பிரசாந்தி மண்டபத்தின் ஒரு வருட பூர்த்தி விழா மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டம்

 வன்னி ஹோப் ( VANNI
HOPE)  
நிறுவனத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட பிரசாந்தி மண்டபத்தின் ஒரு வருட பூர்த்தி விழா மிக விமரிசையாக நடைபெற்றது

பிரசாந்தி மண்டபம் இலங்கையின் சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் கலிகமுவ பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிந்தெனிய மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ளதுசென்ற வருடம் 17/01/2021ஆம் ஆண்டு திறப்புவிழா கண்டதுஇவ்வருடம் சிறந்த மாற்றங்களுடன் வன்னி ஹோப் ( VANNI HOPE) நிறுவனத்தின் நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது இந்த நிகழ்வு.(16/01/2022) ஒரு சேவை பயன் தரக்கூடியதாக அமைந்தால் அதுதான் உண்மையான சேவையாகும் உன்னதமான சேவையாகவும் இருக்க முடியும்அதற்கு

 முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணம் அமைந்ததுதான் பிரசாந்தி மண்டபம்இதன் செயற்திட்டங்கள் முறையே கல்விஅறநெறிக் கல்விகலை ,கலாச்சார மேம்பாடுவிழிப்புணர்வு நிகழ்வுகள்பண்டிகைகள்விழாக்கள்,பூஜைவழிபாடுகள் மருத்துவ நலன் திட்டம் , என பல்வேறு அம்சங்களை மிக சிறப்பாக மேற்கொள்ள சிறந்த இடமாக திகழ்கிறது.இந்த ஒரு வருட காலத்திற்குள் வன்னி ஹோப் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள்மின்சார வசதிசத்துணவு திட்டம்பாதுகாப்பு கதவு யன்னல்கள்கணினி வசதிகள்தண்ணீர் வசதிகள் என பல்வேறு வகையில் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி சிறுவர்களை உற்சாகப்படுத்தி சிறுவர்கள் ஊடாக பல மாற்றங்களை கண்டது வன்னி ஹோப் நிறுவனம் இந்த மாற்றத்திற்கு காரணமாக முகம் தெரியாமல் கருணை உள்ளத்துடன் மறைமுகமாக செயற்படும் அத்தனை இறை உள்ளங்களுக்கும் தலை வணங்கி நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்நன்றி நன்றி நன்றி 

எமது இதயம் கனிந்த நன்றிகள் பல 🙏

வன்னி ஹோப்

No comments: