ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 


 

   ……………‘சிவஞானச் சுடர்பல்வைத்திய கலாநிதி

                             பாரதி இளமுருகனார்




பச்சைத்தாள் தாளாகப் பணங்கறக்க எத்தனையோ

பரிகாரப் பரிந்துரைகள்! சிறுதெய்வப் பெருவேள்வி! அச்சமூட்ட ஆள்களுண்டு! ஆட்டிப்படைப் போருமுண்டு! அத்தனையம் செய்திழைத்து ஏமாந்தோர் கணக்கில்லை!

 

விதம்விதமாய்த் துன்பங்கள் உபாதைதரும் வேளைகளில்

வேண்டாத  பரிகாரம் செயவைப்போர் பலருண்டு! மதமென்ற  பெயர்கொண்டு மனதிற்பயம் வரவைத்து

வகைவகையாய் வழிசொல்லி வலைவிரிப்வோர் மலிந்திட்டார்!

 

மிச்சமீதப் பழவினையைப் பரிகாரம்  விலக்கிடுமோ?

மிகுத்துவரும் வினைகளையும் அனுபவித்தே தீர்க்கணுமே!  

இச்சையுடன் கோள்களையே  இயக்குஞ்சிவன் அருளிருக்க

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

போலிச்சா மியாய்வளர்ந்து புடமிட்ட கடவுள்எனப்

பொய்ப்பித்த லாட்டஞ்செயும் போலிகளுக் கோர்கூட்டம்!

சூலினின்று பிறந்தவர்கள் தூயகட வுளாகாரே!

சுத்தமூட நம்பிக்கை? துளிகூட மாறாதோ?

இதமாகப் பரிகாரம் பலசெய்து தோற்றவர்காள்!.

இன்றுநன்றாய் அ றிந்திடுவீர்! இறைவனைமெய்த் தியானத்தால்

இதயத்தில் உணர்ந்திட்டால் இருமைக்கும் வழிபிறக்கும்  ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

 


 

 


 

 

 



பரமசிவா கண்திறவாய்!..............

 

சூதுவாது தெரியாத சைவர்களை ஏமாற்றும்

சும்மாதான் தோன்றிவந்த சுத்தபோலிக் கடவுளரைப்

பாதுகாக்கக் காவலரும் குண்டரொடு அரசுமுண்டு

பரமசிவா இந்நிலைக்குப் பரிகாரம் ஏதுமுண்டோ?

 

பக்குவத்தை அடைந்திடாது பரிதவிக்குஞ் சைவர்களைப் பயத்தினாலே பரிகாரம் செயவிழையும் பக்தர்களைத்

தக்கநல்ல வழிகாட்டித் தடுத்தாட்கௌ மாட்டாயோ? 

தடக்கிவிழு வோர்மூட நம்பிக்கை மாற்றாயோ?

 

கோளையெலாம் படைத்திட்ட குருபரனை மறந்துவிட்டுக்

குறையிரந்து சிறுதெய்வ முன்றலிலே கூடிநின்று

வேளைக்கே நேர்ந்துவைத்து விழைந்த’’கிடாய் பலிசெய்யும்

வேடிக்கை வழிபாட்டை வேரோடு ஒழித்திடாயோ?


சிறுகுடிலில் எளிமைபூண்(டு) உலகைமிக உய்வித்த

சிவயோகர் சிவப்பணிபோல் தொண்டுசெய விழித்தெழுந்து

பெறுசெல்வம் மேற்புரழும் ஆதீன மெலாங்கூடிப்

பெருஞ்சேவை யெனமூட நம்பிக்கை போக்கட்டும்!.

 












உண்மைதனை உணர்வீர்!.....

 

இன்பதுன்பம் வருவதெல்லாம் நன்மைதீமை வினைப்பயனே!.

இறைவன்தாள் தனையிறுகப் பற்றித்திரு முறைபாடி

நன்றிதென்றே இருவினையின் ஒப்புநிலை பேணிவர

நாளடைவிற் பிறப்பொழிய நனிசிறக்கும் பேரின்பம்!.


No comments: