17ஆம் திகதி நவம்பர் மாதம் 1920 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டதாரியாகி டாக்டராக வேண்டும் என கனவு கண்டவர பின்பு நடிகரானார் நடிகர் ஜெமினி . இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன கே பாலச்சந்தர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் என பல இயக்குனர்களின் விருப்புக்குரிய நடிகராக இவர் விளங்கினார்.
நவம்பர் 17ஆம் திகதி நூற்றாண்டு காணும் ஜெமினி எழுபதாம் ஆண்டு நடித்த படம்தான் ஈஸ்ட்மென் கலரில் உருவான சங்கமம். ஜெமினியின் 125ஆவது படமான இதில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். கே ஆர் விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா என இரண்டு ஜோடிகள். இவர்களுடன் வீரப்பா , நாகேஷ், கீதாஞ்சலி, எம் கே முஸ்தபா, கே டி சந்தானம் ஆகியோரும் நடித்தனர். புதிய பறவை வெற்றிப் படத்தின் இயக்குனரான தாதா மிராசி படத்தை இயக்கினார். வசனங்களை ரவீந்தர் எழுதியிருந்தார்.
வழக்கமான ஆள் மாராடடத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதையில் ஜெமினி விஜயா, நிர்மலா மூவருமே படம் முழுவதும் குழப்பத்துடநும் கலக்கத்துடனு மேயே காணப்படுகிறார்கள். நல்லவேளை நாகேஷ் இருப்பதால் படம் தொய்வில்லாமல் நகர்கிறது. வீரப்பா இருந்தும் அவரின் அட்டகாசம் குறைவுதான்.
படத்திற்கான பிளஸ் பாயிண்ட் அதன் வெளிப்புற படப்பிடிப்பு கே எஸ் பிரசாத்தின் ஒளிப்பதிவு வண்ணமயமாக காட்சிகளை பதிவு செய்தது. அதுமட்டுமன்றி மூட்டில் காட்சிகளை அருமையாக படமாக்கி இருந்தார் பிரசாத். சந்தோஷ் சிவன், பிசி ஸ்ரீராம் போன்றோரின் முன்னோடியாக இவரை இந்த விஷயத்தில் மதிக்கலாம் படத்தை தூக்கிப் பிடிப்பது அதில் இடம்பெற்ற பாடல்கள் தான் மெல்லிசை மன்னரான டி கே ராமமூர்த்தி, விஸ்வநாதனிடம் இருந்து பிரிந்த பின்னர் தானும் திறமைசாலி தான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் கண்ணதாசனின் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார்.
இவரின் இசையில் தன்னம் தனியாக நான் வந்தபோது, கண்ணனிடம் கேட்டிருந்தேன், வண்ண பூ போட்ட சேலை ஆகிய பாடல்கள் இனிமையாக ஒலித்தன நூற்றாண்டு விழா காணும் ஜெமினி கணேசனின் புகழ் அவர் நடித்த பல படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக சங்கமமாகி உள்ளன
No comments:
Post a Comment