.
எதிர்வரும் 30ம் திகதி சிட்னியில் வெளியிட இருக்கும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் அவள் ஒரு பூங்கொத்து சிறுகதைகள் பற்றி விடியல் சஞ்சிகையில் வெளிவந்த சிறு பதிவு.
’அவள் ஒரு பூங்கொத்து’ (சிறுகதைகள்)
வெளியீடு: சிந்தன் புக்ஸ், திவான் சாகிப் தோட்டம்
டி.டி.கெ சாலை, இராயபேட்டை, சென்னை 600 014
தொடர்புக்கு 91 9445123104
அவுஸ்திரேலியாவில்
வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த தேவகி கருணாகரன் எழுதிய சிறுகதை என்ற வடிவத்தை தன்
படைப்புகளால் வெளிபடுத்தியுள்ளார் எனபதற்கு இந்தச் சிறுகதைத் தொகுப்பு சாட்சி.
குடும்ப பிரச்சனைகளை. மிக நுட்பமாகத் தன் மொழிநடையில் மிகவும்
இயல்பாக மிக நுற்பமாக தன் மொழிநடையில் மிகவும் இயல்பாக எழுதியுள்ளார். இவை அணைத்தும்
கணையாழி, கலைமகள், கல்கி, ஞானம், காற்றுவெளி, ஜீவநதி, வீரகேசரி, தினக்குரல் போன்ற சஞ்சிகைகளிலும்
பத்திரிகைகளிலும் பிரசுரமானவை என்பதால், அதன் தரத்திற்கு உத்திரவாதம் கிடைக்கின்றது.
முத்தாய்ப்பாக பெரும்பாலான படைப்புகள் போட்டிகளில் பரிசு
பெற்றவை. இத்தொகுப்பில், அவள் ஒரு பூங்கொத்து, காலத்தால் கரையாத நினைவுகள், நாடோடிகள்
மிகச் சிறப்பான கதைகள். புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் இந்தக் கதைகளைப் படித்து
இப்படித்தான் ஒரு சிறுகதை வெளிப்பட வேண்டும் என்று கற்றுக் கொள்ள ஏராளமான செய்திகள்
தொகுப்பில் உள்ளன.
சிறந்த சிறுகதைத தொகுப்புக்கான பல விருதுகளை தேவகி கருணாகரன்
இந்த வருடத்தில் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்படைப்புகளில் வெளிப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
விடியல்
சஞ்சிகை, புதுவை ரா. ரஜனி
நூல் ஆசிரியர்,
தேவகி கருணாகரன்
thevakiek@hotmail.com
No comments:
Post a Comment