இன்று (01.08.2021) எங்கள் ஈழத்துச் சமூகத்தின் முது பெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் (குப்பிழான் ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்கள் தனது 75 வது அகவையில் காலடி வைக்கின்றார்.
ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, பத்தி எழுத்துகள் என்று பன்முகப்பட்ட தளத்தில் தன் எழுத்துகளைத் தொடர்ந்து வருகின்றார்.
ஆகஸ்ட் 1, 1946 ஆம் ஆண்டு ஈழத்தின் குப்பிழான், சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த இவர் தன் கல்வியை குப்பிழான் விக்னேஸ்வரா வித்தியாசாலை, புன்னாலைக்கட்டுவன் மெ.மி.ஆங்கிலப்பாடசாலை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கற்று இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகவும் ஆளானார்.
உயர்தர வகுப்புகளில் பொருளியல், தமிழ் ஆகிய பாடங்களிலும், இடை நிலை வகுப்புகளில் சமூகக் கல்வி, சமய நெறி ஆகிய பாடங்களிலும் சேவையாற்றியவர்.
கலாபூஷணம் விருது, ஆளுநர் விருது, பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சங்கச் சான்றோன் விருது உள்ளிட்ட விருது அங்கீகாரங்களைக் கொண்டவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும், பிரபஞ்ச சுருதி என்ற கவிதைத் தொகுதியையும், அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள் என்ற பத்தி எழுத்து நூலையும் வெளியிட்டுள்ளார். (ஜீவநதி பெப்ரவரி 2019)
எழுத்தாளர் குந்தவை
இளைஞர்களின் மன அவசங்கள், அவர்களால் வெளிப்படுத்தி உணர்த்திக் காட்ட முடியாத சோகங்கள், எதிர்பார்ப்புகள் இவற் றிஞல் அவர்களிடையே எழும் நடைமுறைக்கு ஒத்துப்போகாத பிடிப்பற்ற தன்மை, இவற்றை அழகுணர்ச்சியுடன் சித்தரிக்கும்
கலைஞர்.
எழுத்தாளர் அ.யேசுராசா
இவரது பாத்திரங்கள் எழுத்தாளனின் எவ்வித தலையீடுமின்றி தங்களைத் தாங்களே இயக்க வைக்கின்றன.
கலையுலகின் நவீன திரைப்படங்களின் தாக்கத்தை சண்முக னின் பிற்பட்ட காலக் கதைகளில் காணலாம். 'பளிச்', பளிச்சென
சணமுகன் கதையை கடத்திச் செல்லும் பாணி அலாதியானது.
எழுத்தாளர் மு. புஸ்பராஜன்
சண்முகன் என்ற பெயர் குறிப்பிடப்படும் போதெல்லாம் இவரது அழகிய, அலாதியான அந்த நடை கூடவே எழுவதைத் தவிர்க்க முடியாது. இவர் கதைகளில் சங்கீதத்தின் இனிய ஓசை பல்வேறு விதங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
எழுத்தாளர் அசோகமித்திரன்
இன்ப வேதனையின் இழையொன்று எல்லாக் கதைகளிலும் தென்படுகிறது.
ஈழத்து ஆவணகத்தில் குப்பிழான் ஐ.சண்முகன் அவர்களது வாய்மொழி வரலாறு
ஈழத்து இணையத்தில் இவரது படைப்புகளை வாசிக்க
குப்பிழான் ஐ.சண்முகன் பேட்டி (பேட்டி கண்டவர் வெற்றி துஷ்யந்தன்)
ஜீவநதி பெப்ரவரி 2019 (பக்கம் 59)
கோடுகளும் கோலங்களும்
சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கானா பிரபா
No comments:
Post a Comment