தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022


பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட  தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 34வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிரு
ந்தபோதும்
 இடர்மிகுந்த நெடிய மிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
 
அவுஸ்திரேலியாவில் தமிழ்த் தேசி விடுதலைப்பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்து உயிர்நீத்து மிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் அதிஉயர்விருதான மாமனிதர் விருது வழங்கிக்கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களான தில்லை ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் எலியேசர் நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் ஆகியோர்களையும் இந்நாளில் நினைவுகூருவது இந்நினைவுநாளின்
 சிறப்பம்சமாகும்.
 மேலும் ஆண்டு தோறும் பள்ளிமாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் அன்னை பூபதி நினைவுதின பொதுஅறிவுப் போட்டி இவ்வாண்டும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதுபொதுஅறிவுப் போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் குழுவாகவோ தனிநபர்களாகவோ இணைந்துகொள்ள இருப்பின் 20 / 04 / 2022 இற்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பதுநாட்கள் தியாகவேள்வியில் ன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும்   கலந்துகொள்ளு-மாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


 

இடம்St John's Catholic Church, 52 Yarra St, Heidelberg VIC 3084.

 

காலம்24-04-2022. ஞாயிற்றுக்கிழமை.

 

நேரம்மாலை 6.00 மணிமுதல் 8.00மணிவரை.

 

மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.

------------------------------------

சிட்னி நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022 அறிவித்தல்

காலம்: 10-04-2022 Sunday 4pm

நிகழ்விடம்: Reg Byrne Community Centre, Fyall Ave, Wentworthville, NSW 2145
தொடர்புகளுக்கு: 0424 757 814, 0401 842 780
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - சிட்னி

--
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com
இணையத்தளம்: https://www.tccau.com/ 

No comments: