2021 அவுஸ்திரேலியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றிய விளக்கம் - மது எமில்

 .

2016 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்  110,917 பேர் இலங்கையில் பிறந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அதே வேளை  5213 (4.7%) இலங்கை தமிழர்கள்  மட்டும் தான் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள் என்பதும் பதிவாயிருக்கிறது. இது யார் விட்ட தவறு என்று பார்ப்போமானால் எமது பூர்வீகம் "தமிழ்" என்று மட்டும் எழுதியவர்களும், அதற்கான வழியை காட்டிவயர்களும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். 


" TAMIL" என்று மட்டும் எழுதுவோமானால் அந்த எண்ணிக்கை முழுவதும் nfd எனப்படும் no further definition ,(பூர்வீகம் இல்லாதவர்கள்) என்கின்ற எண்ணிக்கைக்குள் கலந்து மறைந்து விடும்  என்பதே உண்மை. பின்னர் அதனை வேறுபடுத்தி தரவு படுத்த முடியாது. நாங்கள் தமிழால் இணைந்து இருக்கிறோம் ஆனால் எங்கள் பூர்வீகம் இலங்கை தமிழ் என்பதற்கும் முக்கியம் கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எமக்குண்டு. 

 அவுஸ்திரேலியாவில் எமது சமூகத்துக்கு தேவையான மொழி சார்ந்த மானியங்கள் அனைத்து க்கும் நாங்கள் கொடுக்கும் மொழி சார்ந்த தரவுகள் தாராளமாய் போதுமானது என்பது எல்லோரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் எமது தமிழ் பாடசாலைகளும், தமிழ் வானொலி நிலையங்களும்,  மொழிபெயர்ப்பாளர்களும், மொழி பெயர்ப்பு சேவைகளும், முதியோர் இல்லங்களும், பராமரிப்புகளும் , குழந்தை பராமரிப்பும், அவுஸ்திரேலியாவில் தேசிய ரீதியில் தாராளமாக  இயங்கி வருகின்றன. # எமது பூர்வீகம் தமிழ் என்று எழுதுவதினால் மட்டும்  அல்ல. 
இங்கே தரப்பட்ட தரவுகளின் படி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையில் பிறந்தவர்களில் 27,348 பேர் தமிழ் பேசுகிறார்கள் என்றால் எப்படி 5213 பேர் மட்டுமே இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்களாக இருக்க முடியும். இங்கே தான் நாம் ஒரு பெரிய வரலாற்று தவறை செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

தமிழ் என்று  மட்டும்  எழுதி எமது பூர்வீகத்ததை குறைத்து காட்டுவதனால் அவுஸ்திரேலியாவில் எமது வரலாற்றை / எங்கள் சரித்திரத்தை / எங்கள் பூர்வீகத்ததை  காப்பாற்ற முடியுமா?

நீங்களும் எங்கட இலங்கை தமிழ் பூர்வீகம் சொல்ல தயங்குகிறீர்களா?
இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் உங்கள் பேரக் குழந்தைகள் கேட்பார்கள் உங்கள் பூர்வீகம் என்ன என்று அப்போது காலம் பதில் சொல்லும் - இது தாத்தா, பாட்டி விட்ட தவறு என்று. அப்போது இன்றைய கணக்கெடுப்பு ஆய்வினை மாற்றி எழுத முடியாது. 

எனவே இப்போதே சொந்தமாக சிந்திப்போம்.... செயல்படுவோம் மற்றவர்களுக்கும் உண்மையை எடுத்துச் செல்வோம்.

எங்கள் மொழி - தமிழ் (TAMIL)
எங்கள் பூர்வீகம்  - இலங்கை தமிழ் ( Sri Lankan Tamil)

பூர்வீகம் என்பது, எந்த நாட்டில் எந்த சமூகத்துக்கு நாங்கள் சொந்தமானவர்கள் என்றே பொருள்படும்.  தமிழ் என்பது எங்கள் பூர்வீகம் அல்ல. 

Ancestry

What is the person’s ancestry?

(Q22 in the paper form, online form)

Why we collect this information

Ancestry can be related to the place a person or their parents or grandparents were born or the cultural group they most identify with. For example, a person may have been born in Australia, but they have Papua New Guinean ancestry. This helps us understand our diverse culture.

How to answer this question

Provide up to two ancestries only.

1st Ancestry  - Father's  side
2nd Ancestry - Mother's side

எதிர் வரும் ஆகஸ்ட் 10 அவுஸ்திரேலியாவில்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உங்கள் பெயர், வயது, மொழி, பிறந்த நாடு  பூர்வீகம் போன்ற கேள்விகளுக்கான பதில்கள் உங்கள் பிறப்பு அத்தாட்சி பத்திரத்திலேயே இருக்கிறது. 
நீங்கள் வழங்கும் தகவல்கள் உண்மையானவை என்பதனை உறுதி படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.  

மேலதிக தகவல்கள் ABS இணைய தளத்தில் எங்கள் தமிழ் மொழியிலும் விபரமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.


No comments: