆக்கிக் கொள் ளுவார்கள். பொதிகளாகச் செய்யப்பட்ட பனாட்டில் காணப்படும் ஈரப்பதன் கூடுதல் ஆகாமல் இருப்பதற்காக என்ன முறையினைக் ககையாண்டார்கள் தெரியுமா அடுப் பங்கரையிலே அதனைத் தொங்கவிட்டார் கள்.அடுப்பங்க ரையின் மேல் வெப்பம் இருப்பதால் இவ்வாறு செய்த உணவுபதனிடம் தொழில் நுட்பம் வியந்திட க்கூடியதாக இருக்கிறதல்லவா ! இப்படிச் செய்வ தனால் பனாட்டானது நீண்ட நாட்களுக்குப் பழுதுபடாமல் பாதுகாப்பாக வைத்திட முடிந்தது எனலாம்,

  பனை ஓலைக் கூடைகளில் பனாட்டினப் பொதி செய்யும் பொழுது ஒரு நுட் பம் கையாளப்பட்டது. அது என்ன தெரியுமா பனாட்டுத் தட்டுக்களின் உட்புற மாகவும் வெளிப்புறமாகவும் உப்புத்தூளினைத் தூவுவதேயாகும்,தூவப்பட்ட உப்பானது பனாட்டிலிருக்கும் ஈரப்பதனை உள்ளே இழுத்துவிடும். அது மட்டு மல்லாமால் பனாட்டுடனும் கலந்தும்விடும். உப்பு ஈரப்பதனைக் கூடாமல் பாது காப்பாக இருப்பதுடன் பனாட்டுடன் கலந்து அதில் காணப்படும் காறல் சுவை யினையும் குறைப்பதற்கும் உதவியாக நின்று பனாட்டின் சுவையினை மெருகு படுத்தும் சுவையூட்டியாகவும் அமைகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதா கும்.

     நவநாகரிகத்தில் மிதப்பார் பனாட்டினை ஏளனமாக நோக்கினாலும் - பனாட் டின் மகத்துவம் மக்களிடையே நிறைந்தே இருக்கிறது என்பதைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். இரசாயனக் கலவைகள் கலந்த வண்ண வண்ண மான பொருட்களை வாங்கியுண்பதால் பல விளைவுகள் வருகின்றன என் பதை அறிந்தும் அறியாமலும் பலர் சுவைப்பதற்குத் துடித்து நிற்பதையே தற் பொழுது கண்ணாரக் காணமுடிகிறது. ஆனால் உடலின் ஆரோக்கியத்து ஒத் துவராத எந்தவித இரசாயனக் கலவைகளுடனும் இணக்கம் வைக்காத பனா ட்டினை பாராமுகமாய் இருப்பதை விடுத்து அதனைச் சுவைத்தால் நல்ல ஆரோக்கியம் கிடைப்பதோடு எங்களின் பாரம்பரியத்துக்கும் மதிப்புக் கொடுப் பதாகவும்பல தொழிலாளர்களுக்கு உறுதுணையாகவும் அமையும் அல்லவா !

  மற்றைய இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் எந்தவித நலன்களுமே விளைந்திடப் போவதில்லை. ஆனால் பனாட்டு அப்படியானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுதல் கட்டாயமாகும். பனாட்டினை நேரமறிந்து உண்பத னால் கரப்பான் வியாதிகிரந்திஅழுகிய கிரந்திஆகிய வியாதிகள் அகல்கி ன்றன. அதுமட்டுமன்றி சொறிதேமல்நீர்க்கடுப்புதலைக்கனம்பித்த வாயுவி னால் ஏற்படுகின்ற தீமைகள் யாவுமே நீங்குகிறது. மேலும் குடற்புண் மலச்சி க்கல் ஆகியவற்றை நீக்கவும் உதவி நிற்கிறது என்பது யாவரும் மனமிருத்த வேண்டிய விடயமாகும்,

No comments: