Tuesday, January 18, 2022 - 11:18am
- இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி
குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிவதாக ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் ஒற்றுமையாக தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக நேற்று (17) இரவு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
பல நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து அவர்களது இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியும் தங்களது விவாகரத்து குறித்து அறிவித்துள்ளது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது எங்கள் பாதை தனித்தனியாக பிரிய வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கான நேரத்திற்காக நானும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுத்து, இந்த சூழலை தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி. என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
(திருச்சி நிருபர் - எம்.கே. ஷாகுல் ஹமீது) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment