ஸ்வீட் சிக்ஸ்ட்டி தெய்வப்பிறவி - ச சுந்தரதாஸ்

.


அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1960ம் ஆண்டு வெளிவந்த குடும்பச்சித்திரம் தெய்வப்பிறவி. பிரபல இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு இருவரும் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்கள் .
கமால் பிரதர்ஸ் சார்பில் கமால்தீன் ஏ வீ எம்   பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார்.

சிவாஜி , பத்மினி ,எஸ் எஸ் ஆர் , எம் என் ராஜம் , தங்கவேலு, சாரங்கபாணி , தாம்பரம் லலிதா , எம் சரோஜா, ஏ கருணாநிதி என்று ஏராளமானோர் நடிப்பில் இப்படம் உருவாகியிருந்தது.

கட்டட  மேஸ்திரியாக இதில் சிவாஜியும் , சித்தாளாக   பத்மினியும் நடித்திருந்தனர் . மேஸ்திரிக்கும் சித்தாளுக்கும் இடையே மலரும் காதல் திருமணத்தில் முடிகிறது . மேஸ்திரியின் தம்பியை வளர்க்கும் பொறுப்பை சித்தாளும் , சித்தாளின் தம்பியை வளர்க்கும் பொறுப்பை  மேஸ்திரியும் ஏற்றுக் கொள்கின்றனர் .
கால கதியில் மேஸ்திரியின் வருமானம் உயர்ந்து செல்வந்தராகிறார் . அந்தஸ்தும் உயர்கிறது . இளைஞர்களாக வளரும் மேஸ்திரியின் தம்பியும் , சித்தாளின் தம்பியும் ஒரே பெண்ணை விரும்புகின்றனர் . அதேசமயம் எங்கிருந்தோ வரும் மேஸ்திரியின் உறவான ஒரு தாயும் அவள் மகளும் இவர்கள் குடும்பத்திட்குள் அடைக்கலம் புகுந்து விடுகின்றார்கள் , இதன் காரணமாக தேவையில்லாத சந்தேகமும் சச்சரவும் உருவாகிறது .






வங்காளத்தில் வெளிவந்த கதையை தமிழில் படமாக்கினார்கள் . குடும்பக் கதைகளுக்கு வசனம் எழுதுவதில் திறமை வாய்ந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்திற்குத்தான்  முதல் முறையாக வசனம் எழுதினார். அவருடைய குடும்பப்பாங்கான வசனங்களை பேச அருமையான நடிகர்களும் அமைந்தர்கள்.

குறிப்பாக சிவாஜி , பத்மினி ,எஸ் எஸ் ஆர் மூவரும் தங்கள் பண்பட் ட நடிப்பால் மட்டுமின்றி  கே எஸ் ஜி யின் வசனங்களையும் பேசி ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் எஸ் எஸ் ஆரை குடையால் பத்மினி அடிக்கும் காட்சி மிகத் தத்ரூபமாகவும் உணர்ச்சிகரமாகவும் அமைந்தது . பத்மினியின் இளமையும் சாந்தமும் அழகும் இப்படத்தில் வெளிப்படடன .


படம் உருவானபோது படத்தைப் பார்த்த ஏ வி எம் செட்டியார் படம் மிகவும் சீரியசாக இருப்பதாக கருதி ஒரு நாள் இரவு தங்கவேலுவின் வீட்டிற்கு சென்று நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து தரும் படி வேண்டினார் . பிஸி  நடிகராக அப்போது திகழ்ந்த தங்கவேலுவும் ஏ வி எம்மின் வேண்டுகோளைத் தடடாமல் தன் மனைவி சரோயாவுடன்  நடித்துக் கொடுத்தார் .


இவர்களுடைய நகைச் சுவை படத்தின் ஒடடத்திற்கு மிகவும் உதவியது . இதில் தங்கவேலு செய்யும் குசேலர் சரித்திரம்  கதா காலாடசேபம் இன்றும் பிரசித்தம். அது மட்டுமன்றி அவரும் ராமாராவும்  இடம்பெறும் நகைச்சுவை காட்சியும் காலம் கடந்தும் நிற்கிறது .  இதில் நடித்ததில் மூலம் ராமராவ் பேசிய ஐயா தெரியாதையா அவரை ஐயா தெரியாதையா ராமராவ் ஆக்கியது. தன்னால் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு மட்டுமன்றி நகைச் சுவைக் காட்சிகளுக்கும் எழுத முடியுமென கே எஸ் கோபாலகிருஷ்ணன் நிரூபித்தார் .

ஏ வி எம் மின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஆர் சுதர்சனம் இப் படத்திற்கு இசையமைத்திருந்தார். அன்பாலே தேடிய என் அழகுச் செல்வம், தாரா தாரா வந்தாரா , தன்னைத் தானே நம்பாதது  சந்தேகம் மற்றும் கடடடத்திற்கு மனைப் பொருத்தம் அவசியம் போன்ற பாடல்கள் இன்றுவரை  ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கிறது.

படத்தை மிகவும் நேர்த்தியாக எஸ் மாருதிராவ்  ஒளிப்பதிவு செய்திருந்தார் . அவருக்கு இந்த ஆண்டு நூற்ராண்டாகும் . நல்ல கதை அதற்கேற்ற வசனம் , நடிப்பு , டைரக்ஸன்  எல்லாம் அமைந்தால் படம் வெற்றிபெறும்  என்பதை நிறுபிப்பதுபோல்   தெய்வப்பிறவி நூறு நாட்கள் ஓடி வெற்றிகண்டது .

இதே படத்தை இந்தியில் தயாரிக்க ஏ வி எம் முயன்றபோது சிவாஜி தடுத்தார் . தன்னையும் பத்மினி ,எஸ் எஸ் ஆர் போல் இந்தியில் நடிக்க ஆள் இல்லையென காரணம் கூறினார் . ஆனால் பிந்தியா என்ற பெயரில் இந்தியில் தயாரான படம் சிவாஜி சொன்னதுபோல் தோல்வி கண்டது . தமிழன்டா .





No comments: